Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Flashback 2022: எதிரிகளை வெல்ல யாகம் நடத்தி அரசியல் பயணத்தை ஆரம்பித்த சசிகலா..மறக்கமுடியாத 2022

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா என்ற பெயர் தமிழக அரசியலில் பல ஆண்டு காலமாகவே பேசப்படும் பெயராக உள்ளது. ஜெயலலிதாவின் நிழலாக வலம் வந்த சசிகலா அவரது மறைவிற்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக முதல்வராக ஆசைப்பட்டார். அந்த ஆசை பாதியிலேயே நிராசையாகிப் போனது சிறைக்கு சென்று நான்கு ஆண்டுகள் கழித்து வந்த சசிகலா அவரது ஆதரவாளர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். கடந்த ஆண்டு பெரிய அளவில் எதுவும் செய்யலாம் அமைதி காத்த சசிகலா 2022ஆம் ஆண்டில் ஆன்மீக பயணத்தில் ஆரம்பித்து அரசியல் பயணத்தில் முடித்தார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கண்ணீர் மல்க உறுதி மொழி எடுத்துக்கொண்டார். சசிகலா பற்றிய நினைவுகளை அவர் 2022ஆம் ஆண்டு என்ன செய்தார் என்பதையும் சற்றே திரும்பிப்பார்க்கலாம்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா, தனது ஆதரவாளர்களைச் சந்திப்பது, ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொள்வது, அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் அறிக்கை விடுவது என தொடர்ந்து ஆக்டிவ் அரசியலில் ஈடுபட முயற்சி செய்தார்.

Flashback 2022: Sasikala from Spritual journey to Political Journey 2022 year ender

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிராக சென்னை உரிமையில் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கிலும் அவருக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் ஆன்மீக பயணத்தை முடித்துக்கொண்டு அரசியல் பயணத்தை தொடங்கப்போவதாக கூறினார். அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக விரைவில் மேல்முறையீடு செய்வேன் என்றும் கூறினார்.

திருச்செந்தூரில் மகா யாகம் செய்த சசிகலா தனது ஆன்மீக பயணத்தை ஆரம்பித்தார். கட்சிக்காரர்களை சந்தித்தார். நான் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தார்களோ, நிச்சயமாக அதே மாதிரி எந்த குறையும் இல்லாமல் ஆட்சி செய்வேன் என்று திருச்செந்தூரில் கூறினார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலாவிடம், உங்களுடைய அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணி கட்சியுடனா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சசிகலா, "இங்கு தான் இருக்கிறீர்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறி சஸ்பென்ஸ் வைத்தார்.

மே மாதத்தில் தஞ்சாவூரில் நிகழ்ந்த திருமண விழாவில் பேசிய நம் கழகத்தைக் மீண்டும் வலிமையான இயக்கமாக மாற்றிட உகந்த நேரம் வந்துவிட்டது. அனைவரையும் ஒருங்கிணைந்து ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தன்னிகரில்லா பேரியக்கமாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த வேளையில் அனைவரும் ஒரே புள்ளியில் பயணித்து பொறுமை காப்பது நம் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். பொறுமையை கடைபிடித்தால் கண்டிப்பாக புகழ் வந்து சேரும் என்று கூறி குரங்கு கதையை கூறினார். குரங்கு ஒன்று மாங்கொட்டையை மண்ணில் புதைத்தால், இஷ்டம்போல் மாம்பழம் திங்கலாம் என்று எண்ணி மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றியது. ஆனால் தினம், தினம் அந்த மாங்கொட்டையை குரங்கு எடுத்துப் பார்த்தது. இதனால் செடி வளரவே இல்லை. இதனால் வெறுத்துப்போன குரங்கு மாங்கொட்டையை தூக்கி எறிந்து விட்டது. குரங்கின் ஆசை நியாயமானது. ஆனால் அதன் அவசர புத்தி நியாயமற்றது. எனவே நாம் செயல்கள் வெற்றி பெற வேண்டுமென்றால், பொறுமையுடன், தேவையான முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

ஜூன் மாதத்தில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய நிலையில் சசிகலா திடீரென தனது அரசியல் சுற்றுப் பயணத்தை அறிவித்தார். தி.நகரில் உள்ள தனது இல்லத்திலிருந்து சசிகலா தனது பயணத்தைத் தொடங்கினர். பல மாவட்டங்களுக்கு சென்று வரிசையாக தொண்டர்களை சந்தித்தார். ஆனால் பெரிய அளவில் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும் சோர்வடையவில்லை சசிகலா.

சசிகலாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் அவருக்கு ஆதரவாக வாக்குமூலம் கொடுத்து ஆறுதலை கொடுத்தார். அதிமுகவில் இணைந்து செயல்படலாம் என சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுத்தார் ஓ.பன்னீர் செல்வம். ட்விட்டரில் கடந்த செப்டம்பர் மாதம் ஒற்றைச்சொல் ட்வீட் ஆனது. சசிகலா தனது பங்குங்கு சசிகலா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், ஒற்றுமை என ட்வீட் செய்தார்.

ஆறுமுகசாமி ஆணையம் அரசிடம் சமர்பித்த அறிக்கையில்,ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக சசிகலா, விஜயபாஸ்கர், ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடத்த பரிந்துரைத்துள்ளது. அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத சசிகலா, "நியாயம் தோற்காது, உண்மைக்கு என்றும் வலிமை அதிகம். அதைவிட என் அக்கா, நம் இதயதெய்வம் அம்மா அவர்கள் என் அருகிலேயே இருந்து நடப்பவை எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார் என தெரிவித்துள்ளார். என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்று என் மீது பழிபோடுவது எனக்கு ஒன்றும் புதிது இல்லை என்று கூறிய அவர், என்றைக்கு நான் அம்மா அவர்களின் கரத்தை பிடித்தேனோ அன்றே ஆரம்பமானது இந்த பழிபோடும் படலம் என தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைந்த நாளில் நினைவிடத்திற்கு பேரணியாக வந்த சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.தமிழக மக்களுக்கு தேவையானதை கேட்டு பெறும் அளவுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் என்னிடம் உள்ளது. தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதால் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில், நாடாளுமன்ற தேர்தலில் வென்று காட்டுவோம். "ஒன்றிணைவோம்! ஒன்றிணைவோம்! ஒட்டுமொத்த நம் தொண்டர்களின் விருப்பத்தை ஈடேற்ற ஒன்றிணைவோம்! ஒன்றிணைவோம்! காத்திடுவோம்! காத்திடுவோம்! தீயசக்திகளிடமிருந்து தமிழக மக்களை காத்திடுவோம்! காத்திடுவோம் என உறுதிமொழி ஏற்றார்.

எம்.ஜி.ஆரின் கொள்கைகளை மனதில் வைத்து, அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணிக்க அவரது 35வது ஆண்டு நினைவுநாளில் சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தொண்டர்களுடன் இணைந்து மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க உள்ளோம். எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தங்களான அன்பு உடன்பிறப்புகளும், அவரது வழியில் பயணிக்கும் தொண்டர்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் சசிகலா. அரசியலில் அதிரடியை கிளப்புவார் என்று அவரது ஆதரவாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சசிகலா இந்த ஆண்டும் ஏமாற்றத்தையை கொடுத்தார். வரும் ஆண்டிலாவது அதிமுகவை கைப்பற்றுவாரா? புதிய கட்சியை தொடங்குவாரா பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+