முகேஷ் அம்பானியே தோற்று இருக்கிறார்.. பணத்தை மட்டுமே வைத்து ஜெயித்துவிட முடியாது.. நெட்டிசன் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முகேஷ் அம்பானியிடம், "பெரிய நிறுவனங்கள் ஏன் போட்டியிடுவதில்லை?" என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர் போட்டியிட்டிருக்கிறார். ஆனால் அந்தப் போட்டிகளில் தோல்வியடைந்த முயற்சிகள் பல இருக்கின்றன. ஏனெனில், பணத்தை மட்டும் வைத்து எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுவிட முடியாது என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.

நெட்டிசன் வெளியிட்ட பதிவில், முகேஷ் அம்பானியிடம், "பெரிய நிறுவனங்கள் ஏன் போட்டியிடுவதில்லை?" என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர் போட்டியிட்டிருக்கிறார். ஆனால் அந்தப் போட்டிகளில் தோல்வியடைந்த முயற்சிகள் பல இருக்கின்றன. ஏனெனில், பணத்தை மட்டும் வைத்து எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுவிட முடியாது.

Mukesh Ambani

ஐடி துறையில், அவருடன் போட்டியிடும் நிறுவனங்களிடமும் அதிகப் பணம் இருக்கிறது. அவர்களாலும் தங்களது சேவைகளின் விலையைக் குறைக்க முடியும். ஆனால் சிறிய தின்பண்ட விற்பனையாளர்களாலும், சாக்லேட் தயாரிக்கும் சிறிய நிறுவனங்களாலும் அப்படிச் செய்ய முடியாது. பெரிய நிறுவனம் விலையைக் குறைத்துப் போட்டியிடும்போது, அந்தச் சிறு நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன; சில நிறுவனங்கள் சந்தையிலிருந்து வெளியேறும் நிலையும் ஏற்படுகிறது.

அம்பானியின் சில தொழில்நுட்ப முயற்சிகள் என்ன ஆனது

1. JioSaavn: Spotify-க்குப் போட்டியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் Saavn நிறுவனத்தை அவர் வாங்கினார். ஆனால் அந்த முதலீட்டின் பலன் என்ன, இப்போது அதற்கான செலவை யார் ஏற்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பெரிதாக ஒர்க்அவுட் ஆகவில்லை.

2. JioChat மற்றும் JioMeet: WhatsApp, Zoom ஆகியவற்றுக்குப் போட்டியாக இவை அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இவற்றைப் பெருமளவில் மக்கள் பயன்படுத்துவதில்லை. காரணம், பணத்தை மட்டும் செலவழித்துப் பயனர்களை ஈர்த்துவிட முடியாது. பயனர் இடைமுகம் , பயனர் அனுபவம் (UX), வாடிக்கையாளர் ஆதரவு போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் சற்று கடினமான விஷயம்.

3. JioPages: Chrome உலாவிக்குப் போட்டியாகக் கொண்டுவரப்பட்ட இந்தத் தயாரிப்பை பெரிய அளவில் யாரும் பயன்படுத்தவில்லை.

4. JioBook: Chromebook-க்கு மாற்றாக, குறிப்பாகக் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட மலிவான மடிக்கணினி. இது தோல்வியடைந்துவிட்டது.

இதுபோல இன்னும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் எதுவும் வெற்றிபெறவில்லை என்பதே அந்தப் பதிவின் மொத்தக் கருத்து.

JioPC மற்றும் கிளவுட் கேமிங் திட்டங்களும் அடுத்து தோல்வியடையும் என்பது என் கணிப்பு என்று கூறியுள்ளார்.இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், இவரது கருத்தில் சில விஷயங்கள் ஓரளவு உண்மை என்றாலும், சில கருத்துக்கள் தவறானது ஆகும். ஏனெனில் JioPC மற்றும் கிளவுட் கேமிங் திட்டங்கள் இன்னும் அறிமுகமே ஆகவில்லை.. ஆனால் தோற்கும் என்று விமர்சிக்கிறார். அதேபோல் JioSaavn நன்றாகவே போகிறது. Spotify-க்குப் போட்டியாக களத்தில் ஓரளவு நன்றாக போகிறது,

JioChat என்பது WhatsApp, Zoom போன்றவற்றுடன் ஒப்பிடும்போது அவற்றின் மக்கள் பயன்பாடு குறைவு தான். ஆனால் நம்பகமான எண்ணிக்கைகள் இல்லாமல், முற்றிலும் தோல்வி என்று ஒதுக்கிவிட முடியாது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்திடம் அதிகப் பணம் இருப்பது, அது தொடங்கும் ஒவ்வொரு தொழிலிலும் வெற்றிபெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்ற இந்த நெட்டிசனின் வாதம் ஓரளவு ஏற்புடையாது தான். ஐடி துறையில் பயனர்களின் பழக்கம், தயாரிப்பின் தரம், வசதி, நம்பிக்கை, சேவையின் தொடர்ச்சியான அப்டேட்ரொம்ப முக்கியம். ஆனால் சிறிய தின்பண்ட நிறுவனங்களையும் மென்பொருள் நிறுவனங்களையும் ஒரே அளவுகோலில் ஒப்பிடவே இயலாது. பெரிய நிறுவனத்தின் விலை குறைப்பு சிறிய நிறுவனங்களைப் பாதிக்கலாம்; அதேவேளை, விலை குறைப்பு மட்டுமே போட்டியாளர்களை அழிக்கிறது என்று மொத்தமாக கூறிவிட முடியாது. உலகின் ஜம்பவான் கூகுள் கூட ஏஐ விஷயத்தில் தடுமாறுகிறது. பேஸ்புக்கிற்கு போட்டியாக ஆரம்பித்த கூகுள் பிளஸ் ஜெயிக்கவில்லை.. எல்லாரும் எல்லாமே ஜெயத்துவிட முடியாது. திறமை மற்றும் உழைப்பு மற்றும் மக்களின் வரவேற்பு தான் எதையும் தீர்மானிக்கும் என்பது நிஜம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+