சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் திருவள்ளுவருக்கு தலையில் குடுமி, பூனூல்- டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தில் திருவள்ளுவருக்கு குடுமி, பூனூல் போடப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளதாவது:

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படியான எட்டாம் வகுப்பு இந்தி பாடநூலில் திருவள்ளுவரை தலையில் குடுமி வைத்து பூனூல் அணிந்தவராக அடையாளப்படுத்தியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை ஒரு தரப்புக்கு சொந்தமானவராக சிறுமைப்படுத்தக்கூடாது!

Dr Ramadoss condemns Portrait of Thiruvalluvar in saffron robes

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். (குறள் 280, கூடாவொழுக்கம்). பொருள்:உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டாம். இப்படி கூறிய வள்ளுவரை அதற்கு எதிராக சித்தரிப்பது குரூரமானது!

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார். மேலும் சொல்லிக் கொண்டே இருந்தோம்... இப்போது நடந்து விட்டது. பெருந்துறை மருத்துவக் கல்லூரி கட்டணம் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி கட்டணமும் குறைக்கப்பட்டது. மிக்க மகிழ்ச்சி! எனவும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
PMK Founder Dr Ramadoss has condemned that the Portrait of Thiruvalluvar in saffron robes in CBSE Text Book.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X