ஆபிசுக்குத் தான் லெட்டர் வந்தது! அவர் வீட்டுக்கு இல்லையே! களத்தில் இறங்கிய ஓபிஎஸ் டீம்! பரபர மூவ்..!
சென்னை : தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஓபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆதரவாளர்களுடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி எந்த அறிக்கை வெளியிட்டாலும், ஏட்டிக்குப் போட்டியாக தானும் ஒரு அறிக்கையோ அல்லது அறிவிப்போ வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் ஓபிஎஸ்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கம் என அதிரடி காட்டி வரும் ஓ.பன்னீர்செல்வம் தற்போது தேர்தல் ஆணையம் நீதிமன்ற வழக்கு என அடுத்தடுத்த சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

தேர்தல் ஆணையம்
இந்நிலையில் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்குபெற இந்தியா முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இபிஎஸ்க்கு அழைப்பு
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் தற்போது வரை ஓபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று செய்திகள் வெளியான நிலையில், தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

ஓபிஎஸ் அறிவிப்பு
இதனிடையே தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதாக ஒ.பன்னீர் செல்வமும் அறிவித்துள்ளார். அவரது தரப்பில் கோவை செல்வராஜ் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதம் குறித்து தனது ஆதரவாளர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் இந்த முடிவினை எடுத்துள்ளார். இது தொடர்பாக அவரது தரப்பில் ஆதரவாளர்களுடன் பேசிய போது சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
Recommended Video

பின்னணி என்ன?
அதாவது எடப்பாடி பழனிச்சாமி என்றோ அல்லது அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்றோ, அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பவில்லை. பொதுவாக அதிமுக அலுவலகத்திற்கே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒருங்கிணைப்பாளராக தானே தொடர்வதாக ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி உள்ள நிலையில் தான் தற்போது கூட்டத்திலும் கலந்து கொள்வதாக ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுத்து இருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications