என்ன ரெங்கா நியாயமா இது? கட்டணக் கொள்ளையில் எஃப்எல்-2 பார்கள்! ’கட்டிங்’கால் கண்டுக்காத அதிகாரிகள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் நடைபெறும் முறைகேடுகளை கிட்டத்தட்ட கட்டுப்படுத்தி விட்டதாக சொல்லி வருகிறார் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ். மறுபுறம் தனியார் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் செயல்பட்டு வரும் எஃப்எல்-2 பார்களில் பகல் கொள்ளை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு பாட்டிலுக்கு 50 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் சொல்கின்றனர் குடிகாரர்கள். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி உறுப்பினர் அல்லாதவருக்கு மதுவிற்கப்படுவதோடு, தேசிய நெடுஞ்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளி கல்லூரிகளுக்கு அருகே எஃப்எல்-2 பார்கள் செயல்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சகத்தின் கீழ் 4000 மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டு முறைகேடாக துறை சார் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் சென்றதாக குற்றச்சாட்டு இருந்தது.

FL2 Bars Tamil Nadu Liquor Sales TASMAC

இந்நிலையில், 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் மதுவிலக்குத்துறை அமைச்சராக விக்னேஷ் பொறுப்பேற்றிருக்கிறார். டாஸ்மாக்கில் பல ஓட்டைகள் இருப்பதற்காகவும் அதனை அடைப்பதற்கான முயற்சிகளை ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

டாஸ்மாக் கடைகளுக்கு பராமரிப்புச் செலவு, ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, தீபாவளி முன்பணம் என பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கொடுத்து திரும்பப்பெறும் திட்டத்திற்காக அதனை எம்ஆர்பி விலையிலேயே சேர்த்து விடப்பட்டுள்ளது. இப்படி டாஸ்மாக் ஊழியர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி வரும் நிலையில் மறுபுறம் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் செயல்பட்டு வரும் எஃப்எல்-2 பார்க கட்டண கொள்ளை அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

மேலும் கடந்த ஆட்சிக்காலத்தில் முறைகேடாக நூற்றுக்கணக்கான எஃப்எல்-2 பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பொதுவாக மணமகிழ் மன்றங்களில் இருக்கும் உறுப்பினர்களில் 50 பேர் தாங்கள் மது அருந்த விரும்புவதாக கூறினால் எஃப்எல்-2 பார்களை திறக்கலாம்.

அந்த மணமையில் மன்றம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வர வேண்டும் என்பது விதி. ஆனால் அவசர அவசரமாக பல்வேறு இடங்களில் முறைகேடான ஆவணங்களை பயன்படுத்தி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் எம்ஆர்பி விலையை விட குறிப்பிட்ட அளவு தான் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற விதியை மீறி 40லிருந்து 50 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கின்றனர்.

அதற்கும் தண்ணீர் பாட்டில் கண்ணாடி கிளாஸ் மற்றும் ஸ்னாக்ஸ் வழங்க வேண்டும். கிராமப்புறப் பகுதிகளில் இது போன்ற விதிமுறைகள் ஓரளவு கடைபிடிக்கப்படும் நிலையில் நகர் பகுதிகளில் இயங்கும் எஃப்எல்-2 பார்களில் இந்த விதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் உறுப்பினர்களுக்கு மட்டுமே மது வழங்க வேண்டும் என்ற விதியை மீறி வருவோர் போவதற்கெல்லாம் டாஸ்மாக் கடைகளை விட அதிக அளவு மது விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வாங்கும் மது பாட்டில்களுக்கு பில் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக டாஸ்மாக்கில் 150 ரூபாய்க்கு விற்கப்படும் மதுபானங்கள், இங்கு 190 ரூபாய் வரை விற்கப்படுகிறது என புலம்புகின்றனர் குடிகாரர்கள். அதுமட்டுமல்லாமல் பிரீமியம் வகை மதுபானங்கள் கிட்டத்தட்ட 200 ரூபாய் அளவுக்கு கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

டாஸ்மாக் கடைகளில் 140 ரூபாய்க்கு விற்கப்படும் BLACK PEARL BRANDY, OLD SECRET XXX RUM, HONIEY DAY BRANDY, OLD MONK DELUX RUM, TOP STAR SPECIAL BRANDY உள்ளிட்ட சாதாரண ரக மதுபானங்கள் எப்-எல்-2 பார்களில் 190 வரை விற்கின்றன.

MAGNUS CHOICE VSOP BRANDY, POWER VODKA, TRIPLE CROWN VSOP BRANDY, SNJ NO.1 SUPER STRONG உள்ளிட்டவை மீடியம் ரக மதுபானங்கள்கள் டாஸ்மாக்கில் ரூ.180க்கு விற்கப்படும் நிலையில், எஃப்எல்-2 பார்களில் 240 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

பிரீமியம் ரக மதுபானங்களான EL CANSO DARK RUM, OLD MONK PREMIUM XXX RUM, BRITISH EMPIRE, BACARDI CLASSIC SUPERIOR RUM, MORPHEUS BLUE XO BRANDY, உயர்ரக மதுபானங்களான KONIGGEN PREMIUM FRENCH BRANDY, HENRY X SPECIAL RESERVE BRANDY XO ஆகியவற்றின் விலை எம்ஆர்பியை விட 200 ரூபாய் வரை கூட அதிகமாக விற்கப்படுகிவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போகிற போக்கைப் பார்த்தால், டாஸ்மாக்கை மூடி விட்டு எஃப்எல்-2 பார்கள் மூலமே மது விற்பனையை நடத்திக் கொள்ளலாம் என அரசு நினைக்கிறதா என தெரியவில்லை என்று கூறுகின்றனர் குடிகாரர்கள். முறைகேடு எங்கு நடந்தாலும் முறைகேடுகள் தான் அதை தட்டிக் கேட்க வேண்டியது தான் அரசின் கடமை என்றும் சுட்டிக் காட்டுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+