சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive: டிரம்புக்கு கொடுத்த அதே மருந்தை நாங்களும் கொடுக்கிறோம்.. Gleneagles மருத்துவமனை

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா இருந்தால் அவர்களுக்கு புறநோயாளிகள் பகுதியிலேயே காக்டெய்ல் என்ற மருந்தை கொடுக்கிறோம், இதனால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என சென்னை பெரும்பாக்கம் க்ளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்ட் சிட்டி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் அஸ்வின் கருப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனையில் இன்டர்னல் மெடிசின் துறையின் சீனியர் கன்சல்டன்ட்டாக இருக்கும் டாக்டர் அஸ்வின் கருப்பன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டி கேள்வி பதில் வடிவில்:

கே: க்ளெனீகிள்ஸ் மருத்துவமனையில் 37 பேருக்கு பிளாக் பங்கஸ் எனப்படும் மியூகர்மைக்கோசிஸ் நோய்க்கு சிகிச்சை அளித்துள்ளீர்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்கள். எந்த நிலையில் வந்தார்கள்

ப: மே மாதம் கொரோனா உச்சத்தில் இருந்த போது ஜூன் மாதம் நிறைய பேர் மியூகார்மைக்கோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டனர். இதில் எங்கள் மருத்துவமனைக்கு நிறைய பேர் வந்தது மிகவும் ஆபத்தான நிலையில்தான் வந்தார்கள். மூக்கு வழியாக சைனஸ் சுரப்பிகளை அடையும் கருப்பு பூஞ்சை , கண், மூளை பகுதிகள், கண்களுக்கு பின்பு உள்ள பகுதிகளில் அரிக்க தொடங்கிவிடும். அதாவது கிட்டதட்ட கேன்சரை போல் தொடர்ந்து அரிக்க தொடங்கும். எங்களிடம் வந்த சிலர் கண்களில் வீக்கம், கண்கள் தெரியாத நிலை, பற்களில் பாதிப்புகளுடன் வந்தார்கள். இது போல் வந்தவர்களை பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் கொண்ட 27 பேர் கொண்ட மருத்துவர்கள் ஆய்வு செய்தோம். சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாதவர்களுக்கு இது வரும் என்பதால் நீரிழிவு மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர், காது மூக்கு தொண்டை நிபுணர், நியூராலஜிஸ்ட் உள்ளிட்டோர் ஆய்வு செய்ய வேண்டியது இருந்தது.

Exclusive: Dr Ashwin Karuppan says about Antibody Cocktail Drug

இந்த கருப்பு பூஞ்சைக்கு முக்கிய சிகிச்சை என்றால் அறுவை சிகிச்சைதான். மருந்தே கிடையாது. இந்த கருப்பு பூஞ்சை பரவத் தொடங்கினால் அந்த பகுதிகளில் ரத்த ஓட்டமே இருக்காது. நாம் கொடுக்கும் மருந்து அந்த நோயை குணப்படுத்தாது. நாளுக்கு நாள் வீரியம் கொண்டதாக மாறும். வாயில் இருந்து கண்களுக்கோ, கண்களிலிருந்து மூளைக்கோ போகக் கூடிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பிளாஸ்டிக் சர்ஜியனை வைத்து அறுவை சிகிச்சை செய்து மருந்து கொடுத்தால் தான் அந்த பூஞ்சை மேற்கொண்டு பரவாது. க்ளெனீகிள்ஸ் மருத்துவமனையை பொருத்தவரை கருப்பு பூஞ்சை பாதித்த 37 பேரும் நல்லபடியாக இருக்கிறார்கள். இதை ஏன் எங்களால் வெற்றிகரமாக முடிக்க முடிந்தது என்றால் இது ஒரு டிரான்ஸ்பிளான்டட் நோய். உடல் உறுப்புகளை தானம் பெற்றவர்களுக்கு வரக் கூடிய வியாதி. இந்த நோய் பல ஆண்டுகளாக உள்ளது. ஆண்டுக்கு ஒன்று இரண்டு கேஸ்களுக்கு சிகிச்சை கொடுத்து கொண்டிருந்தோம். எங்கள் மருத்துவர்கள் இதில் நிறைய அனுபவம் வாய்ந்தவர்கள். எங்களை பொருத்தவரையில் இது ஒரு புதிய நோய் அல்ல, எண்ணிக்கை அதிகரித்துள்ளது அவ்வளவுதான். இந்த நோய்க்கு எந்த மாதிரியான மருந்து கொடுத்தால் தீர்வு கிடைக்கும் என எங்களுக்கு முன்கூட்டியே தெரிந்ததால் நாங்கள் வெற்றி கண்டோம்.

கே: தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க 27 நபர் கொண்ட டாஸ்க் போர்ஸ் உங்கள் மருத்துவமனை சார்பில் உருவாக்கப்பட்டது குறித்து சொல்லுங்கள்.

ப: மியூகார்மைக்கோசிஸ் நோயானது பல துறைகளை தொடர்பு கொண்டது என்பதால் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தேவைப்படுவர். இந்த நோய் என மருத்துவமனைக்கு வந்தால் உடனடியாக சிகிச்சை அளித்து பாதிப்பை குறைக்கும் வகையில் நாம் வேகம் காட்ட வேண்டும். பொதுவாக இந்த கருப்பு பூஞ்சை வந்தவர்கள் கண்கள் வீக்கத்துடன் பொது மருத்துவரை அணுகினால், அவர் கண் மருத்துவரிடம் செல்ல சொல்வார், அங்கு சென்றால் அவர் பல் மருத்துவரிடம் செல்லுமாறு அறிவுறுத்துவார். பின்னர் எம்ஆர்ஐ பிரெய்ன் , சிடி ஸ்கேன் வேண்டும் என்பார்கள். இவ்வாறாக அந்த நோயாளி ஒவ்வொரு நிபுணரையும் சந்தித்து சந்தித்து நோய் வீரியமடைந்துவிடும். இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க தாமதமே இருக்கக் கூடாது என்பதால் அனைத்து துறைகளையும் கொண்ட எங்கள் மருத்துவமனையைச் சேர்ந்த 27 மருத்துவர்கள் கொண்ட டாஸ்க் போர்ஸ் குழுவை தொடங்கினோம். வாட்ஸ் ஆப் மூலம் 27 நிபுணர்களும் இணைந்திருந்ததால் வேகமாக சிகிச்சை அளித்து உயிரிழப்பையும், உறுப்பு இழப்பையும் தவிர்த்தோம். எங்களை போல் மற்ற மருத்துவமனைகளிலும் இது போல் டாஸ்க் போர்சை தொடங்கியுள்ளனர்.

கே: கொரோனா பல்லாண்டுகளாக நம் பூமியில் இருப்பதாகவும் இது தற்போது உருமாற்றம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்படி எனில் இந்த பிளாக் பங்கஸும் கொரோனா தோன்றிய காலத்திலிருந்தே இருக்கிறதா

ப: சார்ஸ், கொரோனா உள்ளிட்டவை மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு வரும் வியாதி. மனிதன் விலங்குகளுடன் பழகுவது, விலங்குகளை சாப்பிடுவதால்தான் இந்த நோய்கள் நமக்கு வருகிறது. கருப்பு பூஞ்சையும் பல நூறாண்டுகளாக இருக்கிறது. அது ஏன் தற்போது கொரோனா காலத்தில் நமக்கு பரவுகிறது என்றால் கொரோனா வந்தவர்களுக்கு டெல்டா வைரஸ் இருப்பதாலும் ஸ்டீராய்டுகள் கொடுப்பதாலும் நோய் எதிர்ப்பு குறைவதால் இந்த கருப்பு பூஞ்சை பரவுகிறது.

Exclusive: Dr Ashwin Karuppan says about Antibody Cocktail Drug

கே: பிளாக் பங்கஸ் நோய்க்கான அறிகுறிகள் என்ன, வந்தவுடன் எந்த துறை மருத்துவரை பார்க்க வேண்டும். ஏனெனில் இந்த நோய் மூக்கு, கண்ணுடன் தொடர்புடையது என்பதால் யாரை முதலில் அணுகுவது

ப: இந்த கருப்பு பூஞ்சை நோய் நாம் சுவாசிக்கும் போது மூக்கு வழியாக உடம்பில் நுழைகிறது. சைனஸ் உள்ளிட்ட சுரப்பிகளை தாக்குகிறது. இதனால் தொடக்கத்தில் மூக்கு அடைப்பு ஏற்படுகிறது. சளி, கண் எரிச்சல், கண்களில் வீக்கம், பற்களில் வலியுடன் கருப்பாக வளருதல் உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும். சர்க்கரை கட்டுக்குள் இல்லாதவர்கள், கொரோனா வந்தவர்கள்,நீண்ட காலம் ஸ்டீராய்டு மருந்து எடுத்தவர்கள், ஆக்ஸிஜன் எடுத்தவர்கள், எந்த பகுதிகளில் பிரச்சினை ஏற்பட்டாலும் சம்பந்தப்பட்ட துறை மருத்துவரை அணுகலாம்.

கே: கருப்பு பூஞ்சைகளில் மஞ்சள், வெள்ளை, பச்சை என சொல்கிறார்களே அது குறித்து சொல்லுங்கள்

ப: மக்களை தாக்கும் நிறைய பூஞ்சைகள் உள்ளன. அதில் நிறத்தை வைத்து பூஞ்சைகளை வகைப்படுத்துகிறார்கள். எல்லா பூஞ்சைகளுக்கும் சிகிச்சை இருக்கிறது. இந்த பூஞ்சைகளில் மிகவும் ஆபத்தானது கருப்பு பூஞ்சை.

