• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பொய் சொல்லலாம்.. ஆனா அதுக்குனு இப்படியா!" அண்ணாமலை பற்றி கேட்டதும்.. அப்படியே டென்ஷனான துரை வைகோ

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசு தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், இது தொடர்பாக மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். சட்ட ஒழுங்கு விவகாரத்தில் அரசு முறையாகச் செயல்படுவதில்லை எனச் சாடி வருகிறார்.

தமிழகத்தில் வன்முறை தலைவிரித்தாடுவதாக அண்ணாமலை சாடி வரும் நிலையில், அவரது குற்றச்சாட்டிற்கு மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பதிலடி கொடுத்து உள்ளார்.

ஆடியோ விவகாரம் 15 நாட்களுக்கு முன்பே தெரிந்து மறைத்தார்.. அண்ணாமலை மீது போலீஸில் புகார் ஆடியோ விவகாரம் 15 நாட்களுக்கு முன்பே தெரிந்து மறைத்தார்.. அண்ணாமலை மீது போலீஸில் புகார்

 தூத்துக்குடி

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிசேரியில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். வில்லிசேரியில் தேசிய வங்கியின் கிளை அமைக்க வேண்டும் என்று துரை வைகோ கோரிக்கை வைத்து இருந்தனர். இதற்கிடையே வில்லிசேரி கிராமத்தில் இந்தியன் வங்கி கிளை அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

 துரை வைகோ

துரை வைகோ

இந்த ஆய்வு தொடர்பாக மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து வில்லிசேரியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தியத்திற்கு சென்ற அவர், அங்கும் தேவைப்படும் வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, "தேர்தல் ஆணையர், ஆளுநர்கள் பொதுவான மனிதர்களாக இருக்க வேண்டும்.. தனிப்பட்ட அரசியல் கட்சியின் சித்தத்தின் படி நடந்து கொள்வது தான் பிரச்சினை.. இந்தியாவின் ஒற்றுமை வலியுறுத்தி இப்போது ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். ராகுல் காந்தி கூறும் கருத்துக்கள் 100 சதவீதம் சரியானவை..

 கோவை கார் வெடிப்பு

கோவை கார் வெடிப்பு

கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத செயல் என்பதை போலீசார் ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டது. கோவை சம்பவம் தமிழக அரசின் உளவுத்துறை கவனக்குறைவு என்று பா.ஜ.க தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். இப்போது பாஜக ஆளும் கர்நாடகா மாநிலம் மங்களுரில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஏற்கனவே கர்நாடகாவில் ஒத்திகையும் பார்த்துள்ளார்.

கர்நாடகா

கர்நாடகா

பெங்களுரில் கடந்த 2020ஆம் ஆண்டு கலவரம் ஒன்று ஏற்பட்டது. இந்த கலவரம் நடந்து ஏற்கனவே 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் கூட ஏன் இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையையும் ஆளும் பாஜக அரசு எடுக்கவில்லை.. இது தொடர்பாக எல்லாம் ஏன் எந்தவொரு கேள்வியும் கேட்பதில்லை. தமிழக அரசு என்று வந்தால் ஒரு நியாயம், கர்நாடக அரசுக்குத் தனி நியாயமா?

குஜராத்

குஜராத்

பாஜக மாநில தலைவர் அண்ணலை ஊழல் பற்றிப் பேசுகிறார். குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 141 பேர் உயிரிழந்தனர். அதிலும் அவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இதுநாள் வரை அந்த விபத்து தொடர்புடைய நபர்கள் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.. இந்த விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது.

 பொய் சொல்லலாம்

பொய் சொல்லலாம்

தமிழகத்தில் வன்முறை தலைவிரித்தாடுகிறது என்றும் தமிழக போலீசார் சரியாகச் செயல்படவில்லை என்றும் பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இப்போது கர்நாடக மற்றும் குஜராத்தில் நடத்தற்கு அண்ணாமலை என்ன சொல்லப் போகிறார். கண்ணடி கூண்டில் நின்று கல் எறியக்கூடாது. எந்தவொரு சூழலிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும்.. ஆனால் ஒன்றை பத்தாகத் திரித்துச் சொல்லக்கூடாது. பொய் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்ல வேண்டும் என்று கூறுவார்கள். அது போன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்" என்று காட்டமாக விமர்சித்தார்.

English summary
Durai Vaiko asks Why Annamalai hasn't raised any questions on issues in BJP ruled country: MDMK chief Durai Vaiko targets BJP for various issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X