சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'டிஎன்பிஎஸ்சி மூலம் நியாயவிலைக்கடை பணியாளர்களை நியமிக்க வேண்டும்'.. டாக்டர் ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: நியாயவிலைக் கடை பணியாளர்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நேர்காணலின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்காமல் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்க தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிகளுக்கு 4,000 பேரை நியமிக்க தமிழக அரசின் கூட்டுறவுத் துறை முடிவு செய்திருக்கிறது.

இந்த பணியிடங்கள் அனைத்தும் மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் என்ற அமைப்பின் மூலம் மாவட்ட அளவில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது, இந்த நியமனங்கள் சரியாக நடக்குமா? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடை! மகிழ்ச்சி.. முதல் ஆளாய் வந்த பாமக ராமதாஸ்! அப்படியே முதல்வருக்கும் கோரிக்கை! ஆன்லைன் சூதாட்ட தடை! மகிழ்ச்சி.. முதல் ஆளாய் வந்த பாமக ராமதாஸ்! அப்படியே முதல்வருக்கும் கோரிக்கை!

 4000 பணியிடங்கள்

4000 பணியிடங்கள்

தமிழ்நாட்டில் பொது வினியோகத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு சங்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் 25,044 முழு நேர நியாயவிலைக் கடைகள் 10,279 பகுதிநேர நியாயவிலைக்கடைகள் என 35,323 நியாயவிலைக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்கள் ஏராளமாக காலியாக இருக்கும் நிலையில், அவற்றில் 4000 பணியிடங்களை நேர்காணல் மூலம் நிரப்ப கூட்டுறவுத் துறை தீர்மானித்திருக்கிறது.

நேர்காணல் மட்டும் நடத்தி..

நேர்காணல் மட்டும் நடத்தி..

இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அக்டோபர் 13-ஆம் தேதி வெளியிட்டு, நவம்பர் 14-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்று, டிசம்பர் மாதம் 15 முதல் 30-ஆம் தேதி வரை நேர்காணல்களை நடத்தி ஆட்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களுக்கு அவற்றின் பதிவாளர் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். நியாயவிலைக்கடை விற்பனையாளர், கட்டுனர் பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தாமல், வெறும் நேர்காணலை மட்டும் நடத்தி ஆட்களை தேர்வு செய்வது ஐயத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்காது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை நியாயவிலைக் கடைப்பணியாளர்கள் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு வந்தனர். ஆனால், வேலைவாய்ப்பக பதிவின் அடிப்படையில் மட்டும் பணி நியமனங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும், ஆள்தேர்வு குறித்து பொது அறிவிப்பு வெளியிட்டு வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்யாதவர்களிடமிருந்தும் விண்ணப்பங்களைப் பெற்று தான் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், இரு தரப்புக்கும் வாய்ப்பளிக்க வேண்டியுள்ளது. இரு தரப்பினரின் தகுதி மற்றும் திறமைகளை அளவிடுவதற்கு போட்டித் தேர்வு தான் சரியானதாக இருக்குமே தவிர, நேர்காணல் சரியான முறையாக இருக்காது.

12-ஆம் வகுப்பு தகுதி

12-ஆம் வகுப்பு தகுதி

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கும் கூடுதலான கல்வித் தகுதி கொண்ட அனைத்துப் பணிகளுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வு நடத்தி, அதில் ஒவ்வொருவரும் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் தான் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட பணிகளுக்கே போட்டித் தேர்வு மூலம் தான் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் எனும் போது, 12-ஆம் வகுப்புத் தகுதி கொண்ட விற்பனையாளர் பணிக்கும், பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட கட்டுனர் பணிக்கும் போட்டித்தேர்வு நடத்தாமல் நேர்காணல் நடத்துவது முறையல்ல.

முறைகேடுகள் நடப்பதாக..

முறைகேடுகள் நடப்பதாக..

அதிலும் மாவட்ட அளவில் நேர்காணல் நடத்துவதால், தகுதியும், திறமையும் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு, அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமானோர் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இது பெரும் சமூக அநீதி. இந்த அநீதி தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் ஆகியவற்றுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, அவற்றுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமே இனி தேர்ந்தெடுத்து வழங்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.

சட்டத்திருத்தம்

சட்டத்திருத்தம்

அதற்கான சட்டத் திருத்தமும் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டது. இதற்கான காரணங்கள் அனைத்தும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் நியமனத்திற்கும் பொருந்தும் எனும் நிலையில், அவர்களை மட்டும் மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் தேர்ந்தெடுக்க அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்? இது தமிழக அரசின் நோக்கத்தையே சிதைத்து விடக்கூடும்.

 ஏழை இளைஞர்களுக்கு வாய்ப்பு

ஏழை இளைஞர்களுக்கு வாய்ப்பு

கடந்த 2017-ஆம் ஆண்டில், அப்போதைய அதிமுக ஆட்சியின் போது நியாயவிலைக்கடை ஊழியர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்க முயற்சிகள் நடந்த போது அதை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது. ஒரு கட்டத்தில் அந்த ஆள் தேர்வு கைவிடப்பட்டது. இப்போது நீண்ட காலத்திற்கு பிறகு நியாயவிலைக் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான நடைமுறை ஐயத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தால் தான் ஏழை இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

தமிழக அரசு ஆணையிட வேண்டும்

தமிழக அரசு ஆணையிட வேண்டும்

இதைக் கருத்தில் கொண்டு, நியாயவிலைக் கடை பணியாளர்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நேர்காணலின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். சமவாய்ப்பையும், சமூகநீதியையும் உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியாயவிலைக் கடை பணியாளர்களை தேர்ந்தெடுக்கவும் தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

English summary
Dr. Ramadoss, the founder of PMK, has issued a statement saying that the Tamil Nadu government should order to select fair price shop workers through TNPSC and not only on the basis of interviews through district recruitment centers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X