கே.என்.நேரு வீட்டில் ரெய்டு ஓவர்! சகோதரர் ரவிசந்திரன் வீட்டிற்கு பிரிண்டருடன் சென்ற DVAC அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் வீட்டில் பிரிண்டர் கருவியுடன் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக கே.என் நேரு இருந்த போது, ரூ. 1020 கோடி ஒப்பந்த முறைகேடு நடந்ததாக அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.

DVAC raids

அதனை அடிப்படையாக வைத்து கே.என்.நேரு, அவருடைய சகோதரர் உட்பட 13 நபர்கள் மீது செப்டம்பர் 5-ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்து 30 இடங்களில் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையின் போது சுமார் 241 ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை பறிமுதல் செய்த நிலையில், அதன் அடிப்படையில் இன்று காலை முதல் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை, திருச்சியில் உள்ள அவருடைய இல்லத்தில் சோதனை தொடங்கிய நிலையில் தற்போது சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவருடைய சகோதரர் ரவிச்சந்திரன் இல்லத்திலும், அலுவலகங்களிலும் 7 அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

கடந்த மாதம் நடைபெற்ற சோதனையின் போது இவருடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் பிரிண்டர் கருவியுடன் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அது போல் திமுக முன்னாள் எம்எல்ஏக்கள் அணைக்கட்டு நந்தகுமார், நாமக்கல் ராமலிங்கம் உள்ளிட்டோர் வீடுகளிலும் இந்த ரெய்டு நடந்து வருகிறது. ஏற்கெனவே திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ 100 கோடி முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மூத்த நிர்வாகியான கே.என்.நேருவின் வீட்டில் இந்த ரெய்டு நடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ரெய்டை முன்னிட்டு கே.என்.நேருவின் வீட்டிற்கு திமுகவினர் வருகை தந்துள்ளனர். தற்போது சென்னையில் நேரு இல்லத்தில் தற்போது சோதனை நடைபெறவில்லை. ஆனால் கே.என. ரவிசந்திரன் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+