செங்கோட்டையன் சீக்ரெட் கையில இருக்கு.. எடுத்து விட்டா அவ்ளோதான்.. ரொம்ப ஆடுனா! எடப்பாடி மிரட்டல்
ஈரோடு: ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, தவெக செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்து பேசினார். உன்னை பற்றி என்னிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கிறது. வெளியில் விட்டால் நாறிப்போய்விடும்.. நான் முதலமைச்சராக இருக்கும்போது நீ என்னென்ன வேலை செஞ்சாய் என எல்லாத்தையும் எடுத்து வைத்திருக்கிறேன்.. வாய் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசாதீங்க.." என்று கூறினார்.
மேலும், செங்கோட்டையன் அமைச்சராகிய போது, அவரது மனைவி மற்றும் மகனே அம்மா ஜெயலலிதாவிடம் வந்து புகார் கொடுத்தனர். இதனால் அம்மாவே இவரையா நான் கட்சியில் வைத்திருந்தேன் என்று கூறியதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மனைவியும், மகனும் புகார் கொடுத்தாங்க
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். மலைப்பாம்பு போல் ஊர்ந்து வந்து முதல்வர் பதவியை வாங்கினார் என்றும், இரவு வரை நான் தான் முதல்வராக தேர்வாகி இருந்தேன்.. காலையில் காசு கொடுத்து எல்லாத்தையும் மாற்றியவர் எடப்பாடி என்றும் பேசியிருந்தார்.
இந்த நிலையில் செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்து கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- ரொம்ப கீழ்த்தரமாக பேசக்கூடிய மனிதர் இந்த செங்கோட்டையன். மரியாதை கொடுத்தா பிரயோஜனம் இல்லை. இந்த உலகத்துல எல்லாரும் மனைவியும், மகனும் புருஷன் நல்லா இருக்க வேண்டும் என்று தானே நினைப்பாங்க.. அவங்களுக்கு பதவி கொடுத்தால் சந்தோஷப்படுறது அவங்களாகத்தானே இருக்கும். ஆனால் அம்மா ஜெயலிலதா செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவியை கொடுத்த போது அவரது மகனே அதை எதிர்த்தார்.
மோசமான நபர் என அம்மாவே சொன்னார்..
செங்கோட்டையனின் மனைவி மற்றும் மகன் தலைமை செயலகத்திற்கு வந்து புகார் கொடுத்தாங்க.. அது கேவலமான புகார். நான் இப்போது அதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் கோபிசெட்டிபாளையத்தில் இருக்கும் எல்லாருக்கும் தெரியும். அப்படி மனைவியும், மகனும் போய் அம்மாவிடம் சொன்னாங்க.. நான் கீழே தான் இருக்கேன். அவர்கள் கீழே இறங்கி சென்றதும் செங்கோட்டையனின் பதவியை பறிச்சாங்க அம்மா.. செங்கோட்டையன் எப்பேர்பட்ட ஆள் என்று எல்லாருக்கும் தெரியும்.
என்னையை அழைத்து அம்மா என்னிடம் சொன்னாங்க.. இப்பேர்பட்ட ஒருவரை நம் கட்சியில் வைத்து இருந்ததே தப்பா போச்சு.. வேற யாரும் இப்படி புகார் கொடுத்தது இல்லை. கிளை செயலாளர் கூட இப்படி ஒரு புகார் வந்தது இல்லை. அமைச்சராகவும், பலமுறை எம்.எல்.ஏவாக இருக்கின்றவர் மீது அவரது மனைவியும், மகனும் புகார் கொடுத்தது எனது மிகப்பெரிய தப்பு.. மோசமான நபர் என்று அம்மாவே சொன்னார்..
வெளியில் நடமாட முடியாது
அப்படிப்பட்ட ஆளை நான் அமைச்சராக ஆக்கினது தான் எனது தவறு.. என்னிடம் அழுது புலம்பினார். கெஞ்சி கண்ணீர்விட்டார். இப்போ என்னடா என்றால் என்னை பற்றி பேசுகிறார். வாய்க்கொழுப்பில் பேசுகிறார். நீ அழுதது எனக்கு தெரியாதா? உண்மையாகவே எனக்கு நல்ல நண்பராக தான் இருந்தார். அந்த நட்பின் அடிப்படையில் தான் உங்களை நான் அமைச்சரவையில் வாய்ப்பு கொடுத்தேன். ஆனால் நீங்க அப்படியா..
செங்கோட்டையன் சாலையில் நடந்து செல்ல முடியாது.. அசிங்கமாக போய்விடும். நீ போட்ட ஆட்டமெல்லாம் எனக்கு தெரியும். நீ கோபிசெட்டிபாளையத்தில் நடக்க முடியாது.. அவ்வளவு ஆதாரங்களை எடுத்து வைத்திருக்கிறேன்.. நான் முதலமைச்சராக இருக்கும் போதே எல்லா ஆதாரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டேன். நீங்க என்ன ஆட்டம் போட்டீங்க என்று எனக்கு தெரியும்.. திமுகவின் பிடீமா இருப்பீர்கள் எனக்கு அப்போவே தெரியும். எல்லாத்தையும் எடுத்து வச்சுருக்கேன்.
திமுகவின் பி டீம் ஆகிவிட்டார்
சொந்த தொகுதியின் நலத்திட்ட நிகழ்ச்சியிலேயே செங்கோட்டையன் வரவில்லை. கேட்டால் ஜெயலலிதா படம் வைக்கவில்லை என சும்மா காரணம் சொல்றது.. சட்டசபையில் ஒரு வார்த்தை கூட திமுகவை எதிர்த்து பேச மாட்டார். அமைதியாக இருப்பார். திமுகவின் சைக்கிள் வழங்கும் திட்டத்தில் எல்லாம் கலந்துகொண்டார். அப்பவே இவர் திமுகவின் பிடீம் ஆகிவிட்டார். ஆனால் நான் கண்டுபிடித்துவிட்டேன். இவரை மன்னிக்க கூடாது.. ஓட்டு போட்டு எம்.எல்.ஏ ஆக்குனது நீங்க தான்." என்று கூறினார்.
-
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
தேன்கூட்டில் கல்லெறிந்ததா தவெக? வேலுமணி கிட்ட சிவி சண்முகம் கேட்ட அந்த கேள்வி? அப்ப எடப்பாடி முடிவு? -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications