பல நாடுகளில் முடங்கிய ட்விட்டர்.. எலான் மஸ்க்கை திட்டிய நெட்டிசன்கள்.. சரியான பிரச்சனை..என்ன காரணம்?
சென்னை: உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். இந்நிலையில் தான் அவர் புதிய விதிகளை அறிவித்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க ட்விட்டரில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக ட்விட்டர் பக்கம் செயலிழந்து Error என பயனாளர்களுக்கு காட்டியதால் இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகளின் நெட்டிசன்கள் எலான் மஸ்க்கை திட்டி தீர்த்து வரும் நிலையில் அடுத்த சில மணிநேரத்தில் பிரச்சனை சரியானது. இதற்கு என்ன காரணம்?
உலகில் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். தற்போது ட்விட்டரின் செயல் அதிகாரியாக எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார்.
இவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனேயே ட்விட்டரின் செயல் அதிகாரி பராக் அகர்வால் உள்பட ஏராளமானவர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்தார். மேலும் தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.

ட்விட்டரில் பிரச்சனை
ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை குறிப்பிடும் வகையிலான ‛ப்ளூடிக்' வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் எலான் மஸ்க் தனது திட்டத்தில் திடமாக உள்ளார். இந்நிலையில் தான் அமெரிக்கா உள்பட பல நாடுகளில் ட்விட்டர் பக்கம் முடங்கி உள்ளது. ட்விட்டர் பக்கம் சரியாக இயங்காத நிலையில் Error என காட்டியது. இந்தியாவிலும் சிலர் பிரச்சனையை சந்தித்ததாக கூறப்படுகிறது.

உறுதியான பிரச்சனை
இதனால் பொதுமக்கள் ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை நேற்று முதல் உள்ளதாக கூறப்படுகிறது இதனை சமூக வலைதள கண்காணிப்பு தளமான Downdetector.com உறுதி செய்துள்ளது. அந்த இணையதளத்தின் படி செல்போன் மற்றும் டெஸ்க்டாப் ட்விட்டர் பயனர்கள் பிரச்சனையை சந்தித்துள்ளனர்.

என்னென்ன பிரச்சனை?
ட்விட்டர் பக்கத்தில் வரும் Error மெசேஜால் அவர்களால் தங்களின் கணக்கை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிலருக்கு ட்விட்டர் பக்கத்தை டெஸ்க்டாப்பில் Signin செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ட்விட்டருக்குள் சென்றால் தானாகவே வெளியே வந்துவிடும் வகையிலான பிரச்சனையை சந்தித்தனர். அமெரிக்காவில் இரவு 7.40 மணி முதல் இந்த பிரச்சனை உள்ளது. 10 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து Refresh செய்தாலும் கூட ட்விட்டர் இயங்கவில்லை.

காரணம் என்ன?
தற்போது ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. இதுபற்றிய விபரங்களை ட்விட்டர் நிறுவனம் எதுவும் வெளியிடவில்லை. இருப்பினும் கூட தொழில்நுட்ப கோளாறு, சர்வர் பிரச்சனை உள்ளிட்டவற்றால் ட்விட்டர் செயல்பாடு பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியது முதல் தற்போது 3 வது முறையாக ட்விட்டரில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு சில மணிநேரம் கழித்து மீண்டும் ட்விட்டர் பக்கம் இயங்க தொடங்கியது.

எலான்மஸ்க்கை திட்டும் நெட்டிசன்கள்
இதற்கு முன்பு முதல் முறையாக கடந்த அக்டோபர் 4ம் தேதி ட்விட்டரின் டெஸ்க்டாப் வெர்சனில் பிரச்சனை ஏற்பட்டது. அதன்பிறகு கடந்த மாதம் 12ம் தேதி இந்தியா உள்பட பல நாடுகளில் ரீலோட் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டது. தற்போது 3வது முறையாக பிரச்சனை உருவாகி உள்ளது. அதேவேளையில் நெட்டிசன்கள் எலான்மஸ்க்கை திட்டி தீர்த்து வருகின்றனர். இதுதொடர்பான மீம்ஸ்கள் தற்போது இணையதளங்களில் பரவி வருகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications