அதிமுக ‘ஆடுபுலி’ ஆட்டம்! ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 21 நீக்கம்! அதிரடியை தொடரும் இபிஎஸ்! யார் யார் தெரியுமா?
சென்னை : அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி அடுத்தடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கிய நிலையில் தற்போது ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக மேலும் 21 பேரை நீக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்..
Recommended Video
அதிமுகவில் நடந்து வரும் அதிகார சண்டைகள் காரணமாக மாநில அளவில் மட்டுமல்ல மாவட்ட அளவிலும் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் பல்வேறு நிர்வாகிகள் அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம் பொதுக்குழுவில் முன்மொழியப்பட்ட நிலையில், அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டது,. இதனையடுத்து ஓ பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட அனைவரும் நீக்கப்பட்டனர் எனவும் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என அறிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
அதே பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரும் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என முழக்கம் எழுப்பினர். ஆனால் அது குறித்து அப்போதல்ல இப்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதேபோல் வெல்லமண்டி நடராஜன், கன்னியாகுமரி அசோகன் உள்ளிட்டோர் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை. இதனால் அவர்கள் அதிமுகவில் எடிப்பாடி பழனிசாமி தரப்புக்கு இணக்கமாக செல்வார்களா என எதிர்பார்க்கப்பட்டது.

ஆதரவாளர்கள் நீக்கம்
இந்நிலையில் தான் நேற்று திடீரென அதிமுகவில் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களான வெல்லமண்டி நடராஜன், கன்னியாகுமரி அசோகன், அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார். மற்றொரு மகனான ஜெயப்பிரதீப் ஆகியோரை அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். தங்களை நீக்குவதற்கு அதிகாரம் இல்லை என ஓபிஎஸ்-ன் மகன்கள் அடுத்தடுத்து கண்டன அறிக்கை விட்டதோடு எடப்பாடி பழனிச்சாமியையும் மிக கடுமையாக விமர்சித்திருந்தனர்.

மேலும் பலர் நீக்கம்
அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்புடன் நெருக்கமாக இருக்கும் பலரும் அடுத்தடுத்து கட்சிகளிலிருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகிறது இந்த நிலையில் தான் இன்றும் அந்த பட்டியல் நீண்டிருக்கிறது. கட்சிக் கொள்கைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாக முன்னாள் எம்எல்ஏ திண்டுக்கல் சுப்புரத்தினம், அம்மா பேரவை துணைச் செயலாளர் மாறன், இலக்கிய அணி துணைச் செயலாளர் முருகேசன், வலசை மஞ்சுளா, வேலூர் சுரேஷ் பாபு,திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவகர், தஞ்சாவூரைச் சேர்ந்த தயாளன், சரவணன், சதீஷ் ,செந்தில், பாண்டியன், ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த அறிவிப்பு
இதே போல கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான முன்னாள் அமைச்சர் பொன்னையனுடன் பேசியதாக கூறப்படும் கன்னியாகுமரி மாவட்ட எம்ஜிஆர் மன்ற முன்னாள் செயலாளரான நாஞ்சில் கோலப்பன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் எனவும் கட்சி தொண்டர்கள் யாரும் இவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். வரும் நாட்களில் இந்த பட்டியல் இன்னும் நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications