டார்கெட் ‘கவர்னர்’.. “அண்டர்லைன்” கவனிச்சீங்களா? திமுகவின் மடைமாற்றும் சதி.. பாஜக குற்றச்சாட்டு!
சென்னை : "தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான அலை அடிப்பதை திசைதிருப்பத்தான் ஆளுநர் பற்றி சர்ச்சையைக் கிளப்புகிறது திமுக, அவர்களின் நோக்கம் தமிழ்நாடு என்று சொல்லவேண்டும் என்பதல்ல, ஆளுநரை அட்டாக் செய்வதுதான்." என நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள எக்ஸ்க்ளூசிவ் பேட்டியில் பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழநாடு என்று சொல்வதை விட தமிழகம் என்பதுதான் சரி என்று பேசியது, அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில், அரசு தயாரித்து அளித்த உரையின் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தது ஆகியவை அரசியல் அரங்கில் பெரும் அனலைக் கிளப்பின.
ஒரு வாரத்திற்குப் பிறகு, ஆளுநர் ரவி, தான் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பேசவில்லை என விளக்கம் அளித்தார். இந்நிலையில், ஆளுநர் - திமுக அரசு இடையேயான பனிப்போர் பற்றி நமது பேட்டியில் பேசியுள்ளார் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

திமுகவின் உள்நோக்கம்
கேள்வி : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், தான் சொன்னதன் நோக்கமே வேறு என்று விளக்கம் அளித்திருப்பது, அவர் தனது கருத்தில் இருந்து பின்வாங்கியதாகத் தெரிகிறதே?
பதில் : ஆளுநர் ஒரே ஒரு வார்த்தை சொன்னதற்காக இவ்வளவு பெரிய அளவுக்கு பிரபலப்படுத்த வேண்டியதன் உள்நோக்கம் என்ன? எதற்காக அவரது அந்த வார்த்தைப் பிரயோகத்தை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் சென்று அதை அரசியலாக்குகிறீர்கள்? அரசாங்கம் அத்தனை முகங்களிலும் தோல்வி அடைந்திருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளில் திமுக நிறைவேற்றியது விரல் விட்டு எண்ணும் அளவில் தான் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான எண்ணமே இருக்கிறது. அதை திசைதிருப்பத்தான் ஆளுநர் பற்றி சர்ச்சையைக் கிளப்புகிறார்கள். அதுவும் எவ்வளவு அபாண்டம்! தமிழே தெரியாத வேற்று மாநிலத்தைச் சேர்ந்த ஆளுநர் சட்டமன்றத்தில் தமிழில் பேசுகிறார். அதை பாராட்டி கைதட்டியிருக்க வேண்டும். ஆனால், அவதூறு பரப்புகிறார்கள்.

குறியே ஆளுநர் தான்
கேள்வி : தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கிய உரையை முழுமையாக வாசிக்காமல் தவிர்த்து மரபை மீறியது ஆளுநர் தானே?
பதில் : ஆளுநர் உரையை வாசிப்பதற்கு முன்பே தமிழில் பேசினார். அதை நீங்கள் பாராட்டியிருந்தால் நடுநிலையாளர்கள் என்று அர்த்தம். தமிழை பீகாரிலிருந்து வந்தவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்றால், அவரைக் கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் பேச ஆரம்பிப்பதற்கு முன்பே அவருக்கு எதிராக கோஷம் எழுப்புகிறீர்கள். அதிலும் உங்களுக்கு முதுகெலும்பு, திராணை இல்லை என்று, கூட்டணி கட்சி உறுப்பினர்களை வைத்து கோஷம் எழுப்பச் செய்கிறீர்கள். ஆளுநர் தனது கருத்தில் இருந்து பின்வாங்கிவிட்டார் என்று சொல்வதால் ஆளுநருக்கு ஒரு நஷ்டமும் இல்லை. திமுக ஆட்சியில் கருணாநிதி ஆட்சி காலத்தில் அமைத்த கல்வெட்டுகளில் எல்லாம் தமிழக முதலமைச்சர் என்றுதானே குறிப்பிட்டிருக்கிறீர்கள். முதல்வர் ஸ்டாலினும் தமிழகம் என்று பேசி இருக்கிறார். எனில், நோக்கம் தமிழ்நாடு என்று சொல்லவேண்டும் என்பதல்ல, ஆளுநரை அட்டாக் பண்ணவேண்டும் என்பதுதான்.

