சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ் எழுத்துலகில் தனித்த ஒரு இயக்கம் பிரபஞ்சன்… சீமான் புகழாரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    புற்றுநோய் காரணமாக பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்- வீடியோ

    சென்னை: மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன், தமிழ் எழுத்துலகில் தனித்த ஒரு இயக்கம் என்று நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் தெரிவித்து உள்ளார்.

    சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழின் மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் நலக் குறைவு காரணமாக சொந்த ஊரான புதுச்சேரிக்கே குடிபெயர்ந்தார். சில மாதங்களுக்கு முன் புதுவை அரசு பிரபஞ்சனுக்கு அவரது இலக்கிய பங்களிப்புக்கு பாராட்டுவிழா நடத்தி கவுரவித்தது.

    famous writer prapanchan passes away – nam tamilar seeman releases tribute

    57 ஆண்டுகாலமாக இலக்கிய பணிகள் ஆற்றிவந்த எழுத்தாளர் பிரபஞ்சன் சமீப காலமாக புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளானார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வந்தது. இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை அவர் மரணமடைந்தார்.

    பிரபஞ்சன் அவர்களின் மறைவையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், தமிழ் இலக்கிய ஆளுமையுமான மதிப்பிற்குரிய ஐயா பிரபஞ்சன் அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். அவரது இழப்பு தமிழ் எழுத்துலகிற்கும், தமிழ் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும்.

    தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு முறைமையை உருவாக்கி புகழ்வாய்ந்த எழுத்தாளராக வலம் வந்தவர் ஐயா பிரபஞ்சன் அவர்கள். புதுச்சேரியை பிறப்பிடமாக கொண்ட அவர் தஞ்சை கரந்தை கல்லூரியில் தமிழ் வித்துவான் பட்டம் பெற்றவர்.

    புதுச்சேரியின் வரலாற்றினை ஆங்கிலேய அதிகாரிகளிடம் அதிகாரியாக பணியாற்றிய ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பினை தழுவி அவர் எழுதிய வானம் வசப்படும் புதினம் உலகப்புகழ் வாய்ந்தது.

    இந்நூலுக்காக அவர் 1995ம் வருடம் சாகித்திய அகாடமி விருது பெற்றார். தனது நூல்களுக்காக தமிழக அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற ஐயா பிரபஞ்சன் அவர்கள் தமிழ் எழுத்துலகில் அசைக்க முடியாத ஆளுமையாக திகழ்ந்தார்.

    அவர் எழுதிய மானுடம் வெல்லும், மகாநதி சந்தியா, ஆண்களும் பெண்களும் போன்ற பல புதினங்களும், நேற்றைய மனிதர்கள், விட்டு விடுதலையாகி போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் தமிழ் எழுத்துலகிற்கு கிடைத்த மாபெரும் பரிசுகளாகவே நான் கருதுகிறேன்.

    பிரபஞ்சன் மறைவால் துயறுற்று இருக்கின்ற அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் எழுத்து உலகிற்கும் எனது ஆழ்ந்த அஞ்சலியையும் என் மனமார்ந்த ஆறுதலையும் தெரிவிக்கிறேன். மறைந்த தமிழ் எழுத்துலக மாமேதை பிரபஞ்சன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.

    English summary
    Seeman, Chief co coordinator of Naam Tamilar Katchi issued a statement on famous writer and novelist prabhanjans demise.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X