எடப்பாடிக்கு சிக்கல்.. தனி ‘கோஷ்டி’.. ஓபிஎஸ்ஸுக்கு ‘பாஸ்’ ஆகும் சீக்ரெட் தகவல்கள்.. என்ன நடக்குது?
சென்னை : எடப்பாடி பழனிசாமி அணியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதாகவும், முன்னர் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் ஈபிஎஸ் அணியில் தனித்துவிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.
அதிமுகவில் கடந்த ஜூன் மாதம் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே கடுமையாக வெடித்த அதிகார மோதலைத் தொடர்ந்து கட்சியே இரு அணிகளாக உடைந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த பலர் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவினர்.
தர்மயுத்தம் காலத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்துவந்த கேபி முனுசாமி, மாஃபா பாண்டியராஜன், மைத்ரேயன் உள்ளிட்டோரும் ஈபிஎஸ் அணிக்குச் சென்றனர்.
இந்நிலையில், ஈபிஎஸ் அணிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் ஓபிஎஸ் தரப்புக்கு பகிரப்படுவதாக சந்தேகம் எழுந்ததால், முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எதிர்காலம் யாருக்கு?
அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்ததிலிருந்து குழப்பம் தொடர்ந்து வருகிறது. பொதுக்குழுவை கூட்டி அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் கட்சியின் முழு கட்டுப்பாடும் அவர் வசம் இன்னும் வரவில்லை. அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் ஓபிஎஸ். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவும் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற என்ன தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை பொறுத்தே தான் அதிமுகவின் எதிர்காலம் யார் கையில் என்பதற்கான முடிவு தெரியும்.

ஈபிஎஸ் அணிக்குள் குழப்பம்
இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு நகர்வுகளைச் செய்து வருகின்றனர். டெல்லியில் தங்களது கரத்தை வலுப்படுத்தவும், கட்சியில் செல்வாக்கை அதிகரிக்கவும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் ஈபிஎஸ் அணிக்குள் பெரும் குழப்பம் நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது ஓபிஎஸ் தரப்புக்கு மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஓரங்கட்டும் சீனியர்கள்
எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள், ஓபிஎஸ் அணியில் இருந்து ஈபிஎஸ் அணிக்குச் சென்றவர்களை ஓரங்கட்டுவதாகவும், எடப்பாடி பழனிசாமியும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும், ஆலோசனைக் கூட்டங்களுக்கு கூட அழைப்பதில்லை என்றும் பேச்சுகள் எழுந்திருக்கின்றன. இதனை உறுதி செய்யும் வகையில் அதிமுக முன்னாள் எம்.பி மீண்டும் ஓபிஎஸ் அணிக்குத் தாவினார்.

மைத்ரேயன்
தர்மயுத்தம் தொடங்கிய போது ஓபிஎஸ் ஆதரவளித்த மைத்ரேயன், கடந்த 4 ஆண்டுகளாக ஓபிஎஸ்ஸின் ஆதரவாளராகவே செயல்பட்டு வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவிருந்த பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக அவரை சந்தித்து திடீரென தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். ஆனால், ஈபிஎஸ் அணியில் அவருக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை என்பதால் மனக் குமைச்சலிலேயே இருந்து வந்தார் மைத்ரேயன்.

ஓபிஎஸ் தான் இனி
இதனால் ஓபிஎஸ் அணிக்கே திரும்பியிருக்கும் அவர் ஓபிஎஸ் தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு, அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்தும் திறமை ஓபிஎஸ்ஸுக்கு மட்டும்தான் இருக்கிறது. எனக்கு புத்தி பேதலித்துப் போய் எடப்பாடிக்கு ஆதரவளித்து விட்டேன். இனி என்றும் ஓபிஎஸ்ஸுக்கு துணையாக இருப்பேன். எனக்கு உடல்நிலை சரியில்லாத போது என்ன அழைத்து நலம் விசாரித்தவர் ஓபிஎஸ் என மனம் நெகிழ்ந்து பாராட்டு பத்திரமும் வாசத்திருக்கிறார் மைத்ரேயன். இதையடுத்து அதிமுகவின் அமைப்பு செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மைத்ரேயன் நீக்கப்படுவதாக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.

ஓபிஎஸ் டு ஈபிஎஸ்
மைத்ரேயன் மட்டுமல்லாமல், ஓபிஎஸ் அணியில் இருந்து ஈபிஎஸ் அணிக்குச் சென்ற பலரும் ஈபிஎஸ்ஸால் ஓரங்கட்டப்பட்டிருப்பதாகவே கூறப்படுகிறது. தர்மயுத்தம் காலத்தில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவளித்த மூத்த நிர்வாகி பொன்னையன் ஈபிஎஸ் அணியில் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். அதேபோல, கடைசி நேரத்தில் சென்று எடப்பாடி பழனிசாமியிடம் சேர்ந்த மாஃபா பாண்டியராஜனுக்கும் கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

கேபி முனுசாமி
அதைவிட, ஓபிஎஸ்ஸுக்கு தீவிரமாக ஆதரவளித்து வந்த கேபி முனுசாமி, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக மாறிய பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார். இடையே, பொன்னையன் ஆடியோ உள்ளிட்ட சர்ச்சைகளிலும் முனுசாமி பெயர் அடிபட்டது. ஓபிஎஸ் அணியினர் கேபி முனுசாமிக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்த நிலையிலும், எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

பதவி இருக்கு.. முக்கியத்துவம் இல்லை
துணை பொதுச் செயலாளர் பதவி கொடுத்தாலும் கூட முக்கிய ஆலோசனைகளில் பங்கேற்க ஈபிஎஸ், முனுசாமிக்கு அழைப்பு விடுப்பதில்லை எனக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோர் உடன் சென்றனர். துணை பொதுச் செயலாளரான தன்னை அழைத்துச் செல்லவில்லை என அவர் தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களிடம் புலம்பியதாகக் கூறப்படுகிறது.

தனித்து விடப்பட்டார்களா
எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் ஈபிஎஸ்ஸுக்கு நெருக்கமான புள்ளிகள், முன்னாள் ஓபிஎஸ் ஆதரவாளர்களை ஓரங்கட்டியிருப்பதாகவும் கட்சி வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன. இதனால், ஓபிஎஸ் அணியில் இருந்து கடைசி நேரத்தில் அணி மாறியவர்கள் அனைவரும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் ஓபிஎஸ் தரப்பினரோடு பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

என்ன காரணம்?
ஈபிஎஸ் அணியில் சிலர் ஓரங்கட்டப்பட்டிருப்பது பற்றி ஈபிஎஸ் ஆதரவாளர்களிடம் விசாரித்தால், ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் தகவல்களை யாரோ சிலர் ஓபிஎஸ் அணிக்கு 'பாஸ்' செய்வதாக சந்தேகம் இருந்தது. சில முன்னாள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது சந்தேகம் எழுந்ததன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி சிலரை தவிர்த்து வருகிறார். மற்றபடி, ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் என்பதற்காக யாரையும் ஈபிஎஸ் ஓரங்கட்ட நினைக்கவில்லை, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமே அதற்கு சாட்சி என்கிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications