திராவிட மாடலை "எதிர்ப்பவர்களின்" புத்தி இதுதான்! கருணாநிதி நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: "எல்லார்க்கும் எல்லாம் வாய்த்துவிடக் கூடாது, போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள் தான் திராவிட மாடலை எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்" என்று தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த காலப் பெருமிதங்களோடு நிகழ்காலச் செயல்பாடுகளை இணைத்தவர் கருணாநிதி. நிகழ்காலச் செயல்பாடுகளோடு எதிர்கால இலக்குகளைத் தீர்மானித்தவர் கருணாநிதி. இன்றைக்கு திராவிட மாடல் என்ற தத்துவத்தோடு ஒரு ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம் என்றால் அந்த திராவிடவியல் நிர்வாகக் கோட்பாட்டுக்கு அடித்தளம் அமைத்தவர் கருணாநிதி.

எதிர்ப்பவர்கள் யார்?: சமூக நீதி - சமத்துவம் - சகோதரத்துவம் - இன உரிமை - மொழிப்பற்று - மாநில சுயாட்சி ஆகியவைகளை உள்ளடக்கிய உன்னதமான கோட்பாடு தான் திராவிடக் கோட்பாடு ஆகும். எல்லார்க்கும் எல்லாம் என்பதே அதனுடைய உள்ளடக்கம் ஆகும். எல்லார்க்கும் எல்லாம் வாய்த்துவிடக் கூடாது, போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள் தான் திராவிட மாடலை எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

திராவிட மாடல்: படிப்பு மறுக்கப்பட்ட சமூகத்துக்கு படிப்பைக் கொடு! கல்லூரிக் கல்வியை அடையமுடியாதவர்க்கு கல்லூரிக்கல்வியைக் கொடு! ஏழை, எளிய விளம்பு நிலை மக்களின் சமூகப் பங்களிப்பை அதிகப்படுத்து! வர்ணம், சனாதனத்தின் பேரால் ஒதுக்கப்படுபவர்களுக்கு அந்த உரிமையைப் பெற்றுத்தா! ஆணுக்கு நிகர் பெண்! பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கு! பெருந்தொழில்கள் மட்டுமல்ல, சிறுதொழில்களும் வளர்த்தெடு! நகர்ப்புற பகுதிகள் மட்டுமல்ல கிராமப்புறங்களும் செழிக்க வேண்டும்!அனைத்து தொழில்களும் சிறக்க வேண்டும்.அனைத்து மாவட்டங்களும் வளம் பெற வேண்டும்.மாநிலத்தின் வளம் என்பது மாநிலத்து மக்களின் சிந்தனை வளர்ச்சியின் மூலமாகத் தெரிய வேண்டும்!- இதுதான் திராவிட மாடல் வளர்ச்சியாகும்.

நம்பிக்கை: இதுதான் தமிழ்நாடு என்ற மாநிலத்தை இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக வளர்ப்படுத்தப் போகிறது. நாளையே இது நடந்து விடும் என்று சொல்லும் கற்பனாவாதியில்ல நான். ஆனால் திராவிட மாடலே அதனைச் செய்து காட்டும் என்ற நம்பிக்கை வாதி நான். காட்டும் என்ற தன்னம்பிக்கை வாதி நான்.இந்த தைரியத்தையும் தன்னம்பிக்கையும் என்னுள் விதைத்தவர் கருணாநிதி. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications