என் கண்ணீருக்கு ஆறுதலே மீரா ஆண்டனிதான்! தாயின் ட்வீட் வைரல்! அம்மா அழறாங்க இப்ப ஆறுதல் சொல்லும்மா
சென்னை: என் கண்ணீருக்கு ஆறுதலே நீ தான் என தனது மகளை உச்சி முகர்ந்த விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமாவின் பழைய ட்வீட் வைரலாகி வருகிறது. அப்படி ஆறுதலாக இருந்த மீரா இன்று பாத்திமாவை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது வேதனையை அளிக்கிறது.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி பாத்திமா, மகள்கள் மீரா, லாரா ஆகியோர் உள்ளனர். இதில் மீரா சென்னை சர்ச் பார்க் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்டு காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் மகளின் உடலை கையெழுத்திட்டு தந்தை விஜய் ஆண்டனி பெற்றுக் கொண்டார். தனது மகளின் உடலை பார்த்து விஜய் ஆண்டனி கண்ணீர் விட்டார். இதையடுத்து அவருடைய உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் டிடிகே சாலையில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு சில மணி நேரங்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மீராவின் அறையில் தற்கொலைக்கான கடிதம் ஏதேனும் இருக்கிறதா என்றும் அவருடைய செல்போன் பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த இறப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நடிகர் சந்தானம் முதல் ஆளாக விஜய் ஆண்டனி வீட்டிற்கு வந்திருந்தார்.

இதையடுத்து விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர், குஷ்பு, பாரதிராஜா, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நேரில் சென்றுள்ளனர். அது போல் மீராவுடன் படித்த மாணவிகள், பள்ளி முதல்வர், வகுப்பு ஆசிரியர்கள் என கண்ணீருடன் வந்தவண்ணம் இருக்கிறார்கள். அவர்கள் கூறுகையில் மீரா படிப்பில் சுட்டி, எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். நன்கு இறகு பந்து விளையாடக் கூடியவர்.
இப்படிப்பட்ட மாணவி எதனால் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை என்றனர். இந்த நிலையில் மீரா தனது பள்ளி விழாவில் பரிசு வாங்கிய போது அதை அறிந்து உச்சி முகர்ந்து தாய் பாத்திமா போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது. அதில் பாத்திமா தனது மகள் பரிசு வாங்கிய புகைப்படத்தை போட்டுள்ளார்.

பாத்திமா அந்த ட்வீட்டில் கூறியிருப்பதாவது: என் வலிமைக்கு பின்னால் இருக்கும் சக்தி. என் கண்ணீருக்கு ஆறுதல் தரும் சக்தி, சில நேரங்களில் சுட்டித்தனத்தால் நான் கோபமாகவும் காரணமானவர், என் தங்கக்கட்டி, செல்லக் குட்டி, மீரா விஜய் ஆண்டனி, வாழ்த்துகள் பேபி என குறிப்பிட்டுள்ளார். தனது கண்ணீருக்கு ஆறுதல் என கூறியிருந்த நிலையில் தற்போது மகளின் உடலை பார்த்து பாத்திமா அழுதுக் கொண்டிருக்கிறார். ஆனால் ஆறுதல் சொல்லத்தான் மீரா உயிருடன் இல்லை.
புத்திர சோகத்தால் அந்த தாயும், தந்தையும் குடும்பத்தினரும் கண்ணீர் விடும் காட்சிகளை பார்த்தால் இதயமே நொறுங்குவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இனி இந்த செல்லக் குட்டியை எப்போதுதான் பார்க்க போகிறார்களோ!












Click it and Unblock the Notifications