"எட்டப்பர்கள்"முகத்திரை கிழிந்தது..நான் நினைத்து கூட பார்க்கவில்லை.. எடப்பாடி பழனிச்சாமி நெகிழ்ச்சி
அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: நம்மிடத்தில் எட்டப்பராக இருந்தவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது எட்டப்பர்களை வைத்து அதிமுகவை, திமுக வீழ்த்த நினைத்தால் நடக்காது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக நான் வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமான நிலையில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஓ. பன்னீர்செல்வம், பொருளாளர் பதவியிலிருந்து மட்டுமல்லாது கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ள அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது.

கட்சியில் இருந்து நீக்கம்
தன்னை கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமியை தான் கட்சியை விட்டு நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடனும், ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடனும் பேசி வருகின்றனர்.

அலுவலகத்திற்கு சீல்
அதிமுக அலுவலகம் முன்பு ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கட்சி அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருவாய் துறை அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளர்.

வெற்றியை தடுக்க சூழ்ச்சி
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் இன்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது நம்மோடு இருந்து கொண்டே நமது வெற்றியை தடுக்க சூழ்ச்சி செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

எட்டப்பர் முகத்திரை கிழிப்பு
நம்மிடத்தில் எட்டப்பராக இருந்தவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது எட்டப்பர்களை வைத்து அதிமுகவை, திமுக வீழ்த்த நினைத்தால் நடக்காது என்றும் கூறினார் எடப்பாடி பழனிச்சாமி.

உண்மை விசுவாசிகள்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக நான் வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. அதிமுக தொண்டர்களால் உழைத்து உருவாக்கப்பட்ட கட்சி. உண்மை விசுவாசிகளின் உழைப்புடன் அதிமுக ஆட்சி மீண்டும் அமையும் என்றார்.












Click it and Unblock the Notifications