பரபரவென இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை.. ‘வசூல்?’ தமிழகம் முழுவதும் 30 அரசு அலுவலகங்களில் அதிரடி ரெய்டு!
சென்னை : தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு அதிகாரிகள் வசூல் வேட்டையில் இறங்குவதை தடுக்க அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போக்குவரத்து துறை, பத்திரப்பதிவுத் துறை, வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறையினரின் இந்தச் சோதனையில் பரிசுப் பொருட்கள், கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி ரெய்டு
தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக வந்த புகார்களின் அடிப்படையில் 30க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

30க்கும் மேற்பட்ட இடங்களில்
கோவை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருச்சி, செங்கல்பட்டு, நாமக்கல், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ரெய்டு நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு பரனூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றது. இதேபோல, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

சோதனை - பரபரப்பு
கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் அறைகளை மூடிக்கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பரிசுப் பொருட்கள்
இந்த சோதனைகளில் இதுவரை, கணக்கில் வராத லட்சக்கணக்கான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஏராளமான பரிசுப் பொருட்கள், சால்வைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி நெருங்கும் நேரத்தில், அரசு அலுவலகங்களில் நடைபெற்றுள்ள இந்த அதிரடி ரெய்டு, அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications