Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பா ரிக்‌ஷா தொழிலாளி.. மகன் ஐடி கம்பெனி சிஇஓ.. யார் இந்த பிரகாஷ் பழனி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்பா ரிக்‌ஷா தொழிலாளி. அம்மா வீடு வீடாகச் சென்று வீட்டுவேலை செய்பவர். ஆனால் மகன் பல கோடிக்கு அதிபதி. என்ன? ஏதோ சினிமா படக் கதைபோல தெரிகிறதா? பலரது நிஜ வாழ்க்கை சினிமா கதையைவிட அதிரடி திருப்பங்களைக் கொண்டது. அப்படி ஒருவர்தான் பிரகாஷ் பழனி. கடந்த இரண்டு நாள்களாக இணைய உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பெயருக்குச் சொந்தக்காரர்.

இன்று பன்னாட்டு கம்பெனியான பி.சி.எஸ் -இன் நிறுவனர் மற்றும் சிஇஒ. சாதாரண சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு அரசுப் பள்ளியில் படித்த இவர், முறையாகக் கல்லூரி படிப்பை முடிக்காதவர். தனது சொந்த முயற்சியால் இன்று இந்த உயரத்தைத் தொட்டு இருக்கிறார்.

"குடும்ப தொழில் என்னவோ தறி அடிப்பதுதான். ஆனா 1993க்கு அப்புறம் அரசாங்கம் சைதாப்பேட்டையில் இயங்கி வந்த தறி பட்டறைகளை எல்லாம் மூட சொல்லிடுச்சு. அப்பாவுக்கு அடுத்து என்ன செய்வதுனு தெரியல. ஆகவே ரிக்‌ஷா ஓட்டப் போனார்.

அப்பா வீடுவீடாகப் போய் பத்துப்பாத்திரம் கழுவி அந்த வருமானத்துல எங்களைக் காப்பாத்துனாங்க. அப்பா கால்கள் முழுக்க ரிக்‌ஷா மிதிச்சு மிதிச்சு காப்புக் காய்ச்சிப் போய் இருக்கும்.

அம்மா கால்கள்

அம்மா கால்கள்

எந்நேரமும் தண்ணியிலயே நிற்பதால் அம்மா கால்கள் முழுக்க சொதசொதனு ஊறிப்போய் இருக்கும். என் சின்ன வயசு இலட்சியமே இவங்க ரெண்டு பேருக்கும் சீக்கிரமா இந்தக் கடின உழைப்பில் இருந்து ஓய்வு கொண்டுக்கணும் என்பதுதான்.

அந்தக் கனவை என் 23 வயசுலயே நிறைவேற்றி கொடுத்துட்டேன்" எனக் கூறும் பிரகாஷ் பழனி வசிப்பது நெதர்லாந்து. அங்கு இருந்து தனது கம்பெனியை நிர்வகிக்கிறார். மொத்தம் 160 ஊழியர்கள் உலகம் முழுக்க இருந்து பணி செய்கிறார்கள்.

இவரது கம்பெனியில் மேலாளர், உதவி மேலாளர் என்ற படிநிலை பதவிகள் இல்லை. இவரது அலுவலகம் flat structure என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இயங்குகிறது. அனைவருக்கும் சமமான பொறுப்பு என்பது இதன் அடிப்படை. ஆகவே ஒருவர் மேல், ஒருவர் கீழ் என்ற முறையை உடைத்து அதிலும் சாதித்திருக்கிறார் பிரகாஷ் பழனி.

 பத்தாவது டூ கோடீஸ்வரன்

பத்தாவது டூ கோடீஸ்வரன்

"பத்தாம் வகுப்புல நல்ல மார்க். 12-ம் வகுப்புல சுமாரான மார்க்தான். அதை முடிச்சதும் குடும்ப சூழலால் வேலைக்குப் போனேன். கல்யாண மண்டபத்தில் பந்திக்கு தண்ணீர் ஊற்றும் வேலை. அதன் பின் அண்ணன் வழிகாட்டுதலில் டேட்டா எண்ட்ரி வேலை. மாதம் 700 ரூபா சம்பளம். அங்கதான் கம்ப்யூட்டர் அறிமுகம். அந்த அனுபவத்துல அப்படியே ஃபோக்ஸ்புரோ படிக்கப் போனேன். படிக்க 500 வரை மாதம் செலவாகும். இரண்டு வருஷ படிப்பு. அவ்வளவு தொகையைச் செலவு செஞ்சு படிக்கணுமானு வீட்டில் பெரிய விவாதம்.

அப்படியே தொலைதூர கல்வியில் பி.எஸ்.சி., கணிதம் படிச்சேன்" என்கிறவர் எந்தக் கல்லூரி சான்றிதழும் இல்லாமல் திறமையை மட்டுமே வைத்து 'parry company' வரை சென்றுள்ளார். 'cognizant' இல் கூட அசோசியேட் மேனேஜர் வரை சென்றுள்ளார்.

சான்றிதழ் கேட்க கூடாது

சான்றிதழ் கேட்க கூடாது

அந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் போதே 'என் திறமையைப் பார்த்து வேலைக்கு எடுப்பதாக இருந்தால் வருகிறேன். படிச்ச சான்றிதழ்கள் கேட்கக்கூடாது' என கட்டுப்பாடு விதித்து நேர்காணலுக்குச் சென்றுள்ளார் இந்த ஜென்டில் மேன். "எங்க பி,சி.எஸ்.ல மொத்தம் 160 பேர் வேலை பார்க்குறாங்க. யாருடைய படிப்புச் சான்றிதழும் நாங்க பார்ப்பதில்லை. திறமை இருக்கா? கற்றுக் கொடுத்தா செய்வார்களா? என்று பார்த்து எடுக்கிறோம். கிட்டத்தட்ட 80 சதவீதமான ஊழியர்கள் அப்படித்தான். சாதாரண அரசுப் பள்ளியில் படித்தவர், வறுமையான பின்புலத்திலிருந்து வந்தவர், கல்லூரி போய் படிக்க வசதி இல்லாதவர் என்பவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் என்கிறார் பிரகாஷ் பழனி.

ஏன் நெதர்லாந்து?

ஏன் நெதர்லாந்து?

"இந்தியாவில் வசிப்பதுதான் என் ஆசை. ஆனால் எங்களின் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஐரோப்பாவில் இருக்கிறார்கள். ஆகவே அடிக்கடி கம்பெனி தேவைக்காக வெளிநாடு சென்றுவந்தால் என் பணம் பாதி அதற்கே செலவாகிடும். பயணத்தைக் குறைக்கவும், பணத்தைச் சேமிக்கவும் நான் வெளிநாட்டில் இருப்பது கட்டாயமாகிறது. மேலும் நாம் ஒரு கம்பெனிக்கு சி.இ.ஒ ஆக இருந்தாலும் சொந்த தேவைக்காக வாரத்தில் இரண்டு நாள்கள் வெளி கம்பெனியில் போய் வேலை செய்கிறேன். அதை வைத்து என் பணத்தேவையை ஈடு செய்கிறேன். இந்த விஷயங்கள் நான் இந்தியாவிலிருந்தால் ஈடேறாது" என்கிறார் மல்டி மில்லினியர் பிரகாஷ் பழனி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+