அவங்களையும் தூக்குங்க! சீனியர்களுக்கு பறந்த உத்தரவு! பதறி போன ஓபிஎஸ்! நாளைக்கு தான் இருக்கு கச்சேரி!
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பில் இருந்த பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவிய நிலையில் மீதி இருக்கும் நிர்வாகிகளை இழுக்கவும், எடப்பாடி பழனிசாமி தான் ஒற்றை தலைமையாக இருக்க வேண்டுமென நாளைக்குள் தீர்மானம் நிறைவேற்ற தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென அதிரடி உத்தரவினை எடப்பாடி பழனிச்சாமி சீனியர் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கட்சியிற்கு ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியிற்கு ஆதரவாகவும், பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாகவும், அதிமுகவினரே போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், அதனை தள்ளி வைக்க வேண்டுமென ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பொதுக்குழு நடக்கும் என கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு
பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், இளைஞர் இளம் பெண்கள் பாசறை, எம்ஜிஆர் இளைஞர் அணி, புரட்சித் தலைவி அம்மா பேரவை, உள்ளிட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட சிலரே பின்புலமாக இருக்கின்றனர்.
Recommended Video

ஓபிஎஸ் அதிர்ச்சி
கடந்த சில ஆண்டுகளாகவே ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளர்களாக கருதப்பட்ட நத்தம் விசுவநாதன் கேபி முனுசாமி உள்ளிட்ட பலரும் தற்போது எடப்பாடி தரப்புக்கு தவறிவிட்டனர். இந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் பக்கம் இருக்கும் மாவட்ட நிர்வாகிகள் குறித்த கணக்கெடுக்கும் 6 சீனியர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எப்படி சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ரகசிய உத்தரவு
தற்போதும் அதே பாணியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஒற்றை தலைமையாகக் கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைகள் தற்போதிருந்தே துவக்கப்பட்டுள்ள நிலையில், பொதுக்குழுவுக்கு முன்னதாகவே மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் ஒன்றிய அளவில் தீர்மானங்கள் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீவிர முயற்சி
மேலும் மாவட்ட அளவில் ஆக இருந்தாலும் சரி ஒன்றிய அளவில் ஆக இருந்தாலும் சரி போ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை எப்படியாவது தங்கள் தரப்புக்கு கொண்டு வர வேண்டும் என அந்தந்த மாவட்ட சீனர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி என்ற தகவலும் அதிமுகவில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. அதே நேரத்தில் தற்போது தங்கள் பக்கம் இருக்கும் நிர்வாகிகளை தக்க வைக்கவும், மேலும் பல நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கவும் ஓபிஎஸ் தரப்பு முயன்று வருகிறது.
-
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications