சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அது படு கேவலம்.. சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்..ஜெயக்குமாரை போட்டுத்தாக்கும் கோவை செல்வராஜ்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பெயர் பலகையை ஜெயக்குமார் எடுத்து வைத்துக் கொண்டது கேவலமான செயல். தரமற்ற செயலை ஒருவர் செய்யும்போது தரமானவர்கள் அதனை கண்டுகொள்ள மாட்டார்கள். சிங்கம் எப்போதுமே சிங்கிளாகத்தான் வரும் என்றும் கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.

Recommended Video

    அதிமுக பலகையை நகர்த்திய ஜெயக்குமார்..

    நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது. 2023 மார்ச் 31ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

    இதற்கென 6 பி என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அனைத்து தலைமை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையிலும் ஆலோசனை கூட்டம் நடத்த உத்தரவிட்டார். அதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    'அவருக்கு’மட்டும்தான் அனுமதி! ஓபிஎஸ் ஆதரவாளரை வெளியே விரட்டிய போலீஸ்! தேர்தல் ஆணைய கூட்டத்தில் பரபர!'அவருக்கு’மட்டும்தான் அனுமதி! ஓபிஎஸ் ஆதரவாளரை வெளியே விரட்டிய போலீஸ்! தேர்தல் ஆணைய கூட்டத்தில் பரபர!

    அரசியல் கட்சியினர் பங்கேற்பு

    அரசியல் கட்சியினர் பங்கேற்பு

    இந்தக்கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உட்பட 9 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓ.பன்னீர் செல்வம் சார்பில் முதல் ஆளாக வந்தார் கோவை செல்வராஜ். எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் ஜெயக்குமாரும், பொள்ளாச்சி ஜெயராமனும் பங்கேற்றனர். கோவை செல்வராஜூக்கு முன்பு இருந்த பெயர் பலகையை எடுத்து தனக்கு முன்பாக வைத்துக்கொண்டார் ஜெயக்குமார்.

    உண்மையான அதிமுக

    உண்மையான அதிமுக

    கருத்து கேட்பு கூட்டத்திற்குப் பிறகு பேசிய இரண்டு தரப்பினருமே நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று சொந்தம் கொண்டாடினர். அதிமுக என்றார் நாங்கள்தான் என்று சொன்னார் ஜெயக்குமார். செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், பன்னீர்செல்வம் தலைமையிலான அணிதான் உண்மையான அதிமுக என்று கூறினார்.

    தேர்தல் ஆணையம் சொல்வதென்ன

    தேர்தல் ஆணையம் சொல்வதென்ன

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் கொடுத்ததின் பேரில் அனைத்து கட்சிகளுடனான கூட்டத்தில் கலந்துகொண்டேன். ஜெயக்குமார் என்ன வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்றுதான் உள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தான் இடையில் நடைபெற்ற நிகழ்வுகள் எதுவும் தேர்தல் ஆணையத்தில் பதிவாகவில்லை.

    படு கேவலமான செயல்

    படு கேவலமான செயல்

    அதிமுக பெயர் பலகையை ஜெயக்குமார் எடுத்து வைத்துக் கொண்டது கேவலமான செயல். அமைச்சராக, எம்எல்ஏவாக இருந்தவர் இப்படி செய்யலமா? தரமற்ற செயலை ஒருவர் செய்யும்போது தரமானவர்கள் அதனை கண்டுகொள்ள மாட்டார்கள். அதிமுக சார்பில் இனி அனைத்து நிகழ்ச்சி, கூட்டங்களிலும் பங்கேற்க போவதாக தெரிவித்தார்.

    சிங்கம் சிங்கிளாத்தான் வரும்

    சிங்கம் சிங்கிளாத்தான் வரும்

    ஓபிஎஸ் தரப்பில் இருந்து நீங்கள் ஒருவர் மட்டுமே வந்துள்ளீர்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்வராஜ், சிங்கம் சிங்கிளாக தான் வரும். அண்ணன் அனுப்புகிற ஒரு ஆள் போதும் இதுபோன்றவர்களை அடக்கி விடடலாம் என்றும் தெம்பாக பேசினார் கோவை செல்வராஜ்.

    English summary
    Jeyakumar taking the AIADMK name board and keeping it is a despicable act. Quality people don't notice when someone does something bad. Coimbatore Selvaraj said that lions always come single.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X