இது லிஸ்ட்லயே இல்லையே! இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்கிறார் எடப்பாடி? வெளியான பரபர தகவல்!
சென்னை : அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் பொதுச் செயலாளர் பதவியை ஏற்பதற்கு வசதியாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..
தமிழக அரசியலில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரபரப்புக்கு பஞ்சம் இல்லை என்றே கூறலாம். ஆர்ப்பாட்டம், அறிக்கை என்றிருந்த தமிழக அரசியல் களம் தற்போது அதிரடி, சண்டை, ரத்தக்களரி, ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு நொடிக்கு நொடி பரபரப்பு என சென்று கொண்டிருக்கிறது.
எல்லாவற்றிற்கும் காரணம் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டமும், அதற்கு முன்னதாக எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரமும் தான். பொதுக்குழு கூட்டம் தொடர்பாக நடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தான் ஒற்றைத் தலைமை விவகாரம் திடீரென வெடித்தது.

ஒரு வாரமாக ஆலோசனை
தொடர்ந்து ஒருவாரத்திற்கு மேலாக தினமும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை, நிர்வாகிகள் சந்திப்பு, என பரபரப்பாக சென்று கொண்டிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கு இடையேயான ஒற்றை தலைமை போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட 80% மாவட்டச் செயலாளர்களின் ஆதரவோடும் சார்பு அணி நிர்வாகிகளை ஆதரவோடும் அதிமுகவின் ஒற்றை தலைமையை உருவெடுக்க எடப்பாடி பழனிச்சாமி தயாராகிவிட்டதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு
அதற்கு முன்னோட்டமாக தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்களை ஒற்றுமையாய், ஒற்றைத் தலைமையாய் எடப்பாடி பழனிச்சாமி தான் வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே வேலூர் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கட்சித் தலைமைக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், இதே போல மற்ற மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றி கட்சித் தலைமைக்கு அனுப்ப மாவட்டங்களில் மூத்த நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டம்
அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்களையும் தங்கள் தரப்புக்கு இழுக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் பொதுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு உண்டான ஆயத்த வேலைகளை எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் இதற்கு முன்னோட்டமாக காவல்துறையில் பாதுகாப்பு கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முயற்சிகள் தீவிரம்
மண்டபத்தில் நடைபெற்று வரும் பணிகளை எடப்பாடி தரப்பு நிர்வாகிகளான தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அதைத் தொடர்ந்து பேசி அவர்கள் பொதுக்குழு கூட்டம் நிச்சயம் நடைபெறும் எனவும் அதில் ஓபிஎஸ் பங்கேற்பார் எனவும் தெரிவித்தனர். இதன் மூலம் பொதுக்குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் வரும் முயற்சி சற்றே வெற்றி பெற்றதாக கூறப்பட்டாலும் அதன் இறுதியான முடிவு 23ஆம் தேதி தான் தெரியும்.

எடப்பாடி ராஜினாமா?
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்கும் வகையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஒருவருக்கு ஒரு பதவிதான் என்பது அதிமுக சட்ட விதிகளில் உள்ளது.
Recommended Video

சட்ட சிக்கல்
அவரது மறைவிற்குப் பின் தற்போது பலநூறு மூத்த நிர்வாகிகள் மாவட்ட செயலாளர், வழிகாட்டுதல் குழு உறுப்பினர், கழக அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளை ஒரே நேரத்தில் வைத்துக் கொண்டுள்ளனர். எடப்பாடியும் இதேபோல் செய்தால் பின்னாட்களில் சட்ட சிக்கல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் எடபாடி பழனிசாமி ஓபிஎஸ்க்கு தான் ராஜினாமா கடிதத்தை அனுப்ப வேண்டிய நிலையில், அதனை அவர் ஏற்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications