நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசிய அரசு பள்ளி மாணவி! ஆட்டோ டிரைவர் மகளுக்கு எத்திராஜ் கல்லூரி உதவி
சென்னை: தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் படித்து 578 மதிப்பெண்களை பெற்ற மாணவி பூங்கோதைக்கு எத்திராஜ் கல்லூரியில் அவர் விரும்பும் படிப்பை முழு உதவித்தொகையுடன் வழங்க முன்வந்துள்ளதாக கல்லூரியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதை எத்திராஜ் கல்லூரியின் தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார். அந்த மாணவியிடமும் அவர் பேசியுள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 7.60 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 7.19 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 2,478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 397 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி உள்ளது.
Thanks for sharing! Truly inspiring! Spoke to Poongodhai now, and welcomed her to join Ethiraj College for Women, with a full scholarship! Best wishes! @omjasvinTOI https://t.co/ZvnaxK8FRt
— Mike Muralidharan (@mike_vmm) May 7, 2024
இந்த நிலையில் சென்னை பெரம்பூரை சேர்ந்த மாநகராட்சி பள்ளியில் பயின்றவர் பூங்கோதை. இவர் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 578/600 மதிப்பெண் பெற்று முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். அத்துடன் நுனி நாக்கில் ஆங்கிலத்தை சரளமாக பேசுகிறார். இவருடைய தந்தை ஆட்டோ ஓட்டுநர்.
இவர்கள் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். பொருளாதார ரீதியாக படிப்பதற்கு கஷ்டப்பட்ட நிலையில் சிறிய வீட்டில் படிக்கவும் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இவருடைய மூத்த சகோதரி பி.பார்ம் படித்து வருகிறார். பூங்கோதைக்கு பி.காம் படித்துவிட்டு சிஏ படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதாம்.
மேலும் அவர் வசிக்கும் கொடுங்கையூர் பகுதியில் உள்ள குழந்தைகள் உயர் கல்வி படிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். பூங்கோதையின் தந்தை பார்த்தீபன் தனது ஆட்டோவை அடகு வைத்து பொருளாதார ரீதியில் தேவைகளை பூர்த்தி செய்து வருவதாகவும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பூங்கோதையின் தாய் வீட்டு வேலைகளை செய்து கணவருக்கு பொருளாதாரத்தில் உதவி வருகிறார். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை கூறுகையில் எங்கள் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை சரளமாக பேசுவார்கள். அது போல் இங்கிருந்து படித்துவிட்டு செல்லும் மாணவர்கள் கல்லூரி தேர்வில் arrear வைத்ததே இல்லை என பெருமிதத்துடன் கூறுகிறார்.
மாநகராட்சி பள்ளிகளிலேயே முதல் இடம் பிடித்து சாதனை படைத்த பூங்கோதை கூறுகையில் நான் மாநகராட்சி பள்ளிகளிலேயே முதல் மாணவியாக தேர்வு ஆனதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அப்படியே வானத்தில் மிதப்பது போல் இருக்கிறது. என் பெற்றோர் கடைக்கு சென்றாலே விலை பட்டியலை பார்த்து பொருட்களை வாங்கலாமா வேண்டாமா என்ற இயலா நிலையை நான் மாற்றும் அளவுக்கு பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டும்.
வாழ்வில் அது போன்ற உயரத்தை அடைய வேண்டும். என் தந்தை ஆட்டோ டிரைவராக இருந்தாலும் நான் படிப்பதற்கு தேவையான அனைத்து சூழல்களையும் அமைத்து கொடுத்தார். எனது வெற்றிக்கு பெற்றோர், என் சகோதரி, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவரும் ஊக்கம் அளித்தார்கள். இவ்வாறு அந்த மாணவி ஆங்கிலத்தில் எங்குமே திக்கி திணறாமல் பேசுகிறார்.
அதிலும் அவர் பேசும் ஸ்டைல் இருக்கே அப்பப்பா! கேட்பதற்கே இனிமையாக இருக்கிறது. மாநகராட்சி பள்ளிகளிலேயே பூங்கோதை முதலிடத்தை பிடித்த நிலையில் பொருளாதார ரீதியில் அவருடைய இயலாமை உள்ளிட்டவை குறித்த அவருடைய பேட்டி வைரலானது.
இதையடுத்து மாணவி பூங்கோதைக்கு எத்திராஜ் கல்லூரியில் இலவசமாக சீட் தர கல்லூரி நிர்வாகம் முன் வந்துள்ளது. இது குறித்து எத்திராஜ் பெண்கள் கல்லூரியின் தலைவர் முரளிதரன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: மாணவியின் பேட்டியை பகிர்ந்தமைக்கு நன்றி. பூங்கோதையிடம் தற்போது பேசியிருக்கிறேன்.
அவர் பி.காம் படிக்க விரும்புகிறார். அந்த படிப்பை உதவித்தொகையுடன் வழங்குவதாக அவரிடம் தெரிவித்துள்ளேன் என பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மாணவிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications