“இல்ல இல்ல.. எடப்பாடி பழனிசாமிக்கு அதீத துணிச்சல்.. அதனால் இந்த கூட்டணி” கலாய்த்த சீமான்!
திருச்சி: மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் இணங்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக பாஜக கருத்துகளை எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அதீத துணிச்சல் காரணமாக அவ்வாறு பேசுகிறார் என கிண்டலாக கூறியுள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அதிமுக தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கேட்டதற்கு, "திராவிடக் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கக்கூடிய நிலையில்தான் இருக்கிறார்கள். 2026க்கு பிறகும் பாஜக இரண்டு ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருக்கும் என்பதால், அந்தக் கட்சியுடன் இணங்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக பாஜக கருத்துகளை எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்" என்றார்.
அப்படி என்றால் பயத்தின் காரணமாக எடப்பாடி பழனிசாமி அப்படி பேசுகிறாரா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதீத துணிச்சல் காரணமாக அவ்வாறு பேசுகிறார் என கிண்டலாக பதிலளித்தார். 2026இல் அதிமுக ஆட்சிக்கு வரும் என எடுத்துக் கொள்ளலாமா? என்கிற கேள்விக்கு, "நான் அப்படி கூறவில்லை. என்னுடைய பேச்சுக்கு நீங்கள் பொழிப்புரை எழுத வேண்டாம்" எனத் தெரிவித்தார்.
ஆட்சியில் பங்கு என கட்சிகள் கோரிக்கை விடுப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சீமான், "தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் எனப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி ஆட்சியில் பங்குபெறும் திமுக, மாநிலத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவதில்லை.
'மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் தன்னாட்சி' எனக் கூறியவர்கள், தற்போது 'மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் குடும்ப ஆட்சி' என்கிற நிலையில் இருக்கிறார்கள். 2006ல் வலிமை குறைந்து இருந்தது திமுக. அப்போதும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தரவில்லை. ஒரு கோடி நபர்களை உறுப்பினர்களாக இணைத்துள்ளதாக கூறும் திமுக, வாக்குக்கு காசு கொடுக்காமல் இருக்குமா?" என்று கேள்வி எழுப்பினார்.
'பசு பாதுகாப்பு' என பாஜக கூறுவதும், 'மாடுகளை பாதுகாக்கிறேன்' என நீங்கள் கூறுவதும் ஒன்றாக இருப்பதாக விமர்சனம் வைக்கப்படுகிறதே என்கிற கேள்விக்கு, "விமர்சனம் வைப்பவர்கள் பால், தயிர் சாப்பிட மாட்டார்களா?" என பதில் கேள்வி எழுப்பினார்.
-
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
இனி யாருக்காக அரசியல் செய்யணும்.. கலக்கத்தில் சீமான்.. லைம்லைட்டை இழந்து நிற்கும் நாம் தமிழர்? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!












Click it and Unblock the Notifications