குட்டி ஏசி, பெட், போன்.. சிறையில் "மாஜி" மணிகண்டன் சொகுசாக என்ஜாய் செய்தாரா?.. உண்மை என்ன!?
சென்னை: சைதாப்பேட்டை கிளை சிறையில் "என்ஜாயி எஞ்சாமி" என்று என்று சகல வசதிகளுடன் இருந்த மாஜி அமைச்சர் மணிகண்டன் சொகுசாக இருந்ததாகவும், இதனால் இவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி இதை மறுத்துள்ளார்.
சென்னையை பெசன்ட் நகரில் வசித்து வரும் நடிகை சாந்தினி அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக பாலியல் புகார் அளித்து இருந்தார். தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்து இருந்தார்.
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சாந்தினி நேரடியாக புகார் அளித்திருந்த நிலையில், மணிகண்டனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. 3 முறை தன்னை கர்ப்பமாக்கி அதை கலைக்க வைத்ததாக சாந்தினி போலீசில் புகார் அளித்தார்.

கைது
இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் இவர் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தனிப்படை அங்கு விரைந்து இவரை கைது செய்தனர். பின்னர் இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட் விசாரணைக்கு பின் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

சிறை
இந்த நிலையில் சைதாப்பேட்டை சிறையில் மணிகண்டன் சொகுசாக இருந்தது கூறப்பட்டது. இவரின் செல்லுக்குள் சின்ன பேட்டரி ஏசி, ஒரு ஆன்டிராய்டு போன், சார்ஜர், புது பிளேட், கப், மெத்தை என்று நிறைய வசதிகள் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. கைதி போலவே இவர் இல்லை, ஜாலியாக இருந்தார் என்றும் கூறப்பட்டது.

சொகுசு
இதன் காரணமாகவே மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இந்த செய்தி பொய்யானது என்று மறுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில் வசதிகளுடன் இல்லை. அந்த செய்தி பொய்யானது.

மாற்றம்
மணிகண்டனுக்கு எந்த சிறப்பு வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. எல்லா கைதிகளை போலவே அவரும் இருந்தார். அவர் இப்போது அல்ல முன்பே புழல் சிறைக்கு மாற்றப்பட்டுவிட்டார், என்று அமைச்சர் ரகுபதி விளக்கம் கொடுத்துள்ளார்.
-
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications