அவசரம்! செந்தில் பாலாஜியால் வர முடியாது! இன்றும் ஜாமீன் கிடைக்கல.. உயர் நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
சென்னை: மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்து பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. சட்ட விரோத பண பரிமாற்ற சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதால், குற்றச்சாட்டு பதிவிற்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுக்காக, செந்தில்பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக தாக்கல் செய்யபட்ட மனுவில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அதனால் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதால், குற்றச்சாட்டு பதிவிற்கு நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதி விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
செந்தில் பாலாஜி வழக்கு; சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது ஜாமீன் மனு சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. .உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அதன்பின் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும், அதுவரை ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி அல்லி முன்னிலையில் சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் அமலாக்க இயக்குனரகம் (இடி) தொடர்ந்த பணமோசடி வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது. அதற்குப் பதிலாக சிறப்பு நீதிபதி எஸ் அல்லி, குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்வதற்காக வழக்கை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து இன்றும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு உள்ளார். புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரையை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டார்.
வழக்கு போக்கு: முன்னதாக கடந்த வாரம் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். அப்போதே அவரின் உடல்நிலை மோசமாக இருந்தது.
கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யபட்ட மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில்பாலாஜி தரப்பிற்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தபட்ட பின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார். மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 49வது முறையாக நீட்டிக்கபட்டுள்ளது குறிப்பிடதக்கது












Click it and Unblock the Notifications