சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சவால்களை தவிடு பொடியாக்கி சாதித்த முதல்வர் பழனிச்சாமி - 5 ஆண்டுகளில் 20500 பைல்களில் கையெழுத்து

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வரானார். அன்று முதல் இன்று வரை கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தின் முதல்வராக செயல்பட்டு வருகிறார் பழனிசாமி.

Google Oneindia Tamil News

சென்னை: அமைதியான கடலில் படவை செலுத்துபவரை விட புயல் அடிக்கும் நேரத்திலும் திறமையாக படகை செலுத்துபவரே சிறந்த மாலுமி. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையில் முதல்வராக பதவியேற்று வெற்றிகரமான முதல்வராக நான்கு ஆண்டுகள் நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக முதல்வராக பொறுப்பேற்று இதுவரை 20 ஆயிரத்து 500 பைல்களில் கையெழுத்திட்டுள்ளாராம். இது தமிழக அரசியல் வரலாற்றில் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுக என்றாலே அது ஜெயலலிதாதான் என்ற பிம்பம் தொண்டர்கள் மத்தியில் இருந்தது. ஜெயலலிதா மறைந்த பிறகு நள்ளிரவில் பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம். அவரும் மக்களுக்கு பரிட்சயமானவர்தான் என்பதால் ஆட்சி அமைதியாகவே போனது. திடீரென பதவி விலகினார் ஓ.பன்னீர் செல்வம். இதன்பிறகுதான் அதிமுகவில் கழகமே ஆரம்பித்தது. ஓ.பன்னீர் செல்வத்தை மிரட்டி பதவி விலக செய்ததாக சசிகலா மீது குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வராக பதவியேற்க இருந்த ஒரு சில தினங்களில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்துவிட்டு சிறைக்கு சென்றார் சசிகலா.

அதுவரை அமைச்சராக மட்டுமே கட்சிக்காரர்களால் அறியப்பட்டு வந்த கே. பழனிச்சாமி, எடப்பாடி பழனிச்சாமி எனும் நான் என்று ஒரு சுபயோக சுப தினத்தில் முதல்வராக பதவியேற்றார். சென்னை: அமைதியான கடலில் படவை செலுத்துபவரை விட புயல் அடிக்கும் நேரத்திலும் திறமையாக படகை செலுத்துபவரே சிறந்த மாலுமி. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையில் முதல்வராக பதவியேற்று வெற்றிகரமான முதல்வராக நான்கு ஆண்டுகள் நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக முதல்வராக பொறுப்பேற்று இதுவரை 20 ஆயிரத்து 500 பைல்களில் கையெழுத்திட்டுள்ளாராம். இது தமிழக அரசியல் வரலாற்றில் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுக என்றாலே அது ஜெயலலிதாதான் என்ற பிம்பம் தொண்டர்கள் மத்தியில் இருந்தது. ஜெயலலிதா மறைந்த பிறகு நள்ளிரவில் பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம். அவரும் மக்களுக்கு பரிட்சயமானவர்தான் என்பதால் ஆட்சி அமைதியாகவே போனது. திடீரென பதவி விலகினார் ஓ.பன்னீர் செல்வம். இதன்பிறகுதான் அதிமுகவில் கழகமே ஆரம்பித்தது. ஓ.பன்னீர் செல்வத்தை மிரட்டி பதவி விலக செய்ததாக சசிகலா மீது குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வராக பதவியேற்க இருந்த ஒரு சில தினங்களில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்துவிட்டு சிறைக்கு சென்றார் சசிகலா.

அதுவரை அமைச்சராக மட்டுமே கட்சிக்காரர்களால் அறியப்பட்டு வந்த கே. பழனிச்சாமி, எடப்பாடி பழனிச்சாமி எனும் நான் என்று ஒரு சுபயோக சுப தினத்தில் முதல்வராக பதவியேற்றார்.

முதல்வர் பதவி

முதல்வர் பதவி

சேலம் மாவட்டத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த கே. பழனிசாமி கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி தமிழகத்தின் 21வது முதல்வராக பதவியேற்றார். முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்தே எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பலரும் ஆருடம் சொல்லி வந்த நேரத்தில் அதை எல்லாம் தூசு தட்டி தூரப்போட்டு வெற்றிகரமாக 5 ஆண்டுகள் கொண்டு சென்றுள்ளார்.

