சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை கடற்படை தளம் மீது 10 நிமிடம் வட்டமிட்ட டிரோன்.. போலீஸில் புகார்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஐஎன்எஸ் அடையார் கடற்படை தளம் மீது ஒரு ஆளில்லாத விமானம் (டிரோன்) நேற்று இரவு வட்டமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 நிமிடம் இந்த டிரோன் வட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலக காவல் நிலையத்தில் கடற்படை தள அதிகாரி அனில் குமார் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான எல்லை மோதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள கடற்படை தளம் மீது ஆளில்லா விமானம் பறந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Drone spotted over INS Adyar naval station

சமீபத்தில் ராஜஸ்தான் எல்லைக்குள் இப்படித்தான் ஒரு டிரோன் ஊடுறுவி வந்தது. அதை சுகோய் விமானம் மூலம் இந்தியா சுட்டு வீழ்த்தியது. இந்தப் பின்னணியில் சென்னையில் உள்ள கடற்படை தளம் மீது ஒரு டிரோன் 10 நிமிடம் வரை வட்டமடித்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒரு டிரோன் இவ்வளவு நேரம் வானில் வட்டமடிப்பதைக் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நமது பாதுகாப்பு கண்காணிப்பு இருக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. இன்று தொடங்குகிறது ஓபன் - கோர்ட்டில் மறு விசாரணை! ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. இன்று தொடங்குகிறது ஓபன் - கோர்ட்டில் மறு விசாரணை!

English summary
A Drone was spotted over INS Adyar naval station in Chennai yesterday. Police are investigating the incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X