Exclusive: தமிழ்நாடே திமுகவுக்கு எதிரா நிற்குது.. காங் + விசிக + கம்யூனிஸ்ட் கணக்கு? நாராயணன் பரபர!
சென்னை : தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட திராணி இல்லாத, முதுகெலும்பு இல்லாத கட்சி திமுக. இதுவரை திமுக வெற்றி பெற்ற ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதே இல்லை. பாஜக 2001, 2021 தேர்தல்களை தவிர மற்ற எல்லா சட்டமன்றத் தேர்தல்களிலும் தனித்துத்தான் போட்டியிட்டுள்ளது. எனில் யாருக்கு தைரியம் அதிகம்? என 'ஒன் இந்தியா'விற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் பாஜக எதிர்க்கட்சி அல்ல. சொந்தக்காலில் நின்று அவர்களால் ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாது. 2001, 2021 தேர்தல்களில் திமுக, அதிமுக தோளில் சவாரி செய்துதான் எம்.எல்.ஏக்களைப் பெற்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை பா.ஜ.கவின் பலம் இதுதான்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எதிர்வினையாற்றி இருந்தார். பாஜக கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. அதை மீண்டும் செய்யத் தயங்காது. கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா?" என்று பகிரங்கமாக சவால் விடுத்தார் அண்ணாமலை.

பாஜக நாராயணன் பேட்டி
இந்நிலையில் ஒன் இந்தியாவிற்கு பேட்டியளித்துள்ள பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம், முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பேச்சு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
நாராயணன் பதில் : "தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டால் பாஜக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது - முதல்வர் மு.க.ஸ்டாலின். 'ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை' என்பது போல், ஸ்டாலின் கூறியது இருக்கிறது. தமிழகத்தில் தனித்துப் போட்டியிட திராணி இல்லாத, முதுகெலும்பு இல்லாத ஒரு கட்சி திமுக. இதுவரை திமுக வெற்றி பெற்ற ஒரு தேர்தலில் கூட தனித்து போட்டியிட்டதே இல்லை. 1967ல் ராஜாஜி உடனான கூட்டணியால் தான் ஆட்சிக்கு வந்தது. 1971 காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தது. 1989ல் சி.பி.எம், ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இருந்தது திமுக.

யாருக்கு தைரியம் அதிகம்?
1996ல் ரஜினிகாந்த் வாய்ஸ், மூப்பனார் கூட்டணியால் தான் ஆட்சிக்கு வந்தது திமுக. 2006லும் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தது. 2011லும் பெரிய கூட்டணி அமைத்தும் தோல்வியைச் சந்தித்தது திமுக. 2021 தேர்தலிலும் மெகா கூட்டணி அமைத்துத்தான் வெற்றி பெற்றது. பாஜகவை பொறுத்தவரை 2001, 2021 தேர்தல்களை தவிர மற்ற எல்லா சட்டமன்றத் தேர்தல்களிலும் தனித்துத்தான் போட்டியிட்டுள்ளது. அப்போ யாருக்கு தைரியம் அதிகம்? கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டி போட முடியாதவர்கள் திமுகவினர். 2014ல் எத்தனை சீட் ஜெயித்தார்கள். பூஜ்யம். இவர்கள் பேசலாமா? முதலமைச்சர் என்கிற மமதை கண்ணை மறைக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு எதிராக தமிழ்நாடு
கேள்வி : பாஜக கூட்டணி வைத்தபோது மட்டுமே சட்டமன்றத் தேர்தல்களில் சில இடங்களில் வென்றிருக்கிறது. கூட்டணி வைக்காத இடைப்பட்ட காலத்தில் வெற்றி கிடைக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளது பற்றி..
பதில் : 2014 லோக்சபா தேர்தலில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்காமலேயே நாங்கள் 2 இடங்களில் வென்றுள்ளோம். பாஜக கன்னியாகுமரியில் வென்றது. எங்கள் கூட்டணியில் பாமக அன்புமணி ராமதாஸ் தருமபுரியில் வென்றார். முதலில் நீங்கள் உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். நீங்கள் என்றைக்காவது கூட்டணி அமைக்காமல் தனித்து நிற்க முடியுமா? இப்போது நீங்கள் இருக்கக்கூடிய கூட்டணியை 'டிஸ்மேண்டில்' செய்துவிட்டு, வரும் 2024 தேர்தலில் தனியாக நிற்கிறோம் என்று சொல்லச் சொல்லுங்கள். திமுகவால் அது முடியவே முடியாது. ஏனென்றால், தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான மக்கள் தான் இருக்கிறார்கள். அதுதான் உண்மை.

