ஜெம் வீரமணி வழக்கு.. திமுக ஆட்சியில் அழுத்தம் கொடுத்தது யார்? ஸ்டாலினுக்கு பெ.சண்முகம் நேரடி கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி தொடர்பாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெளிவு இல்லை என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். வழக்கை முடித்து வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூறிய சண்முகம், அதிகாரிகள் யார் என்பதற்கு ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெளிவு இல்லை என்றும் சாடியுள்ளார்.

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் பல்வேறு அதிர்ச்சியான தகவல் வெளியாகி வருகிறது. இந்த வழக்கில் வீரமணி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான வீடியோ வெளியாகி தமிழ்நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

P Shanmugam

இதில் திமுக ஆட்சியின் போது வழக்கு முடித்து வைக்க முயற்சிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்த விவகாரத்தில் திமுக ஆட்சியின் போது புகார் அளிக்கப்படுகிறது. முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. எஃப்ஐஆர் பதிவு செய்த பின் ஏன் மேல் விசாரணை நடத்தப்படவில்லை.

அந்த வீடியோ தெளிவாக இல்லை என்று ஒற்றை காரணத்தை சொல்லி இவ்வளவு வழக்கை முடித்து வைக்க முடியுமா? என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன். அப்படியென்றால் அதற்கான அரசியல் அழுத்தத்தை கொடுத்தது யார்? அப்படியென்றால் அதற்கான அரசியல் அழுத்தத்தை கொடுத்தது யார்? அதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் யார் என்பதற்கு ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் எந்த பதிலும் இல்லை.

குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் திமுகவின் நிலை என்று ஸ்டாலின் இப்போது சொல்கிறார். ஆட்சியில் இருந்த 2024ஆம் ஆண்டு இந்த புகார் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் பிரமுகர் கூறுகிறார். 2025ஆம் ஆண்டு இந்த வழக்கை முடிப்பதற்கு திமுக ஆட்சி காலத்தில் முயற்சி எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டுமே திமுக ஆட்சி காலத்தில் நடந்தவை தான்.

இந்த விஷயத்தை ஸ்டாலின் அவர் அறிக்கை விட்டு இருப்பதை போல் கடந்து சென்றுவிட முடியாது. தன்னுடைய ஆட்சி காலத்தில் இவ்வளவு பெரிய பாலியல் குற்றம் நடந்து இருக்கிற போது, உரிய விசாரணை நடத்தாததற்கு பொறுப்பேற்கிறேன். அதிகாரிகள் இந்த பிரச்சனையை உரிய முறையில் கவனத்திற்கு கொண்டு வரவில்லை என்ற முறையில் தான் அவர் பதில் சொல்வது நேர்மையாக இருக்குமே தவிர, எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கடந்து போவதால் இந்த பிரச்சனையை கடக்க முடியாது.

திமுக ஆட்சியின் போது அதிகாரிகள் கூட்டாக இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்றி இருக்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் பணம் கை மாறி இருக்கின்றன. அதேபோல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதற்கும், தமிழக அரசு விரைவாக நடவடிக்கை வேண்டிய கட்டாயத்திற்கும் நீதிபதியின் உத்தரவு தான் காரணமே தவிர, தவெக அரசு காரணம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+