சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive:புறாக்களின் எச்சத்தால் நுரையீரல் பாதிப்பா?.. டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்தின் விளக்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டால் புறா எச்சம் போன்றவற்றால் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஒரு பக்கம் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் தற்போது ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் எனும் நோய் குறித்த பேச்சும் அடிபடுகிறது.

கேட்பதற்கே புதிதாக இருக்கிறது. மேலும் இது புறாவின் எச்சத்தால் வருவதாகவும் சொல்லப்படுகிறது. இது நுரையீரலில் நோய் தொற்றை ஏற்படுத்தும்.

ட்விஸ்ட் வைக்கும் கொரோனா! நேற்றை விட அதிகரித்த தினசரி பாதிப்பு! ஒரே நாளில் இத்தனை பேர் பலியா? ட்விஸ்ட் வைக்கும் கொரோனா! நேற்றை விட அதிகரித்த தினசரி பாதிப்பு! ஒரே நாளில் இத்தனை பேர் பலியா?

புறாக்கள்

புறாக்கள்

மணல் மற்றும் புறாக்கள், வவ்வால்களின் எச்சங்கள் மூலம் பூஞ்சையினால் ஏற்படும் பாதிப்பு ஆகும். மத்திய , தென் கிழக்கு நாடுகள், மத்திய அட்லாண்டிக் நாடுகளில் இந்த பூஞ்சைகள் அதிகம் வளர்கின்றன. இந்த ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் வியாதி வந்தால் சிகிச்சை தேவைப்படாது. எனினும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மிகப் பெரிய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

காய்ச்சல்

காய்ச்சல்

இந்த நோய் வளர்ந்து உடல் முழுவதும் பரவி விடும். இந்த நோய் பாதித்தால் காய்ச்சல், வறட்டு இருமல், நெஞ்சு வலி, மூட்டு வலி, சிவப்பாக உள்ளங்கால்களில் வீங்குதல் ஆகும். இந்த நோயே மிகவும் மோசமாக பாதித்தால் அதிகளவு வியர்க்கும், சுவாசிக்க முடியாது, இருமும் போது ரத்தம் வரும். இந்த பூஞ்சை நோய் பாதித்த ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது.

டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்

டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்

இந்த நோய் குறித்து டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்திடம் ஒன் இந்தியா தமிழ் சார்பில் பேசினோம். அப்போது அவர் கூறுகையில் புறா, வவ்வாலின் எச்சத்தால் இந்த நோய் ஏற்படுகிறது. இது மிகவும் அரிதான நோய். இந்த பூஞ்சை பாதித்த எந்த பறவையாக இருந்தாலும் அதன் எச்சங்களின் மூலம் மற்றவர்களுக்கு பரவலாம்.

தண்ணீர் கொடுப்பது

தண்ணீர் கொடுப்பது

புறாக்களுக்கு உணவு வைத்துவிட்டு வருவது, தண்ணீர் கொடுப்பது போன்றவைகளை மட்டும் செய்ய வேண்டும். அதன் எச்சங்களின் அருகே செல்வது , அதை சுத்தம் செய்வது போன்றவற்றை செய்யும் போது இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் என்பது மிகவும் அரிதான நோய், எல்லோருக்கும் ஏற்படும் என்று சொல்ல முடியாது. மேலும் ஏற்கெனவே ஏதாவது ஒரு நோய் இருந்து அதனுடன் இந்த பூஞ்சை நோயும் சேர்ந்து கொண்டால் பிரச்சினை ஏற்படும். புறா, வவ்வால் எச்சங்களிலிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த பூஞ்சை பாதித்த பறவைகளுக்கு மட்டுமே இந்த நோய் இருக்கும் என்றார்.

English summary
Dr Shanthi Raveendranath says about histoplasmosis and its effects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X