பாஜக - அதிமுக கூட்டணி
கேள்வி : அதிமுக தலைவர்கள் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பாஜக கூட்டணி தொடர்பாக பேசிய கருத்துகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில் : அது தேவையில்லை. அதைப் பற்றிப் பேசுவதற்கு இனி அவசியமில்லை. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டத்தில், இனி யாரும் கூட்டணி கட்சி குறித்து குறிப்பாக பாஜக பற்றி யாரும் பேசக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இதனால், அந்தப் பிரச்சனை அதோடு முடிந்துவிட்டது.

காங்கிரஸ் - விசிக - கன்யூனிஸ்ட் வியாபாரம்
கேள்வி : பாஜக வரும் காலத்தில் தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிடுவதற்கான வாய்பு இருக்கிறதா?
பதில் : தாராளமாக இருக்கிறது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்வதுதான். எங்களது இலக்கு 25 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். அதைத்தான் எங்கள் மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கூறி வருகிறார். அதேபோல, 2026ல் பாஜக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் என்களது இலக்கு. அனைத்து இடங்களிலும் போட்டியிட வேண்டும், ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்று நினைப்பதுதான் கட்சி. கம்யூனிஸ்டுகளைப் போலவோ காங்கிரஸை போலவோ, விசிக போலவோ நாங்கள் 2 சீட் வாங்கிக் கொள்கிறோம், அதில் வெல்வதற்கு எங்களுக்கு 10 கோடி பணம் கொடுங்கள் என்று கேட்பதற்கு பெயர் அரசியல் இல்லை. அதற்குப் பெயர் வியாபாரம். அந்த வியாபாரத்தை நாங்கள் செய்ய விரும்பவில்லை. எங்களுடைய கொள்கைகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்வதற்கு, நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டவர்கள். தனித்து நின்றாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

ஏப்ரல் வரை ஏன்
கேள்வி : அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் குறித்த சர்ச்சைகள் எழுந்த நிலையில், கடிகாரம் வாங்கிய ரசீதை ஏப்ரல் மாதம் வழங்குவதாகச் சொல்லி இருக்கிறாரே.. எதற்காக ஏப்ரல் மாதம் வரை நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்?
பதில் : அண்ணாமலை என்ன வாட்ச் கட்டுகிறார் எனக் கேட்பத்ற்கு உண்டான தகுதியே யாருக்கும் இல்லை. அண்ணாமலை நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவர் ஆதாரத்தைக் காட்டுகிறேன் எனச் சொல்லி இருக்கிறார். இவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளுக்கு எல்லாம் பதில் சொல்லி முகத்திரையைக் கிழிப்பார். அப்போது இருக்கிறது.

செந்தில் பாலாஜிக்கு பயம்
கேள்வி : அமைச்சர் செந்தில் பாலாஜி - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையேயான ட்விட்டர் மோதல் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறதே..?
பதில் : "செந்தில் பாலாஜி ஒரு ஊழல் அமைச்சர், கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல், மோசடி செய்பவர். இதையெல்லாம் சொன்னது மு.க.ஸ்டாலின். அப்படிப்பட்ட ஒரு நபரை தனது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு முக்கியமான துறைகளை கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அந்த துறைகளில் செந்தில் பாலாஜி என்னவெல்லாம் முறைகேடுகள் செய்வார் என அண்ணாமலை விளக்கிக் கொண்டிருக்கிறார். அந்த பயத்தின் காரணமாகத்தான் செந்தில் பாலாஜி கதறிக் கொண்டிருக்கிறார்.

கொங்கு டார்கெட்
கேள்வி : பாஜக தொடர்ச்சியாக கொங்கு மண்டலத்தைக் குறிவைத்து செயல்பட்டு வருவதாகவும், தென் மாவட்டங்களை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறதே?
பதில் : எங்களுடைய அமைப்பு ரீதியான பணிகள் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 'சக்தி கேந்திரம்' என்று சொல்லப்படும் பூத் கமிட்டி பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இந்தத் தொகுதி அந்தத் தொகுதி என்றில்லாமல் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து, உள்கட்டமைப்பு வேலைகளை சிறப்பாக நடத்தி வருகிறோம்.
-
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
மூணு தோல்வி அண்ணாமலை பெயரை தவிர்க்கவே போட்டியில்லை.. வாசகர் அங்கமுத்து ஆதங்கம் -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன்












Click it and Unblock the Notifications