தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை.. நீரில் முழ்கிய நெல்லை ஆட்சியர் அலுவலகம்.. போக்குவரத்து பாதிப்பு!
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட ஏராளமான மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் சூழ்ந்தது.
சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதோடு, ஆங்காங்கே தேங்கி நின்கிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

வெள்ளம் போல் மாறிய சாலைகள்
மதுரையில் நேற்று இரவு விடியவிடிய பெய்த கனமழையால் சிம்மக்கல், கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. இரவு 7 மணியளவில் தொடங்கிய மழை, அதிகாலை வரை தொடர்ந்து பெய்தது. தீபாவளி பண்டிகையையொட்டி மாலை நேரங்களில் கடைவீதிகளுக்கு ஆடைகள் வாங்க சென்ற பலரும் மழையில் சிக்கி தவித்தனர்.

மழைநீரில் முழ்கிய ஆட்சியர் அலுவலகம்
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் மாலை முதல் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. சாலைகளில் அதிகளவு மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் பாதிப்பை சந்தித்தனர்.

முக்கிய சாலைகளில் தேங்கிய தண்ணீர்
இதுமட்டுமல்லாமல் விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்துவாங்கியது. அதேபோல் திண்டுக்கல், தேனி, நாகை, ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

இன்றும் மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications