சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பின்னணியில் அவங்க.. கோபமடைந்த ஈபிஎஸ்.. பாஜகவுக்கு எதிராக அதிரடி மூவ்.. காரணம் இந்த மேட்டர் தானாம்!

Google Oneindia Tamil News

சென்னை : பா.ஜ.க தலைமையுடன் இணக்கமான உறவைக் கையாண்டு வந்த எடப்பாடி பழனிசாமி, தனக்கு நெருக்கமானவர்கள் மீது வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருவதால் பாஜக மீது கோபமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

    ADMK முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை... என்ன காரணம்? *Politics

    ஓபிஎஸ் டெல்லிக்குச் சென்று தனக்கு ஆதரவு கோரி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாஜக அரசு ஏவிய ஆயுதம் தான் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் மீதான ஐடி ரெய்டு என்று கூறப்படுகிறது.

    சுற்றிலும் இருட்டு.. வலையில் சிக்கிய எடப்பாடி.. இனி அவ்ளோதான்?- இந்த ட்விஸ்டை பன்னீரே எதிர்பார்க்கல! சுற்றிலும் இருட்டு.. வலையில் சிக்கிய எடப்பாடி.. இனி அவ்ளோதான்?- இந்த ட்விஸ்டை பன்னீரே எதிர்பார்க்கல!

    சந்திரசேகர், செய்யாதுரை என அடுத்தடுத்து நடந்த ஐடி ரெய்டால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைமை மீது கடுமையான அதிருப்தி அடைந்துள்ளாராம்.

    நாளை உறுதி

    நாளை உறுதி

    அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவால் அது தடைபட்டது. நாளை மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஈபிஎஸ் தரப்பு உறுதியாக உள்ளது.

    டென்ஷனான ஈபிஎஸ்

    டென்ஷனான ஈபிஎஸ்

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது ஈபிஎஸ் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்கத் தயாராகும் நேரத்தில், தனக்கு செக் வைப்பதற்காகவே இந்த ரெய்டுகளை ஓபிஎஸ் கோரிக்கையின் பேரில் பாஜக தலைமை ஏவி இருப்பதாக கேள்விப்பட்டு டென்ஷனாகியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

    வேலுமணிக்கு வலை

    வேலுமணிக்கு வலை


    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான வடவள்ளி சந்திரசேகருக்கு தொடர்புடைய இடங்களில் 5வது நாளாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவை அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் சந்திரசேகர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'நமது அம்மா' நாளிதழின் வெளியீட்டாளராகவும் இருந்து வருகிறார். வேலுமணியின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டவரான சந்திரசேகரும் வலையில் சிக்கியுள்ளார்.

    எடப்பாடிக்கு செக்

    எடப்பாடிக்கு செக்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த செய்யாதுரை மீதும் குறி வைத்துள்ளது வருமான வரித்துறை. செய்யாதுரை மற்றும் இவரது மகன் நாகராஜன் ஆகியோர் நடத்தும் நிறுவனம் எஸ்பிகே அண்ட் கோ. முந்தைய அதிமுக ஆட்சியில் எஸ்பிகே நிறுவனம் தான் பெரும்பாலான சாலை மற்றும் கட்டுமான ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டது. செய்யாதுரை எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என அறியப்படுகிறது. அவருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள், நெருக்கமானவர்களின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    டெல்லிக்கு எதிரான மூவ்

    டெல்லிக்கு எதிரான மூவ்

    அடுத்தடுத்து நடைபெற்ற இந்த ரெய்டுகளால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி, இதில் நிச்சயம் பாஜக தலைமையின் கை இருக்கும் என தனது ஆதரவாளர்களிடம் பேசியுள்ளார். அவர்களும், ஈபிஎஸ்ஸின் கருத்தை ஆமோதித்துள்ளனர். இதையடுத்துத்தான், டெல்லிக்கு எதிரான ஒரு நகர்வை உடனடியாக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

    முன்பு 23.. அப்புறம் 16

    முன்பு 23.. அப்புறம் 16

    அதாவது, ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக இருந்தது. தனக்கு எழுந்த சிக்கலால் எந்த தீர்மானத்தையும் ஈபிஎஸ் தரப்பு நிறைவேற்றவில்ல. இந்நிலையில், நாளை நடைபெறும் பொதுக்குழுவில் நிறைவேற்றுவதற்கு 16 தீர்மானங்களை தயார் செய்துள்ளனர். இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    தீர்மானங்கள் நீக்கம்

    தீர்மானங்கள் நீக்கம்

    அதேநேரம், முன்னதாக முடிவெடுத்த 23 தீர்மானங்கள் லிஸ்ட்டில் இருந்த பலவற்றை நீக்கிவிட்டார் ஈபிஎஸ். அதில் முக்கியமான ஒன்று பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானம் ஆகும். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்ட பிரதமர் மோடியை பாராட்டுவதாக தீர்மானம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

     பாஜகவுக்கு எதிராக

    பாஜகவுக்கு எதிராக

    பிரதமர் மோடியை பாராட்டும் தீர்மானத்தை இப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு நீக்கியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மத்திய பாஜக அரசு செயல்படுவதால் தான் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மீது ஐடி ரெய்டு நடத்தப்பட்டது என்பதால் கோபமடைந்தே எடப்பாடி பழனிசாமி இந்த தீர்மானத்தை நீக்கியதாகக் கூறப்படுகிறது.

    English summary
    Edappadi Palaniswami is angry with BJP because of Income Tax raids on people close to him. It is said that the resolution praising PM Modi was removed as a reaction to this move by the BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X