Exclusive: செம ஸ்பீடில் உதயநிதி.. விரைவில் குடிசையில்லாத தொகுதியாக சேப்பாக்கம் மாறும்.. டிஆர்பி ராஜாExclusive: செம ஸ்பீடில் உதயநிதி.. விரைவில் குடிசையில்லாத தொகுதியாக சேப்பாக்கம் மாறும்.. டிஆர்பி ராஜா

கே: கருப்பு பூஞ்சைக்கும் தடுப்பூசி தேவையா

ப: தடுப்பூசி என்பது வைரஸ் தொற்றுகளுக்கு மட்டுமே உள்ளது. பாக்டீரியாக்களில் ஒரு சிலவற்றுக்கு தடுப்பூசிகள் உள்ளன. வைரஸ் தொற்றுகளுக்கு மட்டுமே தடுப்பூசி வேலை செய்யும். பூஞ்சைகளை பொருத்தவரை பூஞ்சை தடுப்பு சிகிச்சைதான் இருக்கிறது.

கே: மார்பர்க் வைரஸ் என்றால் என்ன, அது இந்தியாவில் பரவுகிறதா

ப: இந்த வைரஸ் தென்னாப்பிரிக்காவில் உள்ள குரங்குகளிலிருந்து வவ்வால்களிடமிருந்து பரவுகின்றன. இது 1967 ஆம் ஆண்டே ஜெர்மனியில் கண்டுபிடித்துள்ளார்கள். அங்கு மார்பர்க் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த வைரஸுக்கு மார்பர்க் வைரஸ் என பெயர் வைக்கப்பட்டது. இது எபோலா போன்று ஒரு வைரஸ், பெரியளவில் தாக்கப்படவில்லை. காய்ச்சல் வந்தால் அதிகமாக இருக்கும், ரத்தக் கசிவு ஏற்படும், இதனால் 70 முதல் 80 சதவீதம் இறப்பை ஏற்படுத்தும். இந்த வைரஸை கண்டறியவே நேரம் எடுக்கும். உகாண்டா, காங்கோ பகுதிகளில்தான் வந்துள்ளது. இதுவரை வேறு எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரஸுக்கு தடுப்பூசியை தயார் செய்யும் நிலை இருக்கிறது. இது பெரிதாக பரவாததால் அந்த தடுப்பூசி கண்டுபிடிப்பை நிறுத்தி வைத்துள்ளார்கள். கொரோனா போல் இந்த மார்பர்க் வைரஸ் அச்சுறுத்தாது.

கே: கொரோனா 3ஆவது அலை குழந்தைகளை தாக்கும் என யூகத்தின் அடிப்படையில் சொல்கிறார்கள். அது குறித்து உங்கள் கருத்து என்ன

ப: ஒருவரால் எத்தனை பேர் பாதிக்கலாம் என்ற ரேட்டானது முன்பு 0.5 சதவீதத்திலிருந்து தற்போது 1 அல்லது 1.5 சதவீதம் வந்துள்ளது. நிறைய கேஸ்கள் வருகின்றன. தற்போது எங்கள் மருத்துவமனையில் காக்டெய்ல் சிகிச்சை கொடுக்கிறோம். கொரோனா உறுதி செய்யப்பட்டால் புறநோயாளிகள் பிரிவிலேயே காக்டெய்ல் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுகிறோம். செப்டம்பர், அக்டோபரில் கொரோனா 3ஆவது அலை நிறைய பேருக்கு பாதிக்கும். இதில் முக்கியமாக பாதிக்கப்படுபவர்கள் தடுப்பூசி போடாதவர்கள்.

கே: காக்டெய்ல் சிகிச்சை என்றால் என்ன

ப: இரண்டு விதமான மருந்துகளை கலந்து கொடுப்பது. இது முதல் முறையாக டொனால்ட் டிரம்பிற்கு கொடுத்தார்கள். அவருக்கு கொடுத்தவுடன் அவர் கொரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்துவிட்டார். இதையடுத்து அந்த மருந்து கிடைக்கவில்லை. இந்த மருந்து வைரஸ் மேலும் வளர்ச்சி அடைவதையும் பரவுவதையும் தடுத்துவிடும். இந்த காக்டெய்ல் மருந்து கொடுத்துவிட்டு 24 மணி நேரம் முதல் 72 மணி நேரத்திற்குள்ளாக அந்த நோயே உடலில் இருக்காது. இந்த மருந்து தற்போது தமிழகத்தில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் வந்துள்ளது. எங்கள் மருத்துவமனையில் இதுவரை 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொடுத்துள்ளோம். இதனால் ஒருவரும் உயிரிழக்கவில்லை. மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக படுக்கையில் அனுமதிக்கப்படவில்லை. இந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் கொரோனா தடுப்பூசி போட தேவையில்லை. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்றார் டாக்டர் அஸ்வின் கருப்பன்.

English summary
Gleneagles Global Health City Dr Ashwin Karuppan says about Antibody Cocktail Drug.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X