திசைதிருப்ப
கேள்வி : அரசமைப்புச் சட்ட பொறுப்பில் இருக்கும் ஆளுநர் அரசியல் பேசலாமா? ஆளுங்கட்சிக்கு எதிரான வகையில் அரசியல் ரீதியிலான கருத்துகளைத் தெரிவிக்கலாமா?
பதில் : வெளிமாநிலத்தில் இருந்து இங்கு அரசின் நிர்வாகப் பதவியில் வந்துள்ள ஆளுநர் ரவி, தமிழைக் கற்றுக்கொண்டு அதுபற்றி சில விஷயங்களைப் பேசுகிறார். அவர் ஒன்றும் தமிழறிஞர் அல்ல. அவர் பேசுவதில் தவறு இருந்தால், நீங்கள் நேரடியாகவே அவரிடம் தவறு என்று சொல்லலாம். ஆளுநரின் பேச்சு அரசை எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை. ஆனால், அரசின் செயல்பாடற்ற தன்மை குறித்து யாரும் பேசாமல் திசைதிருப்ப வேண்டும் என்பதற்காக ஆளுநருக்கு
எதிராக பிரச்சனையைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறது திமுக.

மடைமாற்றும் சதி
கேள்வி : தமிழில் சில வார்த்தைகளைப் பேசிவிட்டதால் மட்டுமே, ஆளுநர் அவை மரபை மீறுவதை அனுமதிக்க முடியுமா?
பதில் : அவை மரபு என்பது விவாதத்திற்குரிய விஷயம். இதில் தீர்ப்பளிக்கும் நிலையில் நாம் இல்லை. ஏற்கனவே இதே தமிழ்நாடு சட்டமன்றத்தில், கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிகளின்போது 2 ஆளுநர்கள் இதுபோலவே நடந்திருக்கிறார்கள். இப்போது ஆளுநர் சட்டமன்றத்தில் பேசிய விவகாரம் தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலோ, அரசியலிலோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இது திமுக ஆட்சியின் தோல்வியை பூமிக்குள் புதைத்து மறைக்கும் திமுகவின் திட்டமிட்ட மடைமாற்றும் சதி.

டெல்லியில் என்ன நடந்தது?
கேள்வி : இது பெரிய விஷயம் இல்லை என்றால் ஆளுநர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருக்கலாமே? ஆளுநர் டெல்லி சென்றிருந்த நேரத்தில் ஏன் ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கம் வருகிறது? எனில் டெல்லியில் என்ன நடந்தது?
பதில் : ஆளுநரின் ஒரே ஒரு வார்த்தைப் பிரயோகம். தமிழகம் என்ற வார்த்தை திமுக தலைவர்களால் லட்சம் தடவை பயன்படுத்தப்பட்ட வார்த்தைதான். ஆளுநர் தான் பேசியதை மாற்றிவிட்டார் என்று சொல்வது, மொழி தெரியாதவரிடம், இங்குள்ளவர்கள் தாங்கள் வென்றுவிட்டோம் மார்தட்டிக் கொள்ளுவது பலவீனமான செயல். நிர்வாக ரீதியில் பலம் வாய்ந்த அரசு, ஆளுநரிடம் மோதி தாங்களே அடிவாங்கிக்கொண்டு வந்திருக்கிறது.

கிரீன் சிக்னல்
கேள்வி : தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அனுப்பிய உரையில் அவர் சில திருத்தங்களைச் சொன்னதாகவும், அச்சுக்கு அனுப்பிவிட்டதால் மாற்ற முடியாது என்று கூறி நீங்கள் அதை தவிர்த்துவிட்டு படியுங்கள் என்று அரசு தரப்பு சொன்னதாகவும் பாஜகவினர் கூறுகின்றனரே? இது உண்மையா?
பதில் : எனக்குக் கிடைத்த மேல்மட்ட தகவல்களின்படி, ஆளுநர் உரையில் அடிக்கோடிட்டு சில திருத்தங்களைச் சொன்ன நிலையில், அச்சுக்கு போய்விட்டதால் இனி மாற்றமுடியாது, நீங்கள் படிப்பது போல் படியுங்கள் என்று சொன்னதாகவும் சொல்கிறார்கள். நான் அதை நம்பும் அளவுக்கு சம்பவம் நடந்திருக்கிறது. காரணம், ஆளுநர் அடிக்கோடிட்ட வார்த்தைகளைப் பேசும்போது குதிக்கிறார்கள். இது நடக்கப்போகிறது, நாம் நமது வேலையைப் பார்ப்போம் என்று திட்டமிட்டே செயல்பட்டுள்ளனர். ஆளுநர் பேசத் தொடங்கியதுமே, நடக்கப்போவது இதுதான் ஆரம்பியுங்கள் என கிரீன் சிக்னல் கொடுத்ததாகத்தான் தெரிகிறது.
-
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications