Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 பேரால் வந்த குழப்பம்.. ஒருவருக்கு தலைமை கழக பதவி.. இன்னொருவருக்கு ரிவீட்.. தூக்கி அடித்த எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பொன்னையனுடன் பேசியதாக சர்ச்சைக்குரிய ஆடியோவில் இடம்பெற்ற அதிமுகவைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்னையன், அதிமுக பிரமுகர் ஒருவருடன் பேசியதாக வெளியான ஆடியோ அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆடியோவில் பேசியதாக கூறப்பட்ட பொன்னையனுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பதவி அளித்த ஈபிஎஸ், நாஞ்சில் கோலப்பனை கட்சியை விட்டே தூக்கி அடித்துள்ளார்.

வெளியான ஆடியோ

வெளியான ஆடியோ

கன்னியாகுமரி மாவட்டத்தைச் அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள் செயலாளர் நாஞ்சில் கோலப்பன் என்பவரிடம், அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் போனில் பேசியதாக சமீபத்தில் வெளியான ஆடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமி தொடங்கி முன்னாள் அமைச்சர்கள் பலர் தொடர்பான பல்வேறு ரகசியங்களையும், கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் வெளிப்படுத்துவதாக அந்த ஆடியோவில் இருந்தது. ஆனால், அதில் பேசியது தான் இல்லை என்றும், மிமிக்ரி செய்யப்பட்டது என்றும் பொன்னையன் மறுப்பு தெரிவித்தார்.

ஈபிஎஸ் தரப்பில் குழப்பம்

ஈபிஎஸ் தரப்பில் குழப்பம்

அதேசமயம், போனில் மறுமுனையில் பேசியதாக கூறப்படும் அதிமுகவைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பன், போனில் பேசியது தானும், முன்னாள் அமைச்சர் பொன்னையனும் தான் எனத் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பான ஆதாரமும் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்தார் நாஞ்சில் கோலப்பன். இந்த ஆடியோவால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிர்ச்சியடைந்தனர். கே.பி.முனுசாமி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் பொன்னையன் மீது கடும் கோபத்திற்கே சென்றனர். இதனால் ஓபிஎஸ் தரப்பினர் உற்சாகமடைந்தனர்.

பொன்னையனுக்கு பதவி

பொன்னையனுக்கு பதவி

இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிய நிலையில் அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளை புதிதாக நியமித்தார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக துணை பொதுச்செயலாளராக கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நியமிக்கப்பட்டார். பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளியாகி தனது தரப்புக்குள் புயல் வீசிய நிலையிலும் பொன்னையனுக்கு தலைமைக் கழக பதவி வழங்கப்பட்டது.

 தூக்கி அடிக்கப்பட்ட கோலப்பன்

தூக்கி அடிக்கப்பட்ட கோலப்பன்

அதே நேரம், பொன்னையனுடன் மறுமுனையில் பேசிய நாஞ்சில் கோலப்பன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 22 பேரை ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ள நிலையில், தற்போது மேலும் 21 பேரையும் கட்சியை விட்டே நீக்கியுள்ளார் ஈபிஎஸ்.

21 பேர்

21 பேர்

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். அந்தப் பட்டியலில் தான் பொன்னையனுடன் பேசிய ஆடியோ சர்ச்சையில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்ட அதிமுக பிரமுகர் நாஞ்சில் கோலப்பனும் இடம்பிடித்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+