சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீண்டும் இணையும் ’இரட்டை இலை’? உச்சகட்ட ஷாக்கில் எடப்பாடி! பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஜெயிப்பாரா?

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் இனிமேல் அடுத்ததாக பொதுக்குழு நடத்த வாய்ப்பு உள்ளதா அவ்வாறு நடந்தால் ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு வெற்றி கிடைக்குமா என பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கிறது.

Recommended Video

    OPS வசமான அதிமுக

    அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று தெரிவித்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக உத்தரவிட்டிருக்கிறார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டு நீதிபதி அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் நியமனம், புதிய பதவிகள் என அனைத்துமே செல்லாததாகி விட்டது.

    அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு செல்லாது- ஜூன் 23 க்கு முன்பு இருந்த நிலை நீடிக்கும்-ஹைகோர்ட் அதிரடி அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு செல்லாது- ஜூன் 23 க்கு முன்பு இருந்த நிலை நீடிக்கும்-ஹைகோர்ட் அதிரடி

    அதிமுக பொதுக்குழு

    அதிமுக பொதுக்குழு

    இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் இணைந்து பொதுக்குழுவை மீண்டும் கூட்ட வேண்டும் எனவும் பொதுக்குழுவை கூட்ட ஆணையாளரை நியமிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர்செல்வம் இணைந்து மீண்டும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

    ஆதரவாக தீர்ப்பு

    ஆதரவாக தீர்ப்பு

    தற்போதைய நிலவரப்படி அதிமுகவில் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரும் நிலையில் இனி அவருக்கு ஏறு முகம் தான் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

    மேலும் பலம்

    மேலும் பலம்

    அதிகாரத்தின் உச்சியில் எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோதே பல்வேறு ஒன்றிய செயலாளர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் ஓபிஎஸ்ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது ஓ பன்னீர் செல்வத்திற்கு மீண்டும் அதிகாரம் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கிடைத்திருக்கும் நிலையில் இது அவருக்கு மேலும் பலம் அளிக்கும் என்கின்றனர்.

    தற்போது இல்லை

    தற்போது இல்லை

    தற்போது பொதுக்குழு கூட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாது எனவும் தற்போது இருக்கும் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்த்த ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டு இருக்கிறார். அவ்வாறு குறிப்பிட்ட அளவு ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர் தலைமைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு கிடைத்த பிறகு பொதுக்குழு கூட்டமும் குறித்த முடிவுகளை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு இருப்பதால் பொதுக்குழு கூட்டும் முடிவை ஓ பன்னீர்செல்வம் ஒத்தி வைப்பார் என்றே கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

    English summary
    Is there any possibility of holding the next public meeting now that the High Court verdict has come out in favor of the OPS side? ; ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் இனிமேல் அடுத்ததாக பொதுக்குழு நடத்த வாய்ப்பு உள்ளதா
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X