வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்..நேரு ஸ்டேடியம்? தேதி குறித்த எடப்பாடி & கோ..! உற்சாக ர.ர.கள்!
சென்னை : ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உற்சாகத்தில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் பொதுச் செயலாளராக அவர் பதவியேற்பு நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒற்றைத் தலைமையை எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உற்சாகத்தில் இருக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
பொதுச் செயலாளராக அவர் பதவி ஏற்கும் நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒற்றை தலைமை விவகாரம்
ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் பெரும் பரபரப்பை பற்ற வைத்த நிலையில் தற்போது எடப்பாடி தரப்பு ஆதரவாளர்கள் மிக மகிழ்ச்சியாக உலாவருகின்றனர். காரணம் அதிமுகவின் 99 சதவீத நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் வந்து விட்டனர். இதன் மூலம் நடைபெற உள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றைத் தலைமையால் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்து அந்த தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர்.

இறுதி கட்ட முயற்சி
ஓபிஎஸ் தரப்பு பல வழிகளில் இதனை தடுக்க முயன்று வரும் நிலையில் இறுதியாய் காவல் நிலைய கதவை தட்டியுள்ளார் ஓபிஎஸ். பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என அவர் கடிதம் அனுப்பியுள்ள நிலையில் 100% கண்டிப்பாக பொதுக்குழு நடக்கும் என உறுதியாக அடித்துச் சொல்கின்றனர் இபிஎஸ் ஆதரவாளர்கள். சசிகலா நீதிமன்ற வழக்கு தினகரன் உடன் சந்திப்பு என அவ்வப்போது பல தகவல்களை ஓபிஎஸ் தரப்பு கசியவிட்டு வந்தாலும் அதற்கெல்லாம் அஞ்சாத எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றியே தீருவேன் என முனைப்பில் இருக்கிறார்.

இபிஎஸ் தரப்பு உற்சாகம்
அவருக்கு ஆதரவாக தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த முன்னாள் அமைச்சர்களும் பக்கபலமாய் இருப்பதால் அவர் தலைமையை கைப்பற்ற போவது உறுதி என்கின்றனர் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள். இதனிடையே பொதுக்குழு முடிவடைந்த பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பு நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள பிரபல திருமண மண்டபங்களை ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டது.

பிரம்மாண்ட திட்டம்
ஆனால் இதுவரை இல்லாத அளவு பிரமாண்டம் காட்ட வேண்டும் என்பதற்காக நேரு ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இதற்கான தேதியை கூட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர்கள் முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஒருபுறம் ஓபிஎஸ் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில், நேரு ஸ்டேடியத்தில் தான் பொதுச்செயலாளர் பதவி ஏற்பு விழா என அதிமுக எடப்பாடி தரப்பு ரத்தத்தின் ரத்தங்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications