துரோகி யார்.. ரகசிய ஆலோசனையின்போது சீறிய எடப்பாடி..! ஷாக் ஆன மாஜிக்கள்! அடுத்த ஆபரேஷன் இதான்!
சென்னை : துரோகி என தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என தனது ஆதரவாளர்களுடன் நடந்த ஆலோசனையின்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட 2 விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் கடந்த வாரம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது முதல் அரசியல் அரங்கில் அவை தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தனது ஆதரவாளர்களுடன் இந்த விசாரணை அறிக்கைகள் தொடர்பாக ஆலோசித்துள்ளார்.
அப்போது, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, சசிகலா, ஓபிஎஸ்ஸுக்கு எதிராக அமைந்துள்ளது பற்றியும், அடுத்தகட்ட திட்டங்கள் பற்றியும் ஈபிஎஸ் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

2ல் 1
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை இரண்டும் கடந்த வாரம் வெளியாகி அதிமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. முதல் அறிக்கை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், இரண்டாவது அறிக்கை சசிகலா உள்ளிட்டோருக்கு எதிராகவும் அமைந்துள்ளத்ய். இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையை வைத்து எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களைத் தீட்டியிருப்பதாக ஈபிஎஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஆறுமுகசாமி அறிக்கை
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சைகள் அளிக்கவும், ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவும் சசிகலா தடையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த முடிவுகளை சசிகலா குடும்பத்தினரே எடுத்தனர் என்றும், அப்பல்லோ மருத்துவமனை முழுவதும், சுகாதாரத்துறையும் சசிகலா கன்ட்ரோலில் இருந்தது என்றும், ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தீவிர ஆலோசனை
இந்த 2 ஆணைய அறிக்கைகளும் வந்த பின்னர் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. 2 அறிக்கைகள் சொல்லும் முக்கியமான தகவல்கள் பற்றி சட்ட வல்லுநர்களுடனும் ஆலோசித்துள்ளார் ஈபிஎஸ். சமீபத்தில், தனக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்களுடன் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார் ஈபிஎஸ். இந்த ஆலோசனையின்போது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை விவரங்கள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

யார் துரோகி?
அப்போது எடப்பாடி பழனிசாமி, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பற்றி ஆவேசமாகப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. நான் சசிகலாவுக்கு துரோகம் செய்ததாக அவர்கள் விமர்சிக்கிறார்கள். இப்போது சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் ஜெயலலிதாவுக்கு செய்த துரோகங்கள் இந்த அறிக்கையில் வந்திருக்கின்றன. அம்மா மரணத்திற்கு சசிகலாதான் காரணம் என்று மட்டும் தான் இந்த அறிக்கை சொல்லவில்லை. மற்றபடி, சசிகலாவுக்கு எதிராக அவ்வளவு சந்தேகங்களை முன்வைத்துள்ளனர் என ஈபிஎஸ் பேசியுள்ளாராம்.

சசிகலா + ஓபிஎஸ்
மேலும், இதை நாம் நமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சசிகலா மட்டுமல்லாது இந்த அறிக்கை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தையும் முன்னிலைப்படுத்தி பேச வேண்டும். துரோகி யார் என இந்த அறிக்கையை வைத்து மக்களிடமே கேட்கவேண்டும், பொதுக்கூட்டங்களில் அவர்களுக்கு பதிலடியாக இதைப் பற்றி பேச வேண்டும் என ஆதரவாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மாஜிக்கள் ஷாக் - அசரலையே
ஒருபக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட கொஞ்சமும் அசராமல், எதிர் தரப்பை காலி செய்ய எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கியுள்ளதை அறிந்து, அவருக்கு நெருக்கமான சீனியர் மாஜிக்களே அசந்து போயிருக்கிறார்கள். அண்ணன் கொஞ்சமும் அசரல.. திமுகவால் அவரை ஒண்ணும் செய்ய முடியாது என அவர்கள் தங்கள் ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

விரைவில் பொதுக்கூட்டத்தில்
எடப்பாடி பழனிசாமி விரைவில் பொதுக்கூட்டத்தை நடத்தி, ஆறுமுகசாமி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சசிகலா, ஓபிஎஸ் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தன்னை துரோகி என விமர்சிக்கும் சசிகலா, ஓபிஎஸ் தரப்பினருக்கு பதிலடி கொடுத்து, அவர்களின் விமர்சனங்களை நொறுக்கலாம் என ஈபிஎஸ் கணக்குப் போட்டிருக்கிறாராம்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications