எடப்பாடி கண்ணுல பயம்.. ஆதாரம் இதுதான் பாருங்க மக்களே.. புட்டுபுட்டு வைத்த புகழேந்தி
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் நடத்திய கூட்டத்தால் மிரண்டு போன எடப்பாடி பழனிசாமி அச்சத்தால் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார். அதிமுக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இபிஎஸ் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் நீதிமன்ற அவமதிப்பாகவே பார்க்க முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்னையால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் அணிகளாக பிரிந்துள்ளன. கட்சியை உரிமை கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் தரப்பில் நியமிக்கப்பட்ட கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை ஓபிஎஸ் கடுமையாக விமர்சித்தார்.

இபிஎஸ் நோட்டீஸ்
இந்த நிலையில் அதிமுக கொடி, பெயர் ஆகியவற்றை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுக தலைமையகம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர். உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்தி வருவது ஏன்?

சட்ட நடவடிக்கை
கட்சியின் பொறுப்பு எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதால், ஓபிஎஸ் இதுபோன்று செயல்படுவது குறித்து சட்ட விளக்கம் அளிக்க வேண்டும். இந்த நோட்டீஸிற்கு உடனடியாக பதிலளிக்காவிட்டால், உறுதியாக சட்ட நடவடிக்கை தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் முறைகேடாக பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மிரண்டு போன எடப்பாடி பழனிசாமி
அதிமுக தலைமையகம் மூலம் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸ் குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், இது நகைப்புக்குரிய விஷயமாகவே பார்த்திருக்கிறோம். இப்போது நோட்டீஸ் அனுப்பி இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, இத்தனை நாட்களாக இது தெரியவில்லையா. நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தை பார்த்து மிரண்டு போய்விட்டார்கள். ஓபிஎஸ் கூட்டம் போட்ட பின்னர், பதிலுக்கு நாங்களும் நடத்துகிறோம் என்று பதறி கூட்டம் கூட்டுகிறார்கள்.

எதற்காக நோட்டீஸ்?
எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு முதலமைச்சரானவர் ஓ.பன்னீர் செல்வம். அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருப்பதாக கூறப்படுகிறது. பின்னர், யார் மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது புரியவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கு வரும் ஜனவரி 4ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், எதற்காக நோட்டீஸ் வழங்க வேண்டும்.

பதிலளிக்க அவசியமில்லை
இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக தான் பார்க்க முடிகிறது. அதிமுக தொண்டர்களின் கட்சி. எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள நோட்டீஸ், எதையும் கட்டுப்படுத்த போவதில்லை. புறம்போக்குகள் கொடுக்கும் நோட்டீஸ்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று காட்டமாக பதிலளித்தார்.
-
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications