சென்னையில் அதிகாலையில் பெய்த சாரல் மழை... சட்டென்று மாறிய வானிலை
தமிழகத்தில் பல ஊர்களில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நகர்பகுதிகளிலும் புறநகரிலும் மழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது.
சென்னை: சென்னையின் பல பகுதிகளில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்து குளுமை பரவியுள்ளது. அக்னி நட்சத்திரத்தால் அனல் காற்று வீசிய நிலையில் சட்டென்று மாறிய வானிலையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்து வருகிறது.

அக்னி நட்சத்திர காலமாக இருப்பதால் சென்னையில் வெயில் கொளுத்தியது. பல இடங்களில் அனல் காற்று வீசியது. இரவு நேரங்களில் மக்கள் புழுக்கத்தில் தவித்தனர். இந்த நிலையில் நேற்றிரவு முதல் சென்னை மாநகரின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதிகாலையில் சென்னை நகர் பகுதிகள் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. வியாசர்பாடி, சைதாப்பேட்டை, ஆவடி, சேத்துப்பட்டு,அனகாபுத்தூர், மேடவாக்கம், ஈக்காட்டுதாங்கல், புரசைவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது.
சென்னையின் பல பகுதிகளில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்து குளுமை பரவியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது போல், வேலூர், சேலம்,திருச்சி, விழுப்புரம், திருவாரூர் உட்பட தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இதே போல காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கத்திரி வெயில் தொடங்கிய சில நாட்களில் மழை பெய்யத் தொடங்கியதால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சற்று அவதிப்பட்டாலும் கூட கோடை வெப்பம் தணிந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications