தமிழ் சினிமாவை காப்பாற்றிய தளபதி! மக்களை எப்போது காப்பாற்ற போறீங்க? அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்!
சென்னை : நடிகர் விஜய் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், தடுக்கி விழுந்த தமிழ் சினிமாவை காப்பாற்றினீர்கள் அண்ணா..! எப்போது தமிழக மக்களாகிய எங்களை காப்பாற்ற போகின்றீர்கள் அண்ணா என ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் விவாதத்தை கிளப்பியுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இளைய தளபதியாக இருந்து தளபதியாக மாறியுள்ள அவருக்குத்தான் தமிழகத்திலேயே அதிக ரசிகர்கள் உள்ளனர்.
அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வசூல் மன்னனாக மாறியுள்ள விஜய் அடுத்ததாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உருவாகி வரும் இந்த படத்தை பிரபல இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

நடிகர் விஜய்
இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். கரூர் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கரூர் மாநகராட்சி குமரன் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கினர். இதேபோல் பல்வேறு இடங்களில் விஜய் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

பிறந்தநாள் போஸ்டர்
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி சார்பில் நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் அரசியல் கட்சி தொடங்குகிறார் தளபதி விஜய்? இந்த நல்ல நாளில் கேட்கிறோம் அண்ணா எப்பொழுது இந்த நல்ல செய்தி எங்கள் காதுகளில் ஒலிக்கும் எனவும், தடுக்கி விழுந்த தமிழ் சினிமாவை காப்பாற்றினீர்கள் அண்ணா..!

அரசியலுக்கு அழைப்பு
எப்போது தமிழக மக்களாகிய எங்களை காப்பாற்ற போகின்றீர்கள் அண்ணா... உங்கள் அரசியல் வருகைக்காக காத்திருக்கிறோம் என போஸ்டர்களை ஒட்டி நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகே நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்கள் தரப்பில் கேள்விகள் எழுப்பட்டு வருகிறது.

விஜயின் திட்டம்
நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து நேரடியாக கருத்துக்களை தெரிவிக்கவிட்டாலும் அது தொடர்பாக நீண்ட ஆலோசனையில் இருக்கிறார். இதன் விளைவாகவே கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டனர். அதில் ஓரளவு கிடைத்த வெற்றி விஜய்யை உற்சாகத்தில் ஆழ்த்தி இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் அரசியல் வேண்டாம் என்றும், பிற்காலத்தில் வேண்டுமானால் நேரடி அரசியலில் இறங்கலாம் என திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதுவரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டுமே..
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications