சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உஷாரய்யா உஷாரு! உங்கள் நெருங்கிய நண்பர் பேஸ்புக் மெசன்ஜரில் அவசரமாக பணம் கேட்கிறரா?

Google Oneindia Tamil News

சென்னை: நமக்கு தெரிந்த நம்பகமான நண்பர் அல்லது உறவுகளின் பெயரில், போலி ஐடி உருவாக்கி, Messenger-ல் வந்து, அவசரத்தேவைக்கு கேட்பது போல, பணத்தை சுருட்டுகிறது ஒரு கும்பல்..மக்களே மிகுந்த கவனத்துடன் இருங்கள்,

நமது தேவைகளுக்காக வசதிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்களால் நாம் ஏமாறும் சம்பங்களும் அதிகமாக நடக்கிறது. அந்த ஏமாற்றங்கள் நமது நெருங்கிய உறவுகள், நண்பர்கள் பெயரில் நடக்கும் போது இன்னமும் அதிகமாக நொந்துபோவோம்.

அப்படிப்பட்ட சம்பவங்கள் அண்மைக்காலமாக பேஸ்புக்கில் நடக்கிறது. நெருங்கிய நண்பர்கள், பிரபலமான அரசியல் தலைவர்கள், உறவினர்கள் என நமக்கு மிகவும் தெரிந்தவர்களின் பெயரில் நடக்கிறது.

அவசரமாக பணம்

அவசரமாக பணம்

எனக்கு தெரிந்த பேஸ்புக் நண்பருக்கு தெரிந்த நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இருந்து பிரண்ட் ரெக்கவெஸ்ட் வந்தது. ஐடி முடங்கிவிட்டதாக எண்ணி பொய் நண்பரின் பெயரில் வந்த ரெக்கவஸ்ட்டை அக்சப்ட் செய்திருக்கிறார். உடனே நண்பரின் பெயரில் வந்த போலி நபர், அவசரமாக பணம் வேண்டும் கொடுக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார்.

தமிழில் பேசி தப்பினார்

தமிழில் பேசி தப்பினார்

உடனே எவ்வளவு வேண்டும் என்று கேட்டும் அவரும் அனுப்ப தயாராகி உள்ளார். அவரது உரையாடல் ஆங்கிலத்தில் இருந்திருக்கிறது. கூகுள் பே ஐடியை போலி நபர் அனுப்பி உள்ளார். அந்த ஐடி இந்திகாரரின் பெயரில் இருந்திருக்கிறது.. என்ன இது இந்திக்காரர் பெயரில் உள்ளது என்று சந்தேகப்பட்டு தமிழில் வாதத்தை அவர் தொடர்ந்துள்ளார். ஆனால் அவர் பணம் அனுப்பிவிட்டீர்களா, எப்போது கிடைக்கும் என்ற படி மூன்று முறை மெசேஜ் அனுப்பி உள்ளார்.

நண்பர் அதிர்ச்சி

நண்பர் அதிர்ச்சி

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனே தனது நண்பரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பணம் கேட்டாயா என்று கேட்டிருக்கிறார். அவர் அதிர்ச்சி அடைந்து இல்லை. நான் அப்படி கேட்கவில்லை என்று பதில் அளித்திருக்கிறார். அத்துடன் நண்பர்களிடம் என் ஐடி பெயரில் பணம் கேட்டு ஏதேனும் மெசேஜ் வந்தால், எச்சரிக்கையாக இருங்க. நண்பர்கள் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். கொஞ்சம் கவனம் என்று கூறியுள்ளார்.

மக்களே உஷார்

மக்களே உஷார்

இந்த சம்பவம் ஒரு சாட்சி தான். மிகப்பிரலமான அரசியல் தலைவரின் மகன் ஒருவரின் பெயரிலும் இப்படி போலியான ஐடியை கிரியேட் செய்து கட்சி தொண்டர்களிடம் பணம் பறிக்க முயற்சி செய்திருக்கிறது ஒரு கும்பல். இதை அவருக்கு தொண்டர்கள் அலார்ட் செய்ய உடனே, அவரும் தன் பெயரில் இயங்கும் போலி ஐடி குறித்து எச்சரித்தார். பல்வேறு பிரபலமானவர்கள் பெயரில் குறிவைத்து இப்படி சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே மக்களே யார் மெசன்ஜரில் பணம் கேட்டாலும் கொடுக்காதீர்கள். இது நூதனமாக ஏமாற்றும் காலம் இது.

English summary
A gang that creates fake IDs in the name of a trusted friend or relative we know, comes in to Messenger and asks for an emergency, steals money.. people be very careful.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X