சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈரோடு கிழக்கு தொகுதி: எல்லா கேள்விக்கும் 2 நாளில் விடை.. அண்ணாமலை

இன்னும் 2 நாட்களில் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: இது பாஜகவிற்கான தேர்தல் இல்லை. பாஜக பலத்தை பரிசோதிக்க கூடிய தேர்தல் இல்லை. எங்களுக்கான தேர்தல் 2024. அதில் மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டியது எங்கள் கடமை. 2 நாட்களில் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என்று கே அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளையில் இருந்து வேட்பு மனு தாக்கல் ஆரம்பாகிறது. அகில இந்திய தலைமையுடன் ஆலோசித்து இன்னும் ஒரிரு நாளில் தகவல் தெரிவிக்கப்படும்.

மோடி சொல்லிட்டாரு.. ரெடியாகுங்க.. அலெர்ட் செய்த அண்ணாமலை! பிப். 2 நைட்டே பட்ஜெட் ஹேண்ட்புக்.. ஓஹோ!மோடி சொல்லிட்டாரு.. ரெடியாகுங்க.. அலெர்ட் செய்த அண்ணாமலை! பிப். 2 நைட்டே பட்ஜெட் ஹேண்ட்புக்.. ஓஹோ!

பணத்தை கொடுக்க ஆரம்பித்து விட்டனர்

பணத்தை கொடுக்க ஆரம்பித்து விட்டனர்

நிற்கக் கூடிய ஒரு வேட்பாளர் வலிமை பொருந்திய வேட்பாளராக நிற்க வேண்டும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். கடந்த முறை காங்கிரஸ் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இந்த முறை இப்போதே பணத்தை கொடுக்க ஆரம்பித்து விட்டனர். அமைச்சர்கள் பட்டியல் பொட்டு பணம் கொடுப்பார்கள் என்று நான் ஏற்கனவே சொன்னதுதான் நடந்து கொண்டு இருக்கிறது.

2 நாட்களில் எல்லா கேள்விகளுக்கும்

2 நாட்களில் எல்லா கேள்விகளுக்கும்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஒரு வலுவான வேட்பாளர் நிற்க வேண்டும். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இதன் மூலம் திமுக எப்படிப்பட்ட தீய சக்தியாக மாறியிருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும். இது பாஜகவிற்கான தேர்தல் இல்லை. பாஜக பலத்தை பரிசோதிக்க கூடிய தேர்தல் இல்லை. எங்களுக்கான தேர்தல் 2024. அதில் மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டியது எங்கள் கடமை. 2 நாட்களில் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.

 அமைச்சர் எ.வ வேலு பேசிய வீடியோ

அமைச்சர் எ.வ வேலு பேசிய வீடியோ

வீடியோவில் 31-ந் தேதிக்குள் பணம் கொடுத்துவிட வேண்டும் என்று அமைச்சர் பேசுகின்றார். எந்த எந்த அமைச்சரால் பணம் கொடுக்க முடியாது, எந்த எந்த அமைச்சரால் பணம் கொடுக்க முடியும் என்று பேசுகின்றார்.
நீலகிரியின் பொறுப்பு அமைச்சரை மிக மிக தவறாக கீழ்த்தரமான வார்த்தையில்அமைச்சர் கே. என். நேரு பேசியுள்ளார். இது இந்த தேர்தலுக்கு பணம் கொடுக்கிறாங்க என்பது பற்றிய விஷயம் மட்டுமின்றி, திமுக கட்சி தனது சகாக்களை எப்படி பார்க்கிறது, தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து ஒருவர் அமைச்சராக வந்தால் அவரை எப்படிப்பட்ட வார்த்தையால் கே. என். நேரு பேசுகிறார என்பதை காட்டுகிறது. சமூக நீதியை பற்றி இவர்கள் நமக்கு பாடம் எடுக்கிறார்கள்.

அது உண்மையான ஆடியோ

அது உண்மையான ஆடியோ

பாஜக தலைவர்கள் நாளை காலையில் இந்த வீடியோவை தேர்தல் ஆணையத்திடம் கொடுக்க இருக்கின்றனர். அந்த வீடியோவை பார்த்துவிட்டு தேர்தல் ஆணையம் மாநில டிஜிபிக்கு அனுப்பலாம், தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பலாம். எ. வ வேலு அந்த வீடியோவை நான் எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே நான் விலக தயார். கே. என். நேரு பேசியதை நான் அப்படியே போட்டிருக்கிறேன். அது உண்மையான ஆடியோ என்பது உறுதி செய்யப்ட்டது என்றால் முதல்வர் தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கனும்.

உத்தரபிரதேசம் 2 ஆம் இடம்

உத்தரபிரதேசம் 2 ஆம் இடம்

தேர்தல் ஆணையம் அதை முறையாக விசாரிக்கத்தான் போகிறது. ஈரோடு மேடையில் அமைச்சர் பேசிய ஆடியோ செய்தியாளர்கள் மைக்கில் பதிவாகியுள்ளது. செல்போனில் அந்த உரையாடல் நடைபெறவில்லை. உத்தர பிரதேச அரசு பொருளாதாரத்தில் அடுத்த கட்டத்திற்கு செல்ல தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ரிஜிஸ்டர் ஆன ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் உத்தரபிரதேசம் 2 ஆம் இடத்தில் உள்ளது. தமிழகம் 4 ஆம் இடத்தில் உள்ளது.

 யாரும் தமிழ்நாடு வரமாட்டார்கள்

யாரும் தமிழ்நாடு வரமாட்டார்கள்

உத்தர பிரதேசத்தில் 11 விமான நிலையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 4 விமான நிலையங்கள் உள்ளன. அனைத்து டேட்டாவையும் ஒப்பிட்டு பாருங்கள். இன்னும் 10 ஆண்டுகளில் இதே மாதிரி தமிழ்நாடு சென்றது என்றால் உத்தரபிரதேசம் இந்தியாவின் வளர்ச்சி எந்திரமாக மாறும். பீகாரில் இருந்து உத்தர பிரதேசத்தில் இருந்து யாரும் தமிழ்நாடு வரமாட்டார்கள். எனவே இங்கு வருபவர்களை வைத்து அரசியல் செய்யலாம் என நினைத்தால் அது தவறானது. அந்த அரசியலை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். பிபிசி ஆவணப்படம் உண்மை இல்லை. அது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. 2002 ல் என்ன நடந்தது என்பது பற்றி நாட்டு மக்களுக்கு அனைவருக்கும் தெரியும். ஆவணப்படத்தை தடுக்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை. தடை செய்யப்பட்ட ஆவணப்படத்தை யார் வெளியிட்டாலும் கவலையில்லை. அது பொய் செய்தி" என்றார்.

English summary
This is not an election for BJP. There is no election to test BJP's strength. Our election is 2024. It is our duty to answer in the People's Forum. K Annamalai informed that all queries will be answered in 2 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X