Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதைத்தானே செங்கோட்டையனும் சொன்னாரு.. தேவையில்லாமல் பெஞ்சை உடைத்து யூடேர்ன் போட்ட எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எலியும் பூனையுமாக இருந்த டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமியும் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு பாசமழை பொழிய தொடங்கியுள்ளனர். ஆனால் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று குரல் கொடுத்த செங்கோட்டையனை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கிய எடப்பாடி தற்போது அவரே டிடிவியுடன் கை கோர்த்து இருப்பது அதிமுகவினர் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்.

கட்சியில் பிரிந்தவர்கள் மீண்டும் இணைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அதற்கான பணியை நானே மேற்கொள்வேன் என சொல்லி தலைமைக்கு கெடு விதித்ததாலும், ஓபிஎஸ், டிடிவியை சந்தித்ததாலும் செங்கோட்டையனை கட்சியில் இருந்தே எடப்பாடி நீக்கியிருந்தார்.

Edappadi Palaniswami Moves to Fulfil Sengottaiyan Demand After Expelling Him from AIADMK

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு

அதிமுகவில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. ஜெயலலிதாவின் தோழி சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதேபோல, துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் நியமனம் செய்யப்பட்டனர்.

அப்போது அதிமுக தலைமைக்கு எதிராக தர்மயுத்தம் செய்த ஓ பன்னீர் செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைய சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இதையடுத்து, பொதுக்குழுவில் டிடிவி தினகரன், சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

டிடிவி தினகரனின் அமமுக

அதிமுக இரட்டை தலைமையின் கீழ் செயல்பட தொடங்கிய நிலையில், சட்டமன்ற் தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் உள்கட்சி மோதல் உச்சத்தை தொட்டது. ஒற்றைத்தலைமை என்ற கோஷம் அதிமுகவிற்குள் எழுந்ததால் தலைமை பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த அதிகார போட்டி யுத்தத்தில், வெற்றி பெற்ற எடப்பாட் பழனிசாமி, கட்சியில் இருந்தே ஓ பன்னீர் செல்வத்தை நீக்கினார். அதன்பிறகு ஓ பன்னீர் செல்வம் சட்ட போராட்டங்களை நடத்தி வந்தார். ஆனால் எதுவுமே கை கொடுக்கவில்லை. இதற்கு மத்தியில் தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி தனியாக பயணித்தார்.

ஒருங்கிணைப்பு குரல்கள்

அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அமமுகவை தொடங்கியிருப்பதாக பேசி வந்தார் டிடிவி தினகரன். அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்தார். இதற்கிடையே, ஓ பன்னீர் செல்வமும் டிடிவி தினகரனுடன் கை கோர்த்தார். அதிமுகவை எடப்பாடியிடம் இருந்து மீட்டெடுக்க போகும் முயற்சியில் ஈடுபட போவதாக ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்து கூறி வந்தார்.

இதற்கிடையே, தொடர் தோல்விகளை அதிமுக சந்தித்து வந்ததால், கட்சிக்குள் மீண்டும் ஒருங்கிணைப்பு தொடர்பாக குரல்கள் எழுந்தன. செங்கோட்டையன், சிவி சண்முகம் உள்ளிட்ட ஆறு முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இருந்து பிரிந்த தலைவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

செங்கோட்டையன் கட்சி பதவி பறிப்பு

ஆனால் இதனை எடப்பாடி ஏற்க மறுத்தார். அதன்பிறகு செங்கோட்டையனுக்கும் கட்சியில் முக்கியத்துவம் குறைந்தது. பல்வேறு இடங்களில் செங்கோட்டையனை எடப்பாடி புறக்கணிக்க தொடங்கினார். இதனால் கோபம் அடைந்த செங்கோடையன் கட்சியில் பிரிந்தவர்கள் மீண்டும் இணைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அதற்கான பணியை நானே மேற்கொள்வேன் என கூறி தலைமைக்கு கெடு விதித்தார்.

இதனால் செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. ஆனாலும் அசராத செங்கோட்டையன் திரைமறைவில் ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை சந்தித்தாக சொல்லப்பட்டது.. இதற்கிடையே தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவில் ஓ பன்னீ செல்வத்துடன் ஒரே காரில் பயணித்த செங்கோட்டையன் அங்கு டிடிவி தினகரனை சந்தித்தார்.

அண்ணன் - தம்பி பாச மழை

அப்போது பேட்டி அளித்த செங்கோட்டையன் கட்சியின் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வேன் என்றார். ஆனால் அதற்கு அடுத்த ஒரு சில நாட்களில் செங்கொட்டையன் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். இதையடுத்து செங்கோட்டையன் தவெகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்த சம்பவங்கள் நடைபெற்று சரியாக மூன்று மாதங்கள் கூட முடியவில்லை.

Edappadi Palaniswami Moves to Fulfil Sengottaiyan Demand After Expelling Him from AIADMK

ஆனால் அதற்கு முன்பாகவே எடபபடி பழனிசாமியுடம் டிடிவி தினகரனும் ஒரே கூட்டணிக்குள் இணைந்து அண்ணன் - தம்பி பாச மழை பொழிந்து வருகிறார்கள். ஓ பன்னீர் செல்வமும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவரப்படுவார் என்றே சொல்லப்படுகிறது.

வடிவேலு மருதமலை காமெடி காட்சியைப் போல

என்ன கோரிக்கையை முன்வைத்ததற்காக செங்கொட்டையன் நீக்கப்பட்டாரோ.. அதே கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்று இருக்கிறார். அதிமுகவில் நடக்கும் இந்த அதிரடி அரசியல் திருப்பங்கள் பற்றி நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய பாணியில் கருத்துகளையும் கூறி வருகிறார்கள்.

மருதமலை திரைப்படத்தில் வடிவேலு காமெடி காட்சியைப் போல, செங்கோட்டையன் சொன்னதை முதலிலே ஏற்று இருந்தால் தேவையில்லாமல் இத்தனை களேபரங்கள் கட்சியில் ஏற்பட்டு இருக்காதே என ரத்தத்தின் ரத்தங்களும் முனுமுனுத்து வருகிறார்கள் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+