"திராவிட ஸ்டாக்கிஸ்ட்டுகள்".. ஆளுநர் ரவிகிட்ட திமுகவின் வம்பு.. பொறிந்து தள்ளிய டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி நீட்விவகாரத்தில் திமுகவை விமர்சித்துள்ளார்
சென்னை: தமிழகத்திற்கு நீட் விலக்கு என்பது இயலவே இயலாத காரியம்.. அது முடிந்து போன விசயம்... ஆளுநரோடு மோதல் போக்கு என்பது வெளிப்படையாக தெரியாவிட்டாலும், அது அரசு இயந்திரத்தை முற்றாக முடக்கி போடக் கூடும். அதிகாரிகள், அமைச்சர்கள், முதலமைச்சர் என அனைவரது நடவடிக்கைகளும் கிரீஸ் இல்லாத வண்டியை போல ஜாம் ஆகும்" என்று டாக்டர் கிருஷ்ணசாமி காட்டமாக கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: "தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசு நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்வு ரத்து குறித்த தீர்மானம், தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருக்கே திருப்பி அனுப்பி விடப்பட்டதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சமூகநீதிக் கொம்பர்கள், ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களை மார்தட்டிக் கொள்ளும் திராவிட ஸ்டாக்கிஸ்ட்டுகள், 1-ஆம் தேதியே ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதா குறித்து ஏன் வாய்திறக்கவில்லை? என்று தெரியவில்லை.

ஆளுநர் ரவி
இவர்களிடம் வெளிப்படைத் தன்மை உண்மையிலேயே இருந்திருக்குமேயானால், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட அந்த நீட் மசோதா குறித்து தமிழக மக்களுக்கு இவர்கள் தெரிவித்து இருக்க வேண்டும்.
இதில் கூட ஆளுநர் ஜனநாயக பூர்வமாக நடந்திருக்கிறார். அரசியல் காரணங்களுக்காக வெளியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி, அதை தொடர்ந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் ஆகியவற்றை ஆளுநர் அவசர கோலத்தில் பரிசீலனை செய்ய இயலாது.

வீண் வம்பு
திமுக தொடர்ந்து இதில் வீண் வம்பு செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது தெரியவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களுக்கும் ஆளுநரும் ஜனாதிபதியும் ஒப்புதல் அளிக்க வேண்டுமென இவர்கள் கருதக்கூடாது. அப்படி கருதுவார்களேயானால், 1974-ஆம் ஆண்டு இதே தமிழ்நாடு சட்டமன்றத்தில் இவர்கள் ஆட்சியில் 'மாநில சுயாட்சி' குறித்து நிறைவேற்றிய தீர்மானத்தின் கதி என்ன? கடந்த 47 ஆண்டு காலத்தில் அதை நிறைவேற்றுவதற்கு இவர்கள் எடுத்த முயற்சி என்ன? என்பதை இவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்.

தமிழக பாடத்திட்டம்
இனியாவது திமுக தன் இயலாமையை முழுமையாக ஒப்புக்கொண்டு தமிழகப் பாடத்திட்டத்திலும் புதிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். மாணவர்களையும் அதை எதிர்கொள்ள தயார் செய்திட வேண்டும்.
இவர்கள் போட்ட தூபத்தால் ஏற்கெனவே 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுடைய இன்னுயிரை நீத்ததாக இவர்களே சொல்கிறார்கள். அரசியல் லாபத்திற்காக எந்த பாவத்திற்கும் பழிக்கும் இவர்கள் அஞ்சியதில்லை தான்.

ஆளுநர் ரவி
ஆனால் நடைபெற வாய்ப்பு இல்லாத ஒன்றைத் திருப்பித் திருப்பி ஏழை, எளிய மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து தவறான நம்பிக்கையூட்டுவது மிகப்பெரிய குற்றம் ஆகும். தமிழகத்திற்கு நீட் விலக்கு என்பது இயலவே இயலாத காரியம். அது முடிந்து போன விசயம்... ஆளுநரோடு மோதல் போக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அது அரசு இயந்திரத்தை முற்றாக முடக்கி போடக் கூடும். அதிகாரிகள், அமைச்சர்கள், முதலமைச்சர் என அனைவரது நடவடிக்கைகளும் கிரீஸ் இல்லாத வண்டியை போல ஜாம் ஆகும்" என்று டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
-
நீட் வினாத்தாளுடன் தூத்துக்குடி சென்ற வாகனம்.. நடு வழியில் நின்றதால் பரபரப்பு.. இரவில் நடந்தது என்ன? -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications