உடலை தைத்த மழைநீர் வடிகால் கம்பி.. பறிபோன பத்திரிகையாளர் உயிர்.. இதான் 95% பணியா? எடப்பாடி கண்டனம்
சென்னை: மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பத்திரிகையாளர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு அரசு முடிவடையாத திட்டங்களில் இனி ஒரு உயிர்பலி கூட ஏற்படாமல் தடுக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பருவமழை காலத்தில் சென்னையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க மாநகராட்சி சார்பாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு செய்யப்படாததால் பள்ளங்கள் காணப்படுகின்றன.
அதேபோல் சென்னை ஜாஃபர் கான் பேட்டையில் உள்ள காசி திரையரங்கம் அருகே மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் பணி முடித்து அந்த வழியாக வீடு திரும்பியுள்ளார்.

பத்திரிகையாளர் மரணம்
அப்போது ஆபத்தான முறையில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் அவர் விழுந்தார். அந்த பள்ளத்தில் நீட்டிக்கொண்டு இருந்த கட்டுமான கம்பிகள் முத்துகிருஷ்ணனின் உடலை துளைத்தன. படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எடப்பாடி பழனிசாமி
இதற்கிடையே பத்திரிகையாளர் முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்தது குறித்து எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில், "சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்ததில் தனியார் தொலைக்காட்சி பணியாளர் திரு.முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனையை தருகிறது.

அரசுக்கு கண்டனம்
பருவமழை துவங்க இருக்கும் சூழ்நிலையில் இன்னும் முன்னேற்பாட்டு பணிகள் கூட முழுமையாக முடியாத அவல நிலையில் 95% பணிகள் முடிவடைந்து விட்டதாக பொய் பரப்புரை செய்து வருவதும், மக்களின் உயிருக்கு மதிப்பளிக்காமல் அலட்சியத்தோடு இந்த விடியா அரசும், மாநகராட்சி நிர்வாகமும் செயல்பட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

நிவாரணம்
மக்களை ஏமாற்றும் விளம்பர அரசியலை விடுத்து உயிரைக் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, முடிவடையாத இத்திட்டங்களால் இனி ஒரு உயிர் பலி கூட ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த செய்தியாளரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ருபாய் நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications