Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Flashback: நீட்டில் 420 - புகழ் கிடைத்தும்; சீட் கிடைக்கல! உக்ரைனில் சிக்கிய அருள்செல்வி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலை காலில் விழுந்த மாணவி நீட் தேர்வில் 104 மதிப்பெண் மட்டுமே பெற்று தேர்ச்சியடைந்ததாக கூறியுள்ள நிலையில், 420 மதிப்பெண் எடுத்தும் சீட் கிடைக்கவில்லை என அருள்செல்வி என்ற அரசுப் பள்ளி மாணவி பேசியது தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

மருத்துவப் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக, நீட் என்ற நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. மே 6 ஆம் தேதியுடன் தேர்வுக்காக விண்ணப்பம் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 1.32 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி பிற்பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.

 காலில் விழுந்த மாணவி

காலில் விழுந்த மாணவி

இந்த நிலையில் நேற்று நீட் தேர்வில் 104 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவர் தமிழ்நாடு பாஜக அண்ணாமலையிடம் மருத்துவப் படிப்பு செலவுக்கு உதவி கேட்க சென்றிருந்தார். அப்போது அண்ணாமலை காலில் மாணவி விழுவதற்கு முன் அவரை பார்த்து பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி, சைகை காட்டினார். அதன் பின்னர் அவர் அண்ணாமலை காலில் விழுந்தார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் விமர்சனங்களை பதிவு செய்து வந்தனர்.

செந்தில்குமார் ட்வீட்

செந்தில்குமார் ட்வீட்

இந்த நிலையில் தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார், 104 மதிப்பெண் பெற்றவரால் மருத்துவக் கல்லூரியில் பணம் செலுத்தி சீட் பெறுவது மட்டுமே ஒரே வழி. ஒரு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ரூ.16-20 லட்சம். படிப்பை நிறைவு செய்ய ரூ.80 லட்சம் முதல் 1 கோடி வரை செலவாகும். புத்தகங்கள், விடுதி கட்டணத்தையும் சேர்க்கலாம். எல்லாவற்றையும் தாண்டி 40% சதவீதம் வரி செலுத்த வேண்டும். இதற்காக பாஜக மசோதாவை நிறைவேற்றுமா என்று பார்ப்போம்." என்று பதிவிட்டுள்ளார்.

மாணவி அருள்செல்வி

மாணவி அருள்செல்வி

இந்த நிலையில் விஜய் டிவியில் நீட் தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியின் காணொலி தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த சமயத்தில் அருள்செல்வி என்ற ஹோட்டல் காவலாளியின் மகள் நீட் தேர்வில் 420 மதிப்பெண் பெற்று வெற்றிபெற்றதை பலரும் பாராட்டினர். நீட் ஆதரவாளர்கள், யார் வேண்டுமானாலும் இதில் வெற்றிபெறலாம் என்று பேசினர்.

நீயா நானா நிகழ்ச்சி

நீயா நானா நிகழ்ச்சி

இந்த நிலையில் நீயா நானா நிகழ்ச்சியில் பேசிய மாணவி அருள்செல்வி தான் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தும் மருத்துவ சீட் கிடைக்கவில்லை என்று கூறினார். அப்போது நெறியாளர் கோபிநாத், "உங்கள் வெற்றியை நாங்கள் கொண்டாடினோம். ஆனால் நீங்கள் டாக்டராகவில்லை என்பதுதான் அதிர்ச்சியாக உள்ளது." என்று தெரிவித்தார்.

மாணவி வேதனை

மாணவி வேதனை

இதற்கு பதிலளித்த மாணவி அருள்செல்வி, "அந்த பெயர் புகழ் மூலம் என் வாழ்கையில் எதுவும் நடக்கவில்லை. நான் 3 முறை தேர்வெழுதியும் எனக்கு சீட் கிடைக்கவில்லை. நான் டாக்டரில்லை. அதனால் உக்ரைனில் படிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நான் 12 ஆம் வகுப்பு 1120 மதிப்பெண்களையும் நீட் தேர்வில் 420 மதிப்பெண்களையும் பெற்றுள்ளேன்." என்றார்.

 உக்ரைன் போர்

உக்ரைன் போர்

அப்போது அங்கிருந்த நீட் ஆதரவாளர்களிடம், "நீட் தேர்வில் பாஸ் ஆனால் டாக்டராகலாம் என்று சொன்னீர்கள். இந்த மாணவி 3 முறை நீட் தேர்வெழுதியும் பாஸ். நீட் தேர்வில் பாஸ் ஆகியும் இந்த மாணவியால் டாக்டராக முடியவில்லை." என்று கேட்பார். இந்த மாணவி பின்னர் உக்ரைனில் சீட் கிடைத்து அங்கு மருத்துவம் படித்த நேரத்தில்தான் ரஷியா தாக்குதல் நடத்தி வருவதாக மற்றொரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+