நிலுவை தொகை இருந்தால் செலுத்துங்கள்.. தவறினால் இணைப்பு துண்டிப்பு.. சென்னை குடிநீர் வாரியம் வார்னிங்
சென்னை: நுகர்வோர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ஏதேனும் நிலுவை இருப்பின், அதை உடனடியாக செலுத்திட வேண்டும். செலுத்தத் தவறினால், விதிகளின்படி குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சியால் நிர்ணயிக்கப்படும் சொத்தின் ஆண்டு மதிப்பில் 7 சதவீதம் சென்னை குடிநீர் வாரியத்தால் விதிக்கப்பட்டு ஒவ்வொரு அரையாண்டிற்கும் 3.5 சதவீதம் பிரித்து வசூலிக்கப்படுகிறது.
குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் வரி சொத்து வரியின் ஒரு பகுதியாகும். இந்த வரியானது ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்திட வேண்டும்.

உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும்.
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வீட்டின் உரிமையாளர்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றிருப்பின், குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியுடன் அதற்குரிய குடிநீர் கட்டணத்தையும் வாரிய ஒழுங்குமுறை விதிகளின்படி உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும். குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு இல்லாவிடினும் மேற்குறிப்பிட்ட குடிநீர் வரி/கழிவுநீர் வரி ஒவ்வொரு அரையாண்டும் செலுத்திட வேண்டும். எனவே, நுகர்வோர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ஏதேனும் நிலுவை இருப்பின், அதை உடனடியாக செலுத்திட வேண்டும்.

சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும்
செலுத்தத் தவறினால், வாரிய ஒழுங்குமுறை விதிகளின்படி குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்படும். இணைப்பு துண்டிக்கப்பட்டும் வரி செலுத்தப்படவில்லையெனில் நிலுவைதாரரின் அசையும் அல்லது அசையா சொத்து வாரிய ஒழுங்குமுறை விதிகள் மற்றும் வருவாய் வசூல் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஜப்தி செய்யப்படும். வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் இயங்கும்.

ரொக்கமாக செலுத்தலாம்
நுகர்வோர்கள் தங்களது நிலுவைத் தொகையினை இணையதளம் வாயிலாக செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைதளத்தைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு (Credit Card), டெபிட் கார்டு (Debit Card) மற்றும் நெட் பேங்கிங் (Net Banking) மூலமாகவும் செலுத்தலாம். மேலும், பகுதி அலுவலகங்கள் / பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில், காசோலை மற்றும் ரொக்கமாகவும் செலுத்தலாம்.

ஒத்துழைப்பு கொடுக்குமாறு..
மேலும் நுகர்வோர்களின் வசதிக்காக குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியினை செலுத்துவதற்கு ஏதுவாக கியூ ஆர் கோடு (Q R Code) மூலம் செலுத்தும் முறையும் அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, நுகர்வோர்கள் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தி சென்னைக் குடிநீர் வாரியத்தின் சிப் பணிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications