Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருகிறது. அதிமுக - பாஜக - திமுக என கூட்டணிக்கும் செல்லாமல் தனித்து களம் காணும் முடிவை ஏற்கனவே எடுத்துள்ள விஜய், தற்போது வேட்பாளர் தேர்வில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தற்போது வேட்பாளர்களுடனான நேர்காணல் நடைபெற்ற வரும் நிலையில், விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகவுள்ளது. குறிப்பாக இன்று புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என தகவல்வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதிமுக - பாஜகவுடனான கூட்டணி குறித்த பரபரப்பு அதிகரித்தது. எண்டிஏவில் தவெக இணையும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் பரவின.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 tvk vijay

இந்நிலையில், பாஜக - அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்ற தகவல்கள் முற்றிலும் தவறானவை. எந்த தரப்புடனும் எந்த மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என தவெக தரப்பு அதிகாரப்பூர்வமாக மறுத்தது. விஜய்யும் நேரடியாக அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல்

இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இரண்டாம் கட்ட நேர்காணல் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்த விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டனர். கடந்த வாரம் நடைபெற்ற முதல் கட்ட நேர்காணலில் சுமார் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

தவெக தனித்துப் போட்டி

இந்த நிலையில், தற்போது மேலும் 50 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் நேரடியாக சந்தித்து இறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இதுவரை மொத்தம் 110 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கான தேர்வும் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அடுத்த வார இறுதிக்குள் முழு பட்டியலும் தயாராகி விடும் என்றே கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தவெக நேர்காணல்

இந்த வேகமான நடவடிக்கை, தேர்தலை மிகவும் தீவிரமாக எதிர்கொள்ள தவெக தயாராகி வருவதை காட்டுகிறது. இந்த நேர்காணல்களில் சில முக்கிய நபர்களும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தொழிலதிபர்கள், இளைஞர் முகங்கள் என பல தரப்பினருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்பதும் கவனிக்கத்தக்கது. இதன் மூலம் அனுபவமும், புதிய முகங்களும் கலந்து இருக்கும் ஒரு கலப்பு அணியை உருவாக்கும் முயற்சியில் விஜய் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

பாஜக கூட்டணி

இந்நிலையில், தமிழகத்தைத் தாண்டியும் தவெக தனது கவனத்தை விரிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனித்து போட்டியிடும் முடிவை விஜய் எடுத்துள்ளார். ஆரம்பத்தில் அங்குள்ள என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு தவெக தரப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அது நிகழாததால், அனைத்து 30 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல்

இதற்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட விஜய் திட்டமிட்டுள்ளார். புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி தேதி நெருங்கி வரும் நிலையில், இந்த அறிவிப்பு அரசியல் சூழ்நிலையை மேலும் சூடுபிடிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை காரணமாக, திங்கள்கிழமை ஒரே நேரத்தில் அனைத்து வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

110 வேட்பாளர்கள்

வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன், அடுத்த கட்டமாக புதுச்சேரியில் தீவிர பிரச்சாரத்தை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விஜய் நேரடியாக களமிறங்கி 'சூறாவளி' பிரச்சாரம் நடத்துவார் எனவும் கூறப்படுகிறது. வேட்பாளர் தேர்வு முதல் பிரச்சார திட்டம் வரை அனைத்தையும் ஒரே நேரத்தில் வேகமாக முன்னெடுத்து வரும் தவெக, இந்த தேர்தலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்க முயற்சித்து வருவதாகக் கூறுகின்றனர் தவெகவினர். 110 வேட்பாளர்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ள நிலையில், முழு பட்டியல் வெளியான பிறகு தமிழக அரசியல் களம் மேலும் பரபரப்பாகும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+