நான்காண்டுகள் முதல்வர்

நான்காண்டுகள் முதல்வர்

சாதுர்யமான நிர்வாகத்தால் ஆட்சியை தக்கவைத்ததுடன், பிரிந்து சென்ற ஓபிஎஸ் தரப்பையும் இணைத்து கட்சி, கொடி, இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுத்தார். அன்று முதல் இன்று வரை கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தின் முதல்வராக செயல்பட்டு வருகிறார் பழனிசாமி. ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிய பழனிசாமி, அவர் கொண்டுவந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

சிறப்பான அறிவிப்புகள்

சிறப்பான அறிவிப்புகள்

நான்கு ஆண்டு கால ஆட்சி காலத்தில் பல திட்டங்களை அறிவித்து மக்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கை உயர்த்திக் கொண்டார். குறிப்பாக, குடிமராமத்து திட்டம், மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள், ரூ. 2500 பொங்கல் பரிசு, டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு என்பது போன்ற முதல்வரின் திட்டங்கள், மக்களை அவர் பக்கம் திரும்பச் செய்துள்ளது. கடந்த 2019 ஜனவரியில் 2 வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தலைமையேற்று நடத்திய முதல்வர் பழனிசாமி, ரூ.3 லட்சத்து 431 கோடி அளவுக்கான முதலீடு தமிழகத்துக்கு வர வாய்ப்பு ஏற்படுத்தினார்.

காவிரி டெல்டா பகுதிகள்

காவிரி டெல்டா பகுதிகள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டும், தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகள், 'பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்' ஆக மாற்றப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன

நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன

அரசின் தொடர் முயற்சிகளால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமலும், சீரமைக்கப்படாமலும் இருந்த பெரிய ஏரிகள், சிறு பாசன ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள் போன்றவற்றை தூர்வார, குடிமராமத்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.

விவசாய கடன்கள் தள்ளுபடி

விவசாய கடன்கள் தள்ளுபடி

விவசாயிகளின் 60 ஆண்டு கனவான அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் ரூ.1,652 கோடியில் நடந்து வருகின்றன. காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதில் இருந்து மீட்டெடுக்க ரூ.11,250 கோடியில், 'நடந்தாய் வாழி காவேரி திட்டம்' செயல்படுத்தப்பட உள்ளது. விவசாயிகளின் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி, தொழில்முனைவோருக்கான ஒப்பந்தங்கள், 8,835 கோடி ரூபாய் அந்நிய முதலீடு உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மாணவர்களின் முதல்வர்

மாணவர்களின் முதல்வர்

பள்ளி மாணவ, மாணவியர் இடை நிற்றலை தடுக்க இலவச சீருடை, மடிக்கணினி உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கல்வி தொடர்பான அனைத்து தகவல் களையும் தெரிந்து கொண்டு மாணவர்கள் பயன்பெற அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவ கனவுகளை நிறைவேற்றும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அறிவித்து ஏராளமான ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளார். மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

அரசியல் சாதுர்யம்

அரசியல் சாதுர்யம்

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவித்து அவர்களின் மனதையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்து இளைஞர்களின் மனதையும் குளிர வைத்துள்ளார்.

விருதுகள்

விருதுகள்

தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ஊரக தூய்மைப் பணியில் மாநிலத்துக்கான விருது, பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்துக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை மத்திய அரசிடம் இருந்து தமிழகம் பெற்றுள்ளது. அமைதியான கடலில் படவை செலுத்துபவரை விட புயல் அடிக்கும் நேரத்திலும் திறமையாக படகை செலுத்துபவரே சிறந்த மாலுமி. பிரச்சினையான நேரத்தில் திடீர் முதல்வராக பதவியேற்றாலும் நான்காண்டு காலம் வெற்றிகரமான முதல்வராக தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

2021 சட்டசபைத் தேர்தல்

2021 சட்டசபைத் தேர்தல்

சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவின் முதல்வராக வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. மாநிலம் முழுவதும் பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்து தினம் தினம் புதிய புதிய அறிவிப்புகள் வெளியிடுவதோடு எதிர்கட்சியினரின் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்குப் பிறகு தொடர்ச்சியாக அதிமுக அரசு மூன்றாவது முறையாக தொடருமா? அதிமுக தொண்டர்களைத் தவிர புதிய வாக்காளர்களின் வாக்குகள் இவருடைய தலைமைக்கு கிடைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்பாரா பார்க்கலாம்.

English summary
Chief Minister Edappadi Palanisamy has completed four years as the first successful Chief Minister in the turbulent situation after Jayalalithaa's demise. As the Chief Minister of Tamil Nadu, he has so far signed 20,500 files. This is seen as an achievement in the political history of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X