இ கிளாஸில் ஈட்டிங்... ஆன்லைன் வகுப்பில் உணவு ஊட்டும் பெற்றோர்கள்...ஆசிரியர்களும் அப்படித்தானாம்
ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உணவு ஊட்டுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே போல ஆசிரியர்களும் வகுப்பின் போதே உணவு சாப்பிடுவதாகவும் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
சென்னை: கொரோனா காலத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் கல்வி முறையே மாறி விட்டது. ஆன்லைன் வகுப்புகள் மூலமே கற்பிக்கப்படுவதால் மாணவர்களின் உணவுப்பழக்கமும் மாறி விட்டது. 65 சதவிகித பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு நேரத்தில் உணவு ஊட்டுவது தெரியவந்துள்ளது. இதே போல பெரும்பாலான மாணவர்கள் இணைய வகுப்புகளையும், கல்வி தொலைக்காட்சியை பார்ப்பதும் குறைத்துக்கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு இறுதி முதல் கொரோனா கொடுந்தொற்று உலகத்தில் பரவ ஆரம்பித்து விட்டது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே பள்ளிகள் மூடப்பட்டன. வகுப்புகள் ரத்து செய்யப்பட்டாலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் போது மாணவர்கள் வகுப்பறைகளில் இருப்பது போலவே கவனிப்பதில்லை. பல நேரங்களில் ஆடியோ மட்டுமே கேட்பதால் உணவு உண்பது, நொறுக்குத்தீனி சாப்பிடுவது, படுத்துக்கொண்டே படிப்பது என பல வேலைகளை செய்கின்றனர்.
ஆன்லைன் வகுப்புகள் குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் நடத்தப்பட்ட சர்வேயில், 65 சதவிகித பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு வகுப்பு நடைபெறும் போதே உணவு ஊட்டுவதாக தெரிவித்துள்ளனர். அதே போல 7 சதவிகித ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்பு நேரத்தில் உணவு உட்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

சூடான சத்தான உணவு
மாணவர்கள் பள்ளிக்கு கிளம்பும் போது அவசரம் அவசரமாக குளித்து விட்டு சாப்பிட்டு விட்டு கிளம்புவார்கள். டிபன்பாக்ஸில் கொண்டு போன ஆறிப்போன உணவுகளைத்தான் சாப்பிடுவார்கள். கொரோனா கால ஆன்லைன் வகுப்புகளில் பள்ளிகள் மூடப்பட்டு வீட்டிலேயே குழந்தைகள் படிப்பதால் நேரத்திற்கு சூடான உணவுகளை தங்களின் பிள்ளைகளுக்கு கொடுக்க முடிவதாக பல பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

எழுந்த உடன் ஆன்லைன் வகுப்பு
பள்ளிக்கு செல்லும் போது பல மாணவர்கள் காலையில் சீக்கிரமே எழுந்து 8 மணிக்கு பஸ் அல்லது ஆட்டோ பிடித்து பள்ளிக்கு அவசரம் அவசரமாக செல்வார்கள். இப்போது வீட்டிலேயே ஆன்லைன் மூலம் படிப்பதால் 9 மணி வரைக்கும் உறங்குகின்றனர். அவசரம் அவசரமாக எழுந்து ஆன்லைன் வகுப்பில் அமர்கின்றனர். அவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் போதுதான் பெற்றோர்கள் உணவு கொடுக்க வேண்டியுள்ளதாக ஆய்வின் போது தெரிவித்துள்ளனர்.

சமர்த்தாக சாப்பிடுவார்கள்
பெரும்பாலான குழந்தைகள் டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவார்கள். இப்போது ஆன்லைன் வகுப்புகள் வந்த பின்னர் வகுப்புகளை கவனித்துக்கொண்டே சாப்பிடுவதால் உணவுகளை நன்றாக சமர்த்தாக சாப்பிடுவதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர். பள்ளிக்கு செல்லும் போது கூட சரியாக சாப்பிடாமல் ஓடி விடுவார்கள். டிபன்பாக்சில் கொடுத்து விடும் உணவும் பாதி அப்படியே திரும்ப வரும். இப்போது வீட்டில் படிக்கும் பிள்ளைகளுக்கு உணவு கொடுப்பது எளிதாக இருப்பதாகவும் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா கால மாணவர் சேர்க்கை
இதே போல மற்றொரு ஆய்வில் 2019-20 கல்வியாண்டு தொடங்கி 2021-22 வரையுள்ள காலத்தில் அரசுப் பள்ளிகளில் 5 சதவிகிதம் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதே காலகட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 7 சதவிகிதம் குறைந்துள்ளது. மேல்நிலை வகுப்புக்கு செல்லாமல் கல்வியை நிறுத்திக்கொண்ட மாணவர்கள் 11 சதவிகிதம். பள்ளிகள் திறந்த பிறகு இந்த எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது.

வேலைக்கு செல்லும் மாணவர்கள்
2.96 சதவிகிதம் மாணவர்கள் தற்காலிக குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர். அதில், 60 சதவிகிதம் மாணவர்கள் ரூபாய் 100 க்கும் கீழே சம்பளம் வாங்குபவர்கள். 8 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்யும் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்கள் 10 சதவிகிதம். அதிகபட்சமாக சேவைத் துறை பணிகளில்தான் 54 சதவிகிதம் மாணவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

பள்ளிகள் திறப்பது மகிழ்ச்சி
பெருந்தொற்றால் பள்ளி செல்ல இயலாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று 82 சதவிகிதம் மாணவர்கள் கூறுகின்றனர். பள்ளியே மகிழ்ச்சி தரும் இடமாக இருக்கிறது என்று 77 சதவிகிதம் மாணவர்கள் கூறியுள்ளனர். பள்ளி திறந்ததும் செல்லத் தயாராக உள்ள மாணவர்கள் 95 சதவிகிதம். பள்ளி செல்ல விரும்பாத மாணவர்கள் 5 சதவிகிதம் மட்டுமே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் போது, குறைந்த பாடங்களே இருக்க வேண்டும் என 41 சதவிகிதம் மாணவர்களும் விளையாட்டுகள் அதிகம் இடம் பெற வேண்டும் என 28 சதவிகிதம் மாணவர்களும் கூறியுள்ளனர். கொஞ்சம் நாட்கள் பாடம் இல்லாத வகுப்புகள் வேண்டும் என 14 சதவிகிதம் மாணவர்களும் கொரோனா பாதிப்புக்கு தக்க பாதுகாப்பு வசதிகள் வேண்டும் என்று 26 சதவிகிதம் மாணவர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

பெற்றோருக்கு உதவி
இந்த ஆய்வில் பங்கேற்ற மாணவர்கள், ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை 20 சதவிகிதம். ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 69 சதவிகிதம். எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டுமே 89 சதவிகிதம். ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் 11 சதவிகிதம் ஆவர். வீட்டில் வேலைக்கு செல்லாமல் உள்ள குழந்தைகளில் தாய், தந்தையர் மற்றும் பாதுகாவலருக்கு உதவி புரியும் குழந்தைகள் 28 சதவிகிதம் பேர் . வீட்டில் இருக்கும் போது பெரும்பகுதி நேரத்தை விளையாட்டில் கழிக்கும் குழந்தைகள் 72 சதவிகிதம். மேலும், தொலைக்காட்சி பார்ப்பதில் 39 சதவிகிதம் மாணவர்கள் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர். விடியோ விளையாட்டுகளில் 18 சதவிகிதம் பேர் ஈடுபடுகின்றனர்.

மாணவர்களுக்கு உதவி தேவை
கொரோனா பெருந்தொற்று பள்ளிக் கல்வியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய நேரடி கள ஆய்வு முடிவுகள் அடிப்படையில் தமிழ்நாடு அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதன்படி ஆன்லைன் வகுப்புகளில் 49 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே பங்கு பெறுகிறார்கள். அதுவும் கூட எப்போதாவது பங்கேற்பவர்களையும் உள்ளடக்கியதே. கல்வி தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள் 41 சதவிகிதம். அதிலும் 44 சதவிகிதம் மாணவர்களுக்கு அது புரியவில்லை. எனவே, இணைய வழிக் கல்வி, கல்வி தொலைக்காட்சி கல்வி ஆகியவை எல்லா மாணவர்களுக்கும் சென்று சேரும் வகையில் இதனை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். கொரோனா தொற்று காரணமாக 1.1 சதவிகிதம் மாணவர்கள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். அரசு கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் குடும்பங்களுக்கு கொடுக்கும் நிவாராணத்தோடு, இந்தக் குழந்தைகள் படிப்பை முடிக்கும் வரை ஒரு சிறப்பு கல்வித் உதவித் தொகை மூலம் படித்து முன்னேற்றம் அடைய அரசு உதவி செய்ய